கபில் சிபலுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம்

Updated : ஜன 21, 2011 | Added : ஜன 21, 2011 | கருத்துகள் (21) | |
Advertisement
புதுடில்லி : நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு குறித்து மத்திய தணிக்கை குழு ( சி.ஏ.ஜி) அளித்த அறிக்கையை தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபல் விமர்சித்திருந்தார். கபில் சிபலின் இந்த விமர்சனத்துக்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு

புதுடில்லி : நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு குறித்து மத்திய தணிக்கை குழு ( சி.ஏ.ஜி) அளித்த அறிக்கையை தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபல் விமர்சித்திருந்தார். கபில் சிபலின் இந்த விமர்சனத்துக்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் சிபல் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர்


அமைச்சர் சிபல் அரசின் ஒரு துறையை இம்மாதிரியாக விமர்சித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அமைச்சர் சிபல் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் என சுப்ரீம்கோர்‌ட் தெரிவித்துள்ளது.


2ஜி முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ., இதுமாதிரியாக வெளியில் இருந்து வரும் கருத்துக்களால் திசைமாறிவிடாமல் நடுநிலைமையாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நீத‌ிபதிகள் தெரிவித்தனர்.


கபில் சிபலுக்கு முரளி ‌மனோகர் ஜோஷி கண்டனம் : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் நேரில் ஆஜராகுவது குறி்த்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார். மேலும் அவர், இந்த விவகாரத்தில் பொது கணக்கு குழு முன் பிரதமர் நேரில் ஆஜராக வேண்டும் என்று முடிவெடுத்தால் விரைவி்ல் இந்த முடிவு அறிவிக்கப்படும். பொது கணக்காயர் குழு அறிக்கை சரியானது. இது தொடர்பாக லோக்சபா சபாநாயகர் மீராகுமாருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை பற்றி கருத்து சொல்வது தவறானது. அறிக்கைக்கு எதிராக கருத்து சொல்வது குறித்து முடிவெடுப்பது சபாநாயகரின் முடிவுக்குட்பட்டது. பொது கணக்கு குழு குறித்து கருத்து கபில் சிபல் கருத்து சொன்னது சரியல்ல என்றும் முரளி மனோகர் ஜோஷி கூறினார்.


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன் : கபில் சிபல் : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். மேலும் அவர்,சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் சர்ச்சைகள் எழுவது தவிர்க்கப்படும். பொது கணக்காயரின் அறிக்கை அரசாங்கம் ஆலோசனை செய்வதற்கு முன்னரே வெளியிடப்பட்டுள்ளது. அதனை ஆலோசனை செய்ய அரசிற்கு நேரமில்லாமல் போய் விட்‌டது. ‌பொது கணக்கு குழு அறிக்கை கசிவதற்கு எதிர்கட்சிக‌ளே காரணம் அதனை வைத்து பார்லிமென்டை எதிர்கட்சிகள் முடக்கியுள்ளன. மத்திய அரசு சிக்கலான நிலையில் உள்ளது. பொது கணக்காயரின் பணிகளில் நான் குறிக்கிட்டதில்லை. எனது கருத்துகள் எதனையும் அவமதிப்பதாக அமையவில்லை. நான் எனது பொறுப்பு மற்றும் தொலை தொடர்புத்துறை அமைச்சர் பணிகளிலும் தெளிவாக உள்ளேன் அரசாங்கம் தனது கருத்தினை மக்கள் முன் வைக்க முழு உரிமை உள்ளது. ஒப்பிட்டு தரம் எதிர்கட்சிகள் மற்றும் அனைவருக்கும் பொதுவாக வைக்க வேண்டும்.பொது கணக்கு குழு தலைவர் ஜோஷியின் கடிதம் என்னை காயப்படுத்தி விட்டது என்று கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varadharajan Karuppannan - bangalore,இந்தியா
22-ஜன-201107:37:17 IST Report Abuse
Varadharajan Karuppannan அய்யா கபில் சிபில் அவரும் அதே குட்டையில் ஊறிய மட்டை. திருடனுக்கு திருடன் சப்போர்ட் செய்யாமல இருப்பார்கள்.
Rate this:
Cancel
Sathaiah Balaji - Kinshasa ,டெம் ரெப் ஆப் காங்கோ
21-ஜன-201120:35:18 IST Report Abuse
Sathaiah Balaji அய்யா ராசாக்களா இந்த ஆளுக்கும் ஏதாச்சும் கொடுங்கப்பா அப்பதான் உளற மாட்டாரு ............
Rate this:
Cancel
மு.நாட்ராயன் - Dindigul,இந்தியா
21-ஜன-201120:21:55 IST Report Abuse
மு.நாட்ராயன் சுப்ரீம் கோர்டின் கண்டனங்களை எல்லாம் கபில் சிபில் மதிக்கமாட்டார்.அதற்காகத்தான் அவரை முக்கிய துறைக்கு மந்திரி ஆக்கியுள்ளார்கள். மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையை குறைகூறியுள்ளார். அரசு இயந்திரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைக்கிறார். இது இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. நேர்மையான அதிகாரிகளும் தடம் புரள நேரிடும். உடனடியாக இவரை மாற்ற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X