மதில்மேல் பூனையாக ஆளுங்கட்சி நிர்வாகிகள்!

Added : பிப் 14, 2017
Advertisement
""பேப்பரில், டிவியில், ரோட்டில், தியேட்டரில், பஸ்சில், ஓட்டலில், தெரு முக்கில்... இப்படி எங்க பார்த்தாலும் ஒரே பன்னீரு புராணம்தான். அவரை அøŒக்க முடியாது,'' என்று தன்னப்போல் பேசிக்கொண்டு, மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.""என்னக்கா, வரும் போதே, ஒரே பன்னீரு புராணமா பாடுறீங்க,'' என்று மித்ரா கேட்டு கொண்டே, காபியுடன் வந்தாள். ஒரே மடக்கில் காபியை குடித்து முடித்த
மதில்மேல் பூனையாக ஆளுங்கட்சி நிர்வாகிகள்!

""பேப்பரில், டிவியில், ரோட்டில், தியேட்டரில், பஸ்சில், ஓட்டலில், தெரு முக்கில்... இப்படி எங்க பார்த்தாலும் ஒரே பன்னீரு புராணம்தான். அவரை அøŒக்க முடியாது,'' என்று தன்னப்போல் பேசிக்கொண்டு, மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
""என்னக்கா, வரும் போதே, ஒரே பன்னீரு புராணமா பாடுறீங்க,'' என்று மித்ரா கேட்டு கொண்டே, காபியுடன் வந்தாள். ஒரே மடக்கில் காபியை குடித்து முடித்த சித்ரா, ""அட, தமிழ்நாட்டில் இப்ப இருக்கிற நிலைமையைத்தான் சொன்னேன். பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு,'' என்று சொல்லி விட்டு,"" சரி, மித்ரா. கிளம்பு. தைப்பூசத்துக்கு, சிவன்மலைக்கு போக முடியலை. இப்ப போய், சாமி தரிசனம் செஞ்சுட்டு வந்துடலாம்,'' என்றவாறு வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.
இதமான காற்று வீச, மெதுவாக வண்டி சென்று கொண்டிருக்க, ""மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறையால், வீட்டு விஷேசம், காய்ச்சல் என, எந்த காரணங்களை காட்டியும் "லீவு' எடுக்க முடிவதில்லையாம்,'' என்று சித்ரா ஆரம்பித்தாள்.
""அட, விவரமா சொல்லுங்க,'' என்று மித்ரா கூறவும், ""சட்டம்ஒழுங்கு, போக்குவரத்து சீர்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுவதில் பயங்ர சுணக்கம் ஏற்பட்டுள்ளதாம். மற்ற மாவட்டம், மாநகரத்தில் ஆயுதப்படை பிரிவில், போலீசார் பற்றாக்குறை இருப்பதாக காட்டி, தங்களது உயரதிகாரிகளிடம் தெரிவித்து, தேவையான போலீசாரை கேட்டு பெற்று கொள்கின்றனர்.''
""ஆனால், மாநகர போலீஸ் கமிஷனரகம் அப்படியே தலைகீழாக இயங்கி வருகிறது. போதுமான எண்ணிக்கையில் ஆயுதப்படை போலீசார் இருந்தும், அவர்களை ஸ்டேஷன் டூட்டிக்கு போடாமல் வைத்திருக்கின்றனர். ஏன் இப்படி கமிஷனர் இருக்கிறார் என்று விசாரித்தால், அவர்களை ஸ்டேஷன் டூட்டிக்கு போட்டால், கை நீட்டும் பழக்கம் வந்துடும் என்று கமிஷனர் நினைக்கிறாராம்,'' என்று சித்ரா விளக்கினாள்.
""அட, போங்கக்கா. இப்ப இருக்கிற எல்லோரும் கை சுத்தமானவங்களா? சட்டுபுட்டுன்னு, ஆயுதப்படை போலீசுக்கு, ஸ்டேஷன் டூட்டி போடணும். இப்ப,
ஸ்டேஷனில், ஐந்து பேர் பார்க்க வேண்டிய வேலையை ஒருவர் பார்க்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறாங்களாம்,'' என்று மித்ரா தனக்கு தெரிந்ததை சொன்னாள்.
""ஆளில்லாத கடையில் டீ ஆத்தற மாதிரி, குழந்தைங்க இல்லாத அங்கன்வாடி மையத்தை, எம்.எல்.ஏ., குணசேகரன் தெறந்து வெச்சுருக்கார்,'' என்று, அடுத்த
"டாபிக்' சென்றாள் சித்ரா.
""அட.. இந்தக்கூத்து எங்க நடந்திருக்கு,'' என்று, மித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""காங்கயம்பாளையம்புதூர்ல, புதுசா அங்கன்வாடி மையம் அமைச்சிருக்காங்க. இதுக்கு முன்னாடி, அங்கிருந்த அங்கன்வாடி மையத்துக்கு, பாம்புகள் படையெடுத்ததால, குழந்தைகளை அனுப்ப யாரும் முன்வரல. ஆனாலும், புதுசா கட்டியிருக்காங்க. பசங்க வராட்டியும், திறப்பு விழா அன்னிக்கு கணக்கு காட்டனுமேன்னு, பக்கத்தில் இருக்கும் துவக்கப்பள்ளியில் இருந்து, ஒன்னாவது படிக்கும் குழந்தைகள், 20 பேரை "கடன்' வாங்கி வந்து, விழாவை முடிச்சிருக்காங்க. வந்ததுக்கு ஒரு லட்டு கெடைச்சுதேன்னு, குழந்தைங்க குஷியாக இருந்தாங்க,''
""நகரில், அதிக மாணவியர் படிக்கும் அந்த ஸ்கூல் நிர்வாகம், கார்ப்பரேஷன் மேல, செம கடுப்பில் இருக்காம். பள்ளியை, மாநகராட்சி நிர்வாகம் கண்டுக்கிறதில்லை. குப்பை, டாய்லெட் பராமரிப்புன்னு, எல்லாத்தையும் நாங்களே பார்க்க வேண்டியிருக்கு. மாநகராட்சியில் இருந்து துப்புரவு பணியாளர்கள் வர்றதேயில்லைன்னு, கலெக்டர் வரை புகார் போயிருக்காம்,'' என்று சித்ரா பதிலளித்தாள்.
""பார்ப்போம், இனிமேலாவது தீர்வு கிடைக்குமான்னு பொறுத்திருப்போம்,'' என்று மித்ரா ஆறுதல் கூறினாள்.
""அட, மாநகராட்சியை பற்றி, எங்கிட்ட ஒரு நியூஸ் இருக்கு. இரண்டாவது மண்டலத்துல, இன்னும் கவுன்சிலர் கையெழுத்து வேணும்னு கேட்கறாங்களாம்,''
""ஏதவாது கையெழுத்து போடாம பாக்கி வச்சிருப்பாங்களோ?'' என்று கிண்டலாக கேட்டாள் சித்ரா.
""இது ஆதார் பதிவுக்காம். இரண்டாவது மண்டலத்துல ஆதார் எடுக்க உடற்கூறு பதிவு செய்யற முகாம் தினமும் நடக்குது. வெளியூர் மக்களுக்கு சரியான முகவரி சான்று இல்லாத போது, உங்க கவுன்சிலர்கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டு வாங்கனு சொல்றாங்களாம். எந்த கவுன்சிலரை போய் கேட்கறது? அவங்களுக்கு பதவி போய் பல மாசம் ஆச்சுன்னு அதிகாரிங்களுக்கு தெரியாதா? ஏன் இப்படி மக்களை அலைக்கழிக்கிறாங்க,'' என்று கோபமாக கேட்டாள் மித்ரா.
""இரண்டு குரூப்ப சேர்ந்தவங்களும், ஒரே "வாட்ஸ் ஆப்' குரூப்ல தகவல்களை போட்டதால, ஒரே சங்கடமா இருந்துருக்கு தெரியுமா?'' என்று ஆன்ட்ராய்டு
தகவலுக்கு தாவினாள் சித்ரா.
"" இது என்ன, புதுக்கதையா இருக்கே?'' என்றாள் மித்ரா.
""திருப்பூர் மாநகர அ.தி.மு.க.,'னு ஒரு "வாட்ஸ் ஆப்' குரூப் ஓடிட்டு இருக்கு. யார் முதலமைச்சரா வருவாங்கனு தெரியாம, போன வாரத்துல ஒரே குழப்பமா இருந்துச்சுல. அந்த நேரத்துல, பன்னீர்செல்வம் சசிகலா குரூப்ப சேர்ந்தவங்க, அவங்களோட "காரசார'மான கருத்துக்களை ஒரே "குரூப்'ல போட்டாங்க. பன்னீர்செல்வம் முதல்வராகனும் எல்லோருமே ஆசைப்பட்டாங்க; ஆனா, தைரியமா வெளியே சொல்ல முடியாம, கட்சி சின்னம் எந்தப்பக்கம் போகுதோ, அந்தபக்கமா நாம ஒதுங்கலாம்னு ஒன்னும் தெரியாதவங்க மாதிரி வீட்லயே இருந்துட்டாங்க,''என்றாள் சித்ரா.
""எதிர்க்கட்சிக்காரங்க சைடுல ஏதாவது விசேஷம் இருக்கா?'' என்றாள் மித்ரா.
""பக்கத்தூர்ல வாண வேடிக்கையா இருக்குதே... அவங்களுக்கும் கொண்டாட்டம் தானே? ஆளுங்கட்சியினும் சொல்ல முடியாதுல, அ.தி.மு.க., இரண்டு ஆகியிருச்சுல, அடுத்தது நம்ம மேயர்தானு, தி.மு.க., காரங்க முடிவு பண்ணிட்டாங்க. எப்படியும், ஏப்., மே மாசம் உள்ளாட்சி தேர்தல் நடக்கும். தோழர்களையும் சேர்த்துட்டு, கூட்டணியா நின்னா, எப்படியும், 40 வார்டு சேர்ந்திடும். மக்களும் எம்.எல்.ஏ., மேல கோபமா இருக்காங்க; அப்புறம் என்ன? தி.மு.க., மேயர்தானே வரமுடியும்னு கூட்டி, கழிச்சு பார்த்துட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""சரி, மித்ரா. கனவு பலிக்குமான்னு தெரியலையே?'' என்ற சித்ரா, ""சரி... டெங்கு பாதிப்பு எந்த லெவலில் இருக்கு. ஏதாவது தெரியுமா?'' என்றாள். ""ஆமாக்கா, மறந்தே போச்சு. மாநகர பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இன்னும் நீடிக்குது. சுகாதாரப் பணிகளை செய்வதில், அதிகாரிகள் மத்தியில், பெரும் பனிப்போர் நடக்குதாம். வாராவாரம் கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து நடக்கும் ஆய்வு கூட்டத்தில் மட்டுமே மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர், மாநகர நகர் நல அலுவலர் கலந்துகிட்டு, பேப்பர்ல எழுதி வைச்சதை படிச்சுட்டு தப்பிச்சுக்கிறாங்களாம்.
மற்றபடி, மாநகர் சுகாதார பிரிவு மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை இணைந்து ஆய்வு கூட்டம், கலந்து ஆலோசிப்பது போன்ற எந்தவித நடவடிக்கைகளில்
ஈடுபடுவதில்லை. இதனால், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் பணியாளர்கள், அதிகாரிகளின் பனிப்போரால், சுகாதார பணி செய்வதற்குள்ள நாக்கு வெளியில்
தள்ளிடுதாம்,'' என்றாள் மித்ரா.
""என்னப்பா, போலீசை பற்றி ஒரு தகவல் இல்லையா. சரி நானே சொல்லிடறேன். போலீஸ் கமிஷனர் வந்து சில மாதங்கள் ஆகி விட்டது. உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் தவிர, மற்றபடி ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் பெரும்பாலா@னாருக்கு கமிஷனரோட பேர் மட்டும்தான் தெரியுமாம். முகத்தை இன்னும் ஒரு தடவ கூட பார்த்ததில்லைன்னு புலம்புறாங்களாம். ஸ்டேஷன்கள் வருடாந்திர ஆய்வு நடக்கும் போது, பார்த்துக்கலாம், என்று நினைத்து இருந்த போலீசார், அதுவும் கூட நடக்காது போல தெரியுதுன்னு ஒரு தகவல் கூட இருக்காம்,'' என்றாள் சித்ரா.
""அட, போங்கக்கா, இதைப்போய், லவ்வர் முகத்தை பார்க்க முடியாம தவிக்கிற காதலனாட்டம் பேசுறீங்க. கூகுள் போய் பார்த்தா கமிஷனர் போட்டோ வந்துடும். ஓ.கே., இன்னைக்கு "லவ்வர்ஸ் டே'.
உண்மையான அன்பு இருந்தா, எல்லா நாளும் "லவ்வர்ஸ் டே'தான். எப்படி நம்ம தத்துவம்,'' என்று மித்ரா சொன்னதும், ""ஆமா, உன் பேரை சுவாமி மித்ரானந்தான்னு மாத்திக்கோ,'' என்று கலகலவென சிரித்தவாறே கூறி விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X