அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிடி' விற்றவரெல்லாம் முதல்வராக வர முடியாது

Added : பிப் 07, 2017 | கருத்துகள் (37)
Advertisement
'சிடி' விற்றவரெல்லாம் முதல்வராக வர முடியாது

பொள்ளாச்சி: ''ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்த இடத்தில், 'சிடி' விற்றவர் எல்லாம் முதல்வராக வர முடியாது,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.
கோவை மாவட்டம், நெகமத்தில் அவர் அளித்த பேட்டி: வீட்டில் நல்லது நடக்கும் போது எண்ணெய் கொட்டி விட்டால், அதை அபசகுனம் என, சொல்லி புலம்புகிறோம். இப்போது, சென்னையில், கடல் பரப்பில் எண்ணெய் மிதக்கிறதே; என்ன நடக்கப் போகுதோ? முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, மாற்ற வேண்டிய அவசியம், இப்போது ஏற்படவில்லை. ஆந்திராவில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார்; டில்லி சென்று, பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுத்தார். அப்படி இருக்கும் போது, அவரை மாற்றுவதற்கு இப்போது அவசரம் என்ன?ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்த இடத்தில், 'சிடி' விற்றவர்கள் எல்லாம் முதல்வராக வர முடியாது. சசிகலா, தனக்கு தானே முதல்வராக பதவி ஏற்றுக் கொள்ள இருக்கிறார்; தொண்டர்கள், பொதுமக்கள் ஏற்று கொள்ள மாட்டர். பணம், பலம் காட்டினாலும், உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வியை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jambukalyan - Chennai,இந்தியா
07-பிப்-201722:16:45 IST Report Abuse
jambukalyan இளங்கோவனுக்கு எதுவுமே தெரியாது என்று நினைக்கிறேன் -
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
07-பிப்-201719:07:19 IST Report Abuse
raja தமிழ்நாட்டில் மக்கள் முன் நடிக்க தெரிய வேண்டும். கொள்ளை அடிக்க தெரியவேண்டும். இரண்டும் அன்னாரிடம் இருப்பதாக தான் தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா
07-பிப்-201717:37:05 IST Report Abuse
Venkatesh Srinivasa Raghavan ஆமாம். CD வித்தவங்கள்லாம் தமிழ்நாட்டு முதல்வர் ஆக கூடாது. கடந்த 50 வருஷமா அதுக்குன்னு ஒரு தகுதி வெட்ச்சாச்சு தமிழ்நாட்டுல. திருட்டு ரயில் ஏறி வந்தவன், பொம்பள பொறுக்கி, சினிமா பிரபலம் மூலமா ஊரை ஏமாத்தினவன், இவங்களுக்குதான் அதுக்கான தகுதி இருக்கு. PM ஆகறதுக்கு தகுதினா வெளிநாட்டுகாரனா இருக்கனும். மத்தபடி ஒழுங்கா படிச்சுட்டு, யோகியாம வாழறவன்லாம் வர கூடாது. அப்புறம் அரசியலும் நாடும் கெட்டு போயிரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X