சொத்து வழக்கில் சசி கூட்டம் தப்பிக்குமா? | சொத்து வழக்கில் சசி கூட்டம் தப்பிக்குமா?:அடுத்த வாரத்தில் தீர்ப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சொத்து வழக்கில் சசி கூட்டம் தப்பிக்குமா?:
அடுத்த வாரத்தில் தீர்ப்பு

'மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா அவரது தோழி, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, அடுத்த வாரம் அளிக்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக் கின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என, தற்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

 சொத்து வழக்கில் சசி கூட்டம் தப்பிக்குமா?:அடுத்த வாரத்தில் தீர்ப்பு

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு நடந்து வருகிறது.

ஒத்திவைப்பு


இந்த வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி, ஜான் மைக்கேல் டி குன்ஹா, 2014, செப்., 27ல், தீர்ப்பு அளித்தார். பரபரப்பான அந்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்டோரை குற்றவாளிகள் என அறிவித்து, தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், கடும்

அபராதமும் விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து, தொட ரப்பட்ட வழக்கில், பெங்களூரு ஐகோர்ட் நீதிபதி, குமாரசாமி, 2015, மே,11ல்அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து, கர்நாடக அரசு உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். ஜெயல லிதா, சசிகலா உள்ளிட் டோர் மீதான, இந்த சொத்து குவிப்பு வழக்கு, 21 ஆண்டுக ளாக பல்வேறு கோர்ட் களில் நடந்து,

தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்திருக் கிறது. நீதிபதிகள், பினாகி சந்திர கோஷ்,அமிதவராய் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை, 2016, ஜூன், 7ல், ஒத்தி வைத்தது.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் மரணம், தமிழ கத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க சசிகலா தயாராகி வருவது போன்ற சம்பவங்கள் நடந்துள் ளன. இந்த நிலையில், ''இந்த வழக்கில் தீர்ப்பு எப்போது அளிக்கப்படும்,'' என, நீதிபதி பினாகி சந்திர கோஷ் தலைமையிலான அமர்வை, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நேற்று கேட்டார்.

'அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது; ஒரு வாரம் காத்திருங்கள்' என, தேதி எதையும் குறிப் பிடாமல், அமர்வு பதிலளித்துள்ளது; இது, தமிழகத் தில் மிகப் பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில், சசி மற்றும் அவரது உறவினர்கள் மீதான தீர்ப்பு எப்படி இருக்கும் என,

Advertisement

பரவலாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.

சசி பதவியேற்க கூடாது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப் படும் வரை, தமிழக முதல்வராக, சசிகலா பதவியேற் பதற்கு தடை விதிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.இது தொடர்பாக, சட்ட பஞ்சாயத்து இயக்கம் என்ற அரசு சாரா அமைப்பின் சார்பில், அதன் பொதுச் செயலர் செந்தில்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சொத்துக் குவிப்பு வழக்கில், ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், சசிகலா முதல்வராக பதவியேற்று, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டால், பதவியை இழக்க நேரிடும். இதனால், தமிழகத் தில் வன்முறை சம்பவங்கள் நடக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கெனவே, புயல், செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம், முன்னாள் முதல்வர், ஜெயலலிதா வின் மரணம் என, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள தமிழக மக்கள், இதை தாங்க மாட்டார்கள்.இந்த வழக்கில் மத்திய அரசின் தலையீடு உள்ளதாகவும் புரளி பரப்பி விடப் பட்டுள்ளது. கோர்ட்டின் மாண்பை காக்கும் வகையில், முதல்வராக சசிகலா பதவியேற் பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-பிப்-201719:11:56 IST Report Abuse

ARUN.POINT.BLANKalready common man dont like judicial system for its partiality! If in thia case also adhigara pasi kala wins, and 1000% people will start disliking it.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
07-பிப்-201718:40:11 IST Report Abuse

Balajiஇந்த வழக்கின் முடிவு ஏற்கனவே தெரிந்த கதை தான்....... முதல் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டவர் உயிருடன் இல்லையென்றால் வழக்கை கைவிடுவதாக நீதிமன்றம் அறிவிக்கும் என்று சசி தரப்பு நம்புவதால் தான் எப்படியாவது பதவியில் அமர்ந்துவிட முயற்சிக்கிறாரோ என்று தெரிகிறது...... நியாயமாக தீர்ப்பு வந்தால் நன்றாக இருக்கும்...... மறைந்த ஜெ வுக்கு களங்கம் (இதற்கு ஜெ உதைத்தமி என்று அர்த்தமில்லை....... ஜெ வின் இந்த சருக்களுக்கெல்லாம் காரணகர்த்தாவே சதிகாரிதான் என்பது தான் எனது ஆதங்கம்) ஏற்படும் என்பது இருந்தாலும் தற்போது தமிழகத்தை பிடித்துள்ள சனியனுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும்.........

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
07-பிப்-201718:04:28 IST Report Abuse

narayanan iyerAll politician has to say that they are faith with Indian Law & justices . So the judge got very cool and delivering the judgments favoring to them. They immediately will say the thanks to the judge and say the law has done good thing for them. This is what we are getting from Indian law.

Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X