அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 சசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க.,  உடையும்!:தனி அணியாக செயல்பட்டு தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு  :நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஆட்சியை கவிழ்க்க திட்டம் :வாய்ப்பை சாதகமாக்க மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

முதல்வராக சசிகலாவை விரும்பாத, 40 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் தனி அணியாக செயல்பட்டு, திமு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர். 'இந்த வாய்ப்பை சாதகமாக்கி, நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னரிடம் அனுமதி கேட்க தயாரா வோம்' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 சசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க.,  உடையும்!:தனி அணியாக செயல்பட்டு தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு  :நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஆட்சியை கவிழ்க்க திட்டம் :வாய்ப்பை சாதகமாக்க மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

ஜெயலலிதா மறைவை அடுத்து, பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். எளிமையான முதல்வராக, மக்கள் விரும்பும் வகையில், செயல்பட்டு வந்தார். அவரே, முதல்வராக தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் இருந்தது.

பன்னீருக்கு நற்பெயர் கிடைப்பதை விரும்பாத சசிகலா, முதல்வராக துடித்தார். முதல்வரை மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்றதோடு, எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை குழு தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.இதை தொடர்ந்து, முதல்வர் பதவியை, பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். சொந்த காரணத் துக்கான பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அன்புமணி கோரிக்கை


'சசிகலா மீதான, சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது. அது வரை, அவருக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது' என, பா.ம.க., முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி,

கவர் னருக்கு கோரிக்கை வைத்துள்ளார். முன்னாள் அமைச்சர் நேருவின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க, திருச்சி சென்ற, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், 'விரைவில், தி.மு.க., ஆட்சி அமைக்கும்' என, கூறியுள்ளார்.

பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர் களும், சசிகலா, முதல்வராக பதவி ஏற்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர உள்ளதையும், இதை காரணம் காட்டி, 'இப்போதைக்கு முதல் வர் பதவிஏற்க வேண்டாம்' என, சசிகலாவுக்கு, கவர்னர் அறிவுறுத்த வாய்ப்புள்ளது.அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், தி.மு.க., ஆட்சி அமைக்க தயார் என்றும், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, கவர்னரிடம் வழங்க, தி.மு.க., தயாராகி உள்ளது.

தி.மு.க., திட்டம்


தி.மு.க., தலைமை திட்டப்படி, மாவட்ட வாரி யாக, எம்.எல்.ஏ.,க் களை இழுக்கும் பொறுப்பு, முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு, சாத்துார் ராமச்சந்திரன்; வட மாவட்டங்களுக்கு, எ.வ. வேலு; மேற்கு மாவட்டங்களுக்கு, பொங்கலுார் பழனிசாமி, முத்துசாமி, என்.கே.கே.பெரியசாமி, என்.கே.கே.பி.ராஜா;சென்னை மாவட்டங் களுக்கு, மா.சுப்பிரமணியன்; டெல்டா மாவட் டங்களுக்கு, நேரு, டி.ஆர்.பாலுபோன்றோருக்கு, இந்த பொறுப்பு தரப்பட்டுள்ளது.

கட்சியின் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வானதும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களிடம், தி.மு.க., துாதர்கள் நடத்திய பேச்சில், 38 பேர், வெளியில் இருந்து தி.மு.க.,வுக்கு ஆதரவு தரமுன் வந்துள்ளனர்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை வளைத்தால்

Advertisement

மட்டும் போதாது, மத்திய அரசின் முழு ஆதரவும் தேவை என்பதை, தி.மு.க., நன்கு உணர்ந்துள்ளது. இதையடுத்து, மும்பையைச் சேர்ந்த, பா.ஜ., தலைவர் ஒருவரிடம், மத்திய அரசிடம், 'கிரீன் சிக்னல்' பெற்றுத் தர வேண்டும் என, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், ரகசிய பேச்சு நடத்தி முடித்துள்ளார்.

ஆளுங்கட்சியை உடைக்கும் வேலை வெற்றி கரமாக முடிந்தால், மத்திய அரசு ஆதரவுடன், தி.மு.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. தனித்து ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை.

அதில், தற்போது, தி.மு.க.,விடம், 89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கூட்டணி கட்சி யான, காங்கிரஸ் கட்சியில், எட்டு எம்.எல்.ஏ.,க் கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியி டம், ஒரு எம்.எல்.ஏ.,வும், உள்ளனர்.

எனவே, ஆட்சி அமைக்க இன்னும், 20 பேர் மட் டும் தேவை. அதை, எளிதாக பெற்று விடலாம் என்று, தி.மு.க., கணக்கு போட்டு, களத்தில் குதித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'மர்மம் அம்பலமாகும்'


சென்னை விமான நிலையத்தில், ஸ்டாலின் அளித்த பேட்டி:

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை; அவரது மரணம், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வர் அலுவலக செயலர் வெங்கட ரமணன் ஆகியோர் பதவி விலகியது, சட்டசபை கட்சி தலைவராக சசிகலா தேர் வானது என, அனைத்துமே மர்மமாகவே உள்ளது. இந்த மர்மங்கள் எல்லாம், விரைவில் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

- நமது நிருபர் குழு -


Advertisement

வாசகர் கருத்து (247)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-பிப்-201714:35:28 IST Report Abuse

மலரின் மகள்தீர்ப்பை வாசிப்பதற்கு மாதக் கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்தையும் முடித்து விட்டு சிந்து பாத் கதையாக இழு இழு என்று இழுத்துக் கொண்டே போவது ஏன்?. இது ஒரு விதத்தில் அநீதி என்று கூறத்தக்கதாகுமா? ஒரு முடிவை அறிவிக்க காலதாமதம் படுத்துவதால் தொடர் வினையாக எத்தனையோ நடக்கின்றன. இது தவறு என்று தான் என்னத் தோன்றும். விதி என்பதா?

Rate this:
Chandramani.N - Virudunagar  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-201722:50:52 IST Report Abuse

Chandramani.Nபன்னீர் அன்ணன் தான் முதல்வராக வர வேண்டும்

Rate this:
m.viswanathan - chennai,இந்தியா
07-பிப்-201721:41:48 IST Report Abuse

m.viswanathanஇது போன்ற தலைமை தான் தமிழனுக்கு தேவை , நமக்கு வாய்த்த அடிமைகள் , திறம்பட நம்மை வாழ வைத்து கொண்டே இருப்பார்கள் என்ற அசத்திய நம்பிக்கையை அல்லவா விதைத்து விட்டு போய் விட்டனர்

Rate this:
மேலும் 244 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X