கிறங்க வைக்கும் கிரண்மை | Dinamalar

கிறங்க வைக்கும் 'கிரண்மை'

Added : பிப் 16, 2017
கிறங்க வைக்கும் 'கிரண்மை'

சுரிதாரிலும் சுண்டியிழுக்கும் அழகுசிலை... மாடர்ன் டிரஸில் மயங்க வைக்கும் மெழுகு சிலை... அழகில் இல்லை சிறுகுறை... ஆந்திராவில் பிறந்து தமிழகத்தை ஆட்கொண்டிருக்கும் அழகுப்புயல்... துறு துறு பேச்சு... கன்னத்தழகில் ரசிகர்களை கிறங்க வைக்கும் சின்னத்திரை நடிகை கிரண்மை... சினிமா, சீரியல் என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் 'தினமலர் சண்டே ஸ்பெஷல்' பகுதிக்காக அளித்த துள்ளல் பேட்டி இதோ...
பிறந்தது... வளர்ந்தது... படித்ததுபிறந்தது ஆந்திரா மாநிலம். வளர்ந்தது, படித்தது, நடித்தது, பிடித்தது எல்லாமே... எல்லோரையும் போல் என்னையும் வாழ வைக்கும் சென்னை தான்.நடிப்பு ஆர்வம்அப்பா சினிமாத்துறையில் எலக்ட்ரீஷியனாக இருந்தார். அதனால் சின்ன வயதில் இருந்தே சினிமாவில் இருக்கேன். 8 வயதிலே ஜெயம் ரவி நடித்த 'தாஸ்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன்.அதன்பின் அர்ஜூன் நடித்த அரசாங்கம், சுந்தர்.சி நடித்த சண்டை, சேரனின் மாயக்கண்ணாடி, தனுஷ் நடித்த படிக்காதவன் என பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறேன்.சீரியலில் வந்தது எப்படி13 வயதில் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஹீரோயின் தங்கை கேரக்டரில் நடித்தேன். இதன் பின் சில சீரியல்களில் தங்கை ரோல் என அடுத்தடுத்து நடித்து வருகிறேன்.எல்லாம் தங்கை கேரக்டரா இருக்கேஅப்படி இல்லை. 13 வயதில் 'வாக்கப்பட்ட சீமை' படத்தில் ஹீரோயினாக நடித்தேன். படம் இன்றும் ரிலீஸ் ஆகவில்லை. அப்புறம் 'ஒத்தவீடு', 'நேசம் நேசப்படுது' படங்களில் ஹீரோயினாக நடித்தேன். கடைசியாக 'லட்டுக்குள்ள பூந்தி ' படத்தில் நடித்துள்ளேன். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகப் போகிறது.மீண்டும் சீரியலில் எப்படி?நடிப்பு என்பது எல்லா இடத்திலும் ஒன்றுதான். சினிமாவில் அறிமுகமாகி சீரியலில் நடிப்பதும் இயல்பான ஒன்றுதான். சீரியல் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து வீட்டிலும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். அதுக்கு சீரியல் தான் காரணம்.உங்களது ரோல் மாடல்எனக்கு ரோல் மாடல் என்னோட அப்பா தான். அவர்தான், இது தான் உன் உலகம், வாழ்க்கை, எல்லாமே உனக்கு நடிப்பு தான் என எனக்கான பாதையை காட்டியவர். இன்று எல்லாரும் அறிந்த ஒரு பிரபலமாக இருப்பதற்கு அவர் தான் காரணம்.உங்களது 'ட்ரீம் பாய் 'அல்லு அர்ஜூன் . அவர் டான்ஸ் பிடிக்கும். அவரது படங்களை நுாறு முறைக்கு மேல் பார்ப்பேன். அவர்தான் என்னோட 'ட்ரீம் பாய்'.தமிழ் ஹீரோ பிடிக்காதாஅய்யய்யோ...அப்படி எல்லாம் இல்லை...( புருவத்தை உயர்த்தி, கன்னங்கள் சிவக்க சிரிக்கிறார்). சூப்பர் ஸ்டார் ரஜினியை எப்பவுமே பிடிக்கும். தற்போது அதர்வா ரொம்ப பிடிச்சு இருக்கு.அழுதபடி நடிப்பதில் 'போர்' இல்லையா...இன்றைய பெண்களுக்கு தங்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் உள்ளது. அதை சீரியலில் நாங்க அழுது நடித்ததை பார்க்கும் போது அவர்களும் அழுறாங்க. அவர்களோட கஷ்டத்தை நாங்க ஷேர் பண்ணிக்கிறோம்.டப்பிங் சீரியல் பாதிப்புரொம்பவே பாதிப்பு இருக்கு. எங்களுக்கு நடிப்பு தவிர வேற தொழில் தெரியாது. படிச்சு பட்டம் வாங்கியிருந்தாலும் வேற வேலைக்கு போக மாட்டோம். 13 வருஷமா சினிமாவில் இருக்கேன். நடித்து முடிச்சுட்டு போனதான் வீட்டுல சாப்பாடு. கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைஞ்சு இருக்கேன். மற்ற மொழி சீரியல்கள் வருகையால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவரை வாழ்த்த siva41418@gmail.com.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X