ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு : தமிழக இளைஞன் சிக்கினான்| Dinamalar

ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு : தமிழக இளைஞன் சிக்கினான்

Added : பிப் 06, 2017
Advertisement

ஜெய்ப்பூர்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவனிடம், ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு, எஸ்.பி., விகாஸ் குமார், ஜெய்ப்பூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்.,சுக்கு, இந்தியாவில் ஆதரவு திரட்டிய பயங்கரவாதி, ஜமீல் அஹமது, கடந்தாண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடந்த விசாரணையில், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பாலுக்கு, 35, ஐ.எஸ்., அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ளது தெரிய வந்தது. இக்பாலிடம் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவன் மீது, டி.ஆர்.ஐ., எனப்படும் வருவாய் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, இக்பாலை, ஜெய்ப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்த, பயங்கரவாத தடுப்புப் பிரிவு திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X