கடல் நீரை குடிநீராக்கிய இளம் விஞ்ஞானி| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கடல் நீரை குடிநீராக்கிய இளம் விஞ்ஞானி

Added : பிப் 08, 2017 | கருத்துகள் (3)
Advertisement
கடல் நீரை குடிநீராக்கிய இளம் விஞ்ஞானி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மாணவரான சைதன்யா கரம்சேது, கடல் நீரிலிருந்து குடிநீரை தயாரிக்க உதவும், எளிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.இன்று பூமியில் உள்ள, 8 பேரில் ஒருவருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதே சமயம், உலகின், 70 சதவீதம் பகுதியை கடல் நீர் சூழ்ந்துள்ளது. இந்த இரு தகவல்களையும் கவனித்த சைதன்யாவுக்கு கடல் நீரிலிருந்துதான் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்க முடியும் என்று தோன்றியது. அமெரிக்காவிலுள்ள ஓரிகன் மாகாணத்திலுள்ள போர்ட்லேண்ட் நகரிலுள்ள தனது பள்ளி ஆய்வகத்தில் ஆராய்ச்சியை துவங்கினார். கடல் நீரிலுள்ள உப்பை அகற்றுவது அதிக செலவு பிடித்தது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.“கடல் நீரை குடிநீராக்க முயன்ற விஞ்ஞானிகள் இதுவரை, உப்புடன் பிணைந்திருக்கும், 10 சதவீத நீர் மூலக்கூறுகள் மீதுதான் கவனம் செலுத்தினர். ஆனால் உப்புடன் பிணையாமல் இருக்கும், 90 சதவீத நீரை கவனிக்கத் தவறிவிட்டனர். நான் உருவாக்கிய தொழில்நுட்பம் அந்த, 90 சதவீத நீரை பிரித்தெடுக்க உதவுகிறது” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் சைதன்யா. அவரது சில ஆண்டு ஆராய்ச்சிக்கு நிறைய நிதி தேவைப்பட்டது. அந்த நிதி அனைத்தும் அவரது யோசனைக்கான பரிசுகளாக குவியத்துவங்கின. கடந்த ஜனவரியில், ரீஜெனரான் அறிவியல் திறமையாளர்களுக்கான தேடல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான, 300 மாணவர்களில் சைதன்யாவும் ஒருவர்.வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
20-பிப்-201717:28:14 IST Report Abuse
Mayilkumar Congrats Scientist Keep up the progressive research
Rate this:
Share this comment
Cancel
Raj Prasad - Dammam,சவுதி அரேபியா
18-பிப்-201720:01:04 IST Report Abuse
Raj Prasad If it is Cheaper method it is really appreceiable - I hope GRAVITY Seperation method is Possible.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-பிப்-201702:33:57 IST Report Abuse
தமிழ்வேல் பாராட்டுக்கள், நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X