அய்யோ பாவம் செங்கோட்டையன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அய்யோ பாவம் செங்கோட்டையன்

Updated : பிப் 16, 2017 | Added : பிப் 15, 2017 | கருத்துகள் (63)
Advertisement
செங்கோட்டையன், சசிகலா, அய்யோ பாவம்

சென்னை: அ.தி.மு.க.,வில், ஒரு காலத்தில் பெரும் செல்வாக்குடன் வலம் வந்த செங்கோட்டையனின் நிலைமை தற்போது, ‛அய்யோ பாவம்' என கருதும் அளவுக்கு உள்ளது என, அக்கட்சியினரே வெளிப்படையாக கூறி வருகின்றனர்.


தொடர்ந்து எம்.எல்.ஏ.,

இது குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:


அ.தி.மு.க.,வின் பழம் பெரும் தலைவர்களில் செங்கோட்டையனும் ஒருவர்; கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். முதன் முதலில், 1977 ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து, அக்கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் பிறகு கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இருந்து, 1980, 1984, 1989,1991, 2006, 2011, 2016ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக நீடிப்பவர். 1991 -96 ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். 2011ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்த போது, மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், சொந்த குடும்பத்தினர் அளித்த புகார் காரணமாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜெயலலிதா தேர்தல் சுற்றுப்பயணம் செல்லும் போதெல்லாம் அதற்கான ஏற்பாடுகளில் செங்கோட்டையன் தவிர வேறு யாரும் சிறப்பாக செய்ய முடியாது என்ற பெயர் பெற்றவர். ஆனால், இன்று கட்சியில் அவரது நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அப்போது கூட இவரது பெயர் பரிசீலனையில் இருந்தது.


கட்சியினர் அறிவுரை

ஆனால், கட்சியினர் சசிகலாவிடம்,‛செங்கோட்டையின் கட்சியில் இருப்பது பெரிய பலம். கொங்கு மண்டலத்தில், இவ்வளவு எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து நமக்கு கிடைப்பதற்கு ஆரம்ப காலத்தில் இவர் செய்த அடிப்படை கட்சி பணிகள் தான் காரணம். அதனால் தான் ஜெயலலிதா அவரது, மூன்று தேர்தல் பணிகளை முழுமையாக அவரிடம் கொடுத்து இருந்தார். அதனால் தற்போது வருத்தத்தில் இருக்கும் அவரை அழைத்து பேசுங்கள்' என்று தெரிவித்தனர்.
இதனால், சசிகலா அவரை அழைத்து,‛ பொறுமையாக இருங்கள்; நல்ல பதவி உங்களை தேடி வரும்' என்று வாக்குறுதி அளித்தார். எனவே, பொதுச் செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தீவிர சசிகலா விசுவாசியாக மாறினார். ஆனால்,பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவே கைப்பற்றினார்.
இதன் பிறகு, செங்கோட்டையன் உட்பட, 12 பேரை கட்சியின் அமைப்பு செயலாளராக சசிகலா நியமித்தார். கட்சியில் சிலருக்கே தெரிந்த கோகுல இந்திராவுக்கும் தனக்கும் ஒரே பதவியா என்று செங்கோட்டையன் மீண்டும் அதிருப்தி அடைந்தார். ஆனால், சசிகலா கொடுத்த வாக்கை காபாற்றுவார்; ஆட்சியிலாவது நல்ல பதவி கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து இருந்தார்.


‛டம்மி' பதவி

அவை தலைவர் மதுசூதனன் அணி மாறிய பிறகு , ‛டம்மி' பதவியான அவை தலைவர் பொறுப்பில் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். கட்சியை பொறுத்தவரை அவை தலைவர் பொறுப்பு என்பது ஒரு, ‛டம்மி' பதவி தான். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூடும் போது தான், அவை தலைவர் என்பவரே அனைவரின் நினைவுக்கு வருவார். இதையும் செங்கோட்டையன் பொறுத்து கொண்டார்.
சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா குற்றவாளி, நான்கு ஆண்டு சிறை தண்டனை என சுப்ரீம் கோர்ட், நேற்று அறிவித்த உடன், சசிகலா முதல்வராக முடியாது என்பது தெளிவானது. எனவே, முதல்வர் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்ற எண்ணம் செங்கோட்டையனுக்கு வந்தது. ஆனால், அவர் சார்ந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை தான், சட்டசபை கட்சி தலைவராக, சசிகலாவின் நெருக்கடியின் பேரில் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்தெடுத்தனர்.
இந்த முறையும் செங்கோட்டையனுக்கு வாய்ப்பு பறிபோனது. இவ்வளவு விசுவாசியாக இருந்தாலும் நமக்கு எந்த பொறுப்பும் இல்லையே என்ற அதிருப்தியில் செங்கோட்டையன் இருக்கிறார். சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு இது தான் நிலைமை என்பதை அங்கு இருப்பவர்கள் உணர வேண்டும்.


கூனி குறுகி...

சூழ்நிலை இத்துடன் முடியவில்லை. இதுவரை இல்லாத புது பதவியான கட்சியின் துணை பொதுச் செயலாளராக சசிகலாவின் உறவினர் தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம், செங்கோட்டையனை சசிகலா முழுமையாக நம்பவில்லை என்று தெரிகிறது. தான் சிறையில் இருக்கும் காலகட்டத்தில், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார். ஏற்கனவே, ஓபிஎஸ் தனி அணியாக செயல்படும் நேரத்தில் இருவரும் சேர்ந்துவிட்டால், தன் கதி அதோ கதி தான் என்று எந்த அதிமுகவினரையும் நம்பாமல், தன் உறவினரை கட்சியின் துணை பொது செயலாளராக நியமித்திருப்பதற்கான காரணம். இதை இன்னும் உணராமல், கட்சியின் மூத்த தலைவர்கள் இருப்பார்களேயானால், அவர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும். இனிமேல், தினகரன் சொல்படி தான் செங்கோட்டையன் செயல்பட வேண்டும். அவரை நேரில் காணும் போதெல்லாம் கூனி குறுகி வணக்கம் போட வேண்டும். இந்த அளவுக்கு தான் செங்கோட்டையனின் நிலைமை உள்ளது. இவ்வாறு ஓ.பி.எஸ்.,சின் தீவிர ஆதரவாளர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A. Sivakumar. - Chennai,இந்தியா
20-பிப்-201714:56:24 IST Report Abuse
A. Sivakumar. தீதுக்குதவியுஞ் செய்திடுவார்தினந் தேடியொன்றும் மாதுக்களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும் ஏதுக்கிவர் பிறந்தார் இறைவாகச்சி ஏகம்பனே.
Rate this:
Share this comment
Cancel
Narayanan - Chennai,இந்தியா
16-பிப்-201708:08:31 IST Report Abuse
Narayanan sengottayan has nothing to loose...he was sidelined from 2012 and is now in spotlight..he would be more than happy with the presidium post since being a long time politician he would be aware that palanisamy would be an interim chief minister till dinakaran wins an MLA election and takes over the mantle of the state...
Rate this:
Share this comment
Cancel
Kalai Aarashan - Quito,ஈக்வடார்
16-பிப்-201700:24:13 IST Report Abuse
Kalai Aarashan என் அன்புக்குரிய செங்கோட்டையன் அவர்களே, சிந்தித்து செயல்படுங்கள் இல்லையேல் ஓ பி ஸ் ஐ சந்தித்து செயல்பட முயற்சி செயுங்கள் இல்லையேல் உங்களை ஓரம் கட்டி உதவாக்கரை என்று முத்திரை குத்திவிடுவார்கள் சசியின் கூட்டம். கவுண்டர் ஐயா நல்லா மாட்டிகிட்டீங்களா? உங்களுக்காக இதோ ஒரு சினிமா பாடல் அதை கேட்டாவது சிந்தியுங்கள். சுட்டி சுட்டி உன் வாழ கொஞ்சம் .............. சசியை பார்த்து இந்த பாடலை பாடிவிட்டு பன்னீரிடம் போயி சேருங்கள் இழந்த மதிப்பும் மரியாதையும் தானாக வந்து சேரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X