சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜனாதிபதி ஆட்சி கேட்கும் இளைஞர்கள்
மெரினாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு

சென்னை: 'மன்னார்குடி உறவினர்களிடம் தமிழகம் சிக்கியுள்ளது; அந்த கும்பலிடம் இருந்து தமிழகம் காப்பாற்றப்பட, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இதற்காக, மெரினாவில் ஒன்று கூடுவோம்' என்ற தகவல்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ஜனாதிபதி ஆட்சி கேட்கும் இளைஞர்கள் : மெரினாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு

எந்த நேரமும் இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், மெரினாவில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, ஜன., 17 முதல், 23 வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாண வர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

சென்னை மெரினாவில், ஆயிரக்கணக்கான மாண வர்கள் திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத் திய போராட்டம், உலகம் முழுவதும் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த, அவசர சட்டம் மூலம் அனுமதி கிடைத்தது. இதனால், தமிழகத்திற்கு சோதனை வந்தால், இளை ஞர்கள் ஒன்று சேர்வர் என்ற நம்பிக்கை, சமூக ஆர்வலர்களிடம் ஏற்பட்டது.

தற்போது,மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சி யிடம் இருந்து, தமிழகத்தை காப்பாற்றவும், ஜனாதி பதி ஆட்சி அமைய வலியுறுத்தியும், இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.

Advertisement

இது குறித்து, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில், தகவல்கள் வேகமாகவும், அதிகளவிலும் பகிரப்பட்டு வருகின்றன. இத னால், மெரினாவில் நேப்பியர் பாலம் முதல், கலங்கரை விளக்கம் வரை, 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில், மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
18-பிப்-201722:34:58 IST Report Abuse

Paranthamanகல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவியரே பட்டதாரிகளே நாளைய உலகம் உங்கள் கையில். தமிழக ஆட்சியின் அலங்கோலத்தை குடியரசு தலைவருக்கு இமெயிலில் அனுப்பி வையுங்கள்.

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
18-பிப்-201717:47:06 IST Report Abuse

Paranthamanரூ.ஏழு கோடி செலவு செய்து 135 எம்எல்ஏக்களை பன்னீரிடமிருந்து அபகரித்திருக்கிறார்கள். அவர்களை வைத்து ஆயிரம் கோடி கொள்ளை அடிப்பார்கள். இன்னும் ஒரு மாதத்தில் தினகரன் தமிழக முதல் மந்திரியாகவும் திவாகரன் பொது செயலாளராகவும் ஆவார்கள். போயஸ்காரடன் நினைவிடம் ஜெயா மர்ம மரண விசாரணை கமிஷன் எல்லாம் மூட்டை கட்டி கூவத்தூரில் கொண்டு போட்டு புதைத்து விடுவார்கள்..இனி ஜெயில் ராஜ்யம் தான் நடக்கும்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
18-பிப்-201712:56:03 IST Report Abuse

Balajiதற்போதைய சூழலில் தமிழகத்துக்கு இதுபோன்ற போராட்டங்கள் கண்டிப்பாக அவசியம்..... அப்போது தான் ஆட்சியாளர்களுக்கு ஒழுங்காக இல்லையென்றால் மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்ற பயம் வரும்..... இல்லையென்றால் அவர்கள் இஷ்டத்துக்கு நாட்டை கூறுபோட்டு நினைப்பார்கள்....... இம்முறை மெரினாவில் ஒன்று கூடத்தேவையில்லை...... அனைவரும் சட்டமன்றத்தை முற்றுகையிட்டால் அதன் தாக்கமும் வீரியமும் இன்னும் பலமடங்கு அதிகரித்து ஆட்சியாளர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கையாக அமையும்.............

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X