அசாம் சட்டசபை விவாதத்தை ஒளிபரப்பிய எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்'

Updated : பிப் 07, 2017 | Added : பிப் 07, 2017 | கருத்துகள் (17)
Advertisement
அசாம் சட்டசபை விவாதத்தை ஒளிபரப்பிய எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்'

கவுகாத்தி : சட்டசபையில் நடந்த விவாதத்தை, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், நேரடியாக ஒளிபரப்பிய, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த, ஏ.ஐ.யு.டி.எப்., கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,வான, அமினுல் இஸ்லாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


நேரடி ஒளிபரப்பு:

அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபை கூட்டத்தில், தான் பங்கேற்ற விவாதத்தை, ஏ.ஐ.டி.யு.எப்., - எனப்படும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,வான அமினுல் இஸ்லாம், பேஸ்புக் சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பினார்.


சஸ்பெண்ட்:

இது குறித்து புகாரின் அடிப்படையில், அவரை, மூன்று நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்ய, ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அளித்துள்ளது. அந்தப் பரிந்துரையை ஏற்று, எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாமை, மூன்று நாட்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்வதாக, சபாநாயகர் அறிவித்தார்.


தவறு தான்:

''நான் செய்தது தவறு தான். அதே நேரத்தில், சட்டசபையில் நடக்கும் விவாதம் குறித்து, நமக்கு ஓட்டளித்த மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையிலேயே, நேரடியாக ஒளிபரப்பு செய்தேன்,'' என்றார், அமினுல் இஸ்லாம்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivaram - singapore,சிங்கப்பூர்
07-பிப்-201715:48:03 IST Report Abuse
sivaram பங்களாதேஷில் இருந்து திருட்டு தனமாக ஊடுருவி சட்டசபை உறுப்பினராகி திருட்டுத்தனமா ஒளிபரப்பு செய்கிறார். இப்படித்தான் நாட்டையும் காட்டி கொடுப்பன்க. இப்போது புரிகிறதா அமைதி மார்க்க புத்தி.
Rate this:
Share this comment
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
07-பிப்-201717:21:28 IST Report Abuse
Mohamed Ilyasசட்டசபையில் ஜில் ஜில் பார்த்த பிஜேபி mla விட இது மேல்...
Rate this:
Share this comment
AKBAR - karaikal,இந்தியா
07-பிப்-201719:01:46 IST Report Abuse
AKBARமொஹமட் - யார் செய்தாலும் அது குற்றமே. கட்சுயை பார்க்காதீர்கள், அவர்களின் செயல்களை மட்டும் பாருங்கள். இஸ்லாமியர் என்பதால் எத்தனை பேரை கொன்றாலும் அது சரியா? இதற்கு பதில் சொல்லுங்கள் மொஹமட்....
Rate this:
Share this comment
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
08-பிப்-201710:37:04 IST Report Abuse
abdulrahimஎவனோ ஒருவன் செய்யும் செயலுக்கு ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் குறை சொல்வதை சரி என்கிறீரா ?...
Rate this:
Share this comment
Cancel
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
07-பிப்-201711:56:40 IST Report Abuse
HSR இந்த மாதிரி நாதாரிங்களை தேர்ந்தெடுத்த மக்களை சொல்லணும்,,
Rate this:
Share this comment
Samu - Doha,கத்தார்
07-பிப்-201715:30:24 IST Report Abuse
Samuமக்கள் தேர்ந்தெடுப்பதே மக்களுக்காக சேவை செய்யத்தான், பிஜேபி என்ன பண்றாங்கனு மக்களுக்கு தெரியப்படுத்துறது எந்த தப்பும் இல்லையே....
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
07-பிப்-201711:07:44 IST Report Abuse
S.M.Noohu இதில் என்ன தவறு உள்ளது. உள்ளே நடக்கும் நிகழ்வுகளை தானே மக்களுக்கும் தெரியட்டும் என்று காண்பித்தார்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X