அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பதவி மீது ஆசையில்லை: சசிகலா

Added : பிப் 13, 2017 | கருத்துகள் (166)
Advertisement
சசிகலா, முதல்வர், பதவியில் ஆசையில்லை

சென்னை : போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, தான் முதல்வர் பதவி மீது எப்போதும் ஆசைப்பட்டதில்லை என தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது : 33 ஆண்டுகளாக அம்மாவை மட்டுமே பார்த்து வளர்ந்தேன். உண்மையாக கட்சிக்கு பன்னீர்செல்வம் விசுவாசமாக இல்லை. பெரியகுளத்தில் சாதாரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார் ஜெயலலிதா. ஓ.பி.எஸ்., பிரச்னை செய்வார் என எனக்கு முன்பே தெரியும். முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை பதவியேற்க சொன்னது நான் தான்.


ஆசையில்லை

நான் இருந்த துக்கத்தில் எனக்கு முதல்வர் பதவி எனக்கு பெரிதாக தெரியவில்லை. எனக்கு முதல்வர் பதவி மீது எப்போதும் ஆசையில்லை. முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிசடங்குகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே முதல்வர் பதவியை வேண்டாம் என்றேன். அதிமுக.,வின் கூட்டணி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தது நான் தான்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக.,வை இரண்டாக உடைக்க சதி நடக்கிறது. அதிமுக.,விற்கு விசுவாசமானவர் இல்லை என்பதை ஓ.பன்னீர்செல்வம் காட்டி விட்டார். எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பிறகு பதவிக்கு வர வேண்டும் என ஜெயலலிதா நினைக்கவில்லை. ஜெயலலிதா கட்சி பதவி வேண்டாம் என்ற போது அவர் சம்மதிக்க வைத்தது நான் தான். எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பிறகு ஜெயலலிதா என்ன நிலையில் இருந்தாரோ, அதே நிலை தான் இன்று எனக்கும். நான் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் ஜெயலலிதா இறந்த பிறகு நான் முதல்வராவதற்கு எனக்கு ஒரு நிமிடம் கூட ஆகி இருக்காது.


சரியாகபடவில்லை

சட்டசபையில் திமுக.,வினருடன் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்தது சரியாக படவில்லை. துரைமுருகன் ஆதரவு அளிப்பதாக கூறிய போது, பன்னீர்செல்வம் அதனை மறுக்கவில்லை. கட்சி தொண்டர்களுக்கு என்ன தெரிய வேண்டும் என்பதற்காக தான் இதனை விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். திமுக.,வின் சதியை புரிந்து கொண்டு தான் நான் முதல்வராக வர வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியதாகியது . போராட்டம் என்பது எனக்கு கையில் ஒட்டுகிற தூசு மாதிரி.


உயிரை விட தயார்

அதிமுக.,வை காப்பாற்ற உயிரை விடவும் தயாராக உள்ளேன். நான் என்னை முன்னிலைபடுத்தியதில்லை. சட்டசபையில் எதிர்க்கட்சியில் எத்தனை ஆண்கள் இருந்தாலும், ஒரு பெண்ணாக இருந்து அதனை சமாளிப்பேன். விரைவில் ஆட்சி அமைத்து, சட்டசபையில் அம்மாவின் படத்தை திறந்தே தீருவோம். 33 வருடமாக இரண்டு பெண்களாக சேர்ந்து அத்தனை பேரையும் சமாளித்து நாட்டையே ஆண்டோம். கட்சி தொண்டர்களுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்தேன்.இவ்வாறு சசிகலா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (166)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விருமாண்டி - மதுரை,இந்தியா
14-பிப்-201703:11:34 IST Report Abuse
விருமாண்டி வேடிக்கை மனுஷி
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-பிப்-201702:52:10 IST Report Abuse
தமிழ்வேல் சுரண்டியதை பத்திதானே சொல்றீங்க ?
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
13-பிப்-201723:23:26 IST Report Abuse
vnatarajan எதற்கும் ஆசை இல்லை என்றால் உங்களுக்கு சொந்தமில்லாத போயஸ் கார்டானைவிட்டு வெளியேறவேண்டியதுதானே . 33 ஆண்டுகள் அம்மாவை மட்டுமே பார்த்துவளர்ந்த உங்களை அம்மா ஏன் கார்டானைவிட்டு வெளியே போக சொன்னார். அதற்கு இதுவரையிலும் நீங்க விளக்கம் சொல்லவேயில்லையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X