கவர்னர் ஜனநாயகத்தை காப்பார்: ஜெயக்குமார் | பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பார் என நம்புகிறோம்: ஜெயக்குமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பார் என நம்புகிறோம்: ஜெயக்குமார்

Updated : பிப் 15, 2017 | Added : பிப் 15, 2017 | கருத்துகள் (62)
Advertisement
 கவர்னர் ஜனநாயகத்தை காப்பார்: ஜெயக்குமார்


சென்னை: ‛எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என நம்புகிறோம். நாளைக்குள் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்' என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, டி.டி.வி., தினகரன், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, எம்.பி., நவநீதகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட 10 பேர் இன்று (பிப்.,15) இரவு 8 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.

அந்த அணியினர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு மீண்டும் வலியுறுத்தினர். முன்னதாக, அவர்கள் நேற்று (பிப்.,14) கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்புக்கு பிறகு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது.கவர்னரிடம் 124 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு பட்டியலை கொடுத்துள்ளோம். உரிய ஆவணம் செய்வதாக கவர்னர் கூறினார். பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என நம்புகிறோம். நாளைக்குள் அவர் நல்ல முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.





வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giri - Bangalore,இந்தியா
16-பிப்-201711:44:25 IST Report Abuse
Giri ஏன்டா வெக்கமே இல்லையடா .
Rate this:
Share this comment
Cancel
Nallavan - Nagai,இந்தியா
16-பிப்-201710:45:07 IST Report Abuse
Nallavan ஒரு பெண் தாதா சமாதியில் ஓங்கி குத்துவதும், போகிற போக்கில் ஒரு வாரிசை தன் இஷ்டத்திற்கு நியமித்துவிட்டு போவதும், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தண்ணியடித்து விட்டு சந்தோஷமாக இருப்பதும், முன்பு எந்த அரசியல்வாதியோ சொன்ன ஏ தாழ்ந்த தமிழகமே என்ற வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது மக்கள் ஒரு புறம், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் மறுபுறம் வித்தியாசமான போட்டி, ஜனநாயகம் ஒரு எண்ணிக்கை விளையாட்டு என்றானால் அது ஒரு கேலி கூத்தாய் முடியும் , வாழ்க பணநாயகம்
Rate this:
Share this comment
Cancel
பாரதி - Chennai ,இந்தியா
16-பிப்-201709:18:50 IST Report Abuse
பாரதி சசிகலாவிற்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று நன்கு தெரிந்த பிறகும் அதிமுக எம்எல்எக்கள் & எம்பிக்கள் சசியை ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்களை தேர்வு செய்து கட்சியில் சீட் வழங்கியது ஜெயலலிதாவா அல்லது சசிகலாவா என்ற சந்தேகம் வருகிறது. தவிர, ஜெயா உயிருடன் இருந்த காலத்திலேயே ஒருவேளை ஜெயாவிற்கும் சசிக்கும் ஒரு பிரச்சினை வந்து ஆட்சியும் கட்சியும் யாருடையது என்ற ஒரு கேள்வி எழுமானால் இப்போது உள்ள இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவை விட்டு விட்டு சசி பக்கம் போய் இருப்பார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X