சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

விஷம்

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (10)
Share
Advertisement
விஷம் Ramanujar Download

அவர்களால் தாங்க முடியவில்லை. கோயில் நிர்வாகத்தில் ராமானுஜர் செய்த மாற்றங்களை மட்டுமல்ல. பக்தியின் மிகக் கனிந்த நிலையில் அரங்கனை ஒரு குழந்தையைப் போல் கவனித்துக்கொள்ள அவர் மேற்கொண்ட சில ஏற்பாடுகளும் அவர்களுக்கு வெறுப்பூட்டியது.
சட்டென்று ஒருநாள் ராமானுஜர் கேட்டார், 'முதலியாண்டான்! அரங்கனின் திருமுகம் வாடியிருக்கிறதே. இன்று என்ன அமுது செய்யப்பட்டது?' மடைப்பள்ளியில் என்ன தளிகையாகிறது என்று கவனிக்க வேண்டியது முதலியாண்டான் பொறுப்பு. அரங்கனுக்கு அமுது செய்விக்கப்படுகிற அனைத்து வகை உணவினங்களும் உயர்தரமாக இருக்கவேண்டும் என்பது உடையவர் கட்டளை. புளியோதரையோ, சர்க்கரைப்பொங்கலோ, வெண்பொங்கலோ, வேறெதுவோ. சேர்மானங்களில் ஒரு சிறு பிழையும் நேர்ந்துவிடக் கூடாது.நேர்ந்ததும் இல்லை. முதலியாண்டான் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டிருந்த நாளில்தான் ராமானுஜர் கேட்டார். 'அரங்கன் திருமுகம் ஏன் வாடியிருக்கிறது?'தோற்றமா, தோற்ற மயக்கமா என்ற வினாவுக்கே இடமில்லை. உடையவர் மனத்தில் அப்படிப் பட்டுவிட்டது.'தெரியவில்லை சுவாமி! இன்று ததியோதனம் (பால் சேர்த்த தயிர்சாதம்) தான் அமுது செய்யப்பட்டது. வழக்கம் போலத்தான் தளிகையானது.''இல்லையே. அப்படித் தெரியவில்லையே. அவர் முகம் வாடியிருக்கிறது. ஜலதோஷம் உண்டாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏதோ தவறு நடந்திருக்கிறது.'முதலியாண்டான் யோசித்துக் கொண்டிருந்தபோது ராமானுஜரே கேட்டார், 'வெறும் ததியோதனம் மட்டுமா?''ஆம் சுவாமி. அது மட்டும்தான். ஆனால் அதற்குப் பிறகு நாவல் பழம் அமுது செய்யப் பண்ணினேன். நல்ல பழங்கள்தாம். பரிசோதித்துவிட்டுத்தான் சன்னிதிக்குள் எடுத்துச் சென்றேன்.''அதுதான் பிழை' என்றார் ராமானுஜர். 'தயிர் சாதத்துக்குப் பிறகு யாரேனும் நாவல் பழம் உண்பார்களோ? கண்டிப்பாக அது உடல்நலக் குறைவைத்தான் உண்டு பண்ணும்.'யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'ஆனால், சுவாமி…''ம்ஹும். கூப்பிடுங்கள் கருட வாகன பண்டிதரை!'அவர் திருக்கோயில் தன்வந்திரி சன்னிதிக்குப் பொறுப்பாளர். உடையவர் அழைக்கிறார் என்றதும் ஓடோடி வந்தவரிடம், 'உடனே எம்பெருமானுக்குக் கஷாயம் தயாராகட்டும்.' என்றார்.அதோடு நிற்கவில்லை. கற்பூரம், கஸ்துாரி மஞ்சள், குங்குமப்பூ மூன்றையும் சேர்த்து அரைத்து பெருமான் திருமேனியில் உடனே சாற்றச் சொன்னார்.பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள். இது எம்மாதிரியான கரிசனம்! பக்திதான். ஆனால் வெறும் பக்தியல்ல. பாவனைதான். ஆனால் அனைவருக்கும் சாத்தியமானதல்ல. ஆத்மார்த்தமாக அரங்கனோடு கரைந்து போகாத ஒருவருக்கு இப்படியெல்லாம் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு ஜீவன் உள்ளே உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கிறது; அதைப் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை என்று வீட்டில் இருப்போர் நினைப்பது போன்றே கோயில் கொண்டிருப்பவனையும் கருத முடியுமா! ராமானுஜரால் முடிந்தது.'வெறும் அபத்தம். சரியான கிறுக்குத்தனம்!' என்றது எதிர்க்கூட்டம்.ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் பெருமாளுக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, அந்த வெற்றிலை மடிப்பில் சிறிது பச்சைக் கற்பூரம் சேர்ப்பது, தாலாட்டி உறங்கச் செய்வது, தாலாட்டுக்கு முன்னால் ரங்க நாச்சியார் சன்னிதிக்கு எழுந்தருள வைத்து ஊஞ்சலில் அமர வைப்பது, ஊஞ்சலை மெல்லப் பிடித்து ஆட்டி விடுவது என்று அவர் கொண்டு வந்த நடைமுறைகள் யாவும் கலாபூர்வமானவை. வெறும் நம்பிக்கையல்ல. அதற்கும் அப்பால். வெறும் பக்தியல்ல. பிரேம பக்தி. பூரண சரணாகதிக்குப் பிறகு கிடைக்கிற உள்ளார்ந்த நெருக்கம்.'ஓய், இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது. இவர் அடிக்கிற அத்தனை கூத்துக்கும் நாம் கணக்கு எழுதிக் காட்ட வேண்டியிருக்கிறது. முன்னைப் போல் கோயில் மடைப்பள்ளியில் இருந்து வீட்டுக்கு எதுவும் எடுத்துச் செல்ல முடிவதில்லை. நன்கொடைகளில் நமக்குப் பங்கு வருவதில்லை. முன்னெல்லாம் விளைச்சல் நடந்து அறுவடையாகி வந்தால் மூட்டை மூட்டையாக நமக்குத் தானியங்கள் தனியே வரும். இப்போது அதெல்லாம் இல்லை என்றாகிவிட்டது. இப்படியே போனால் நாமும் பிட்சைக்குப் போக வேண்டியதுதான்.''புலம்பாமல் யோசிக்கலாம் சுவாமி. என்ன செய்யலாம் என்று நீரே சொல்லும்.'முகமும் பெயருமற்ற அந்தக் கூட்டம் அடிக்கடிக் கூடிப் பேசி ஒரு முடிவு செய்தது. ராமானுஜரைக் கொன்று விடலாம்.சன்னியாசிகளுக்கான இலக்கணப்படி, தினமும் ஏழு வீடுகளில் பிட்சை எடுத்து உண்பதே ராமானுஜரின் வழக்கம். வசதியாகப் போய்விட்டது. ஏழிலொரு வீட்டானைப் பிடித்து, போடுகிற பிட்சையில் விஷத்தைக் கலக்கச் சொன்னால் தீர்ந்தது. பிடித்தார்கள். பேசினார்கள். சம்மதிக்க வைக்கப் பொன்னும் பொருளும் கொடுத்தார்கள்.'நீ என்ன செய்வாய் என்று தெரியாது. நாளைக் காலை ராமானுஜர் உன் வீட்டுக்குப் பிட்சைக்கு வரும்போது உணவில் விஷம் கலந்துவிட வேண்டும். உண்ட மறுகணம் அவர் உயிர் பிரிந்துவிட வேண்டும்.''ஆனால் இது தவறல்லவா? ஆசாரிய அபசாரம் அல்லவா? நமக்கு நரகமல்லவா கிடைக்கும்?என்று தவித்தாள் அவனது மனைவி.'நாளைய நரகத்தைப் பற்றி இன்று ஏன் நினைக்கிறாய்? இதோ பார், வந்து குவிந்திருக்கும் பொன்னையும் பொருளையும். நான் வாழ்நாள் முழுதும் சம்பாதித்தாலும் நமக்கு இத்தனை சொத்து சேராது. நீ சொன்னதைச் செய். ராமானுஜருக்கு இடுகிற உணவில் இந்த விஷத்தைக் கலந்தே தீரவேண்டும்!' கட்டாயப்படுத்தி மனைவியிடம் விஷத்தைக் கொடுத்துவிட்டு, காரியம் முடிந்துவிடும் என்று நிம்மதியாகப் போனான் அவன். மறுநாள் ராமானுஜர் அந்த வீட்டுக்குப் பிட்சைக்கு வந்தார். அன்னமிட வந்தவளுக்குக் கைகள் நடுங்கின. நடை தளர்ந்தது. சட்டென்று உடையவரின் பாதம் பணிந்து தம் கண்ணீரால் கழுவினாள்.'தாயே, ஏன் அழுகிறீர்கள்?''ஒன்றுமில்லை உடையவரே! இந்தாரும்…'கணவன் சொல்லைத் தட்ட முடியாமல் உணவை இட்டாள். ராமானுஜர் ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்தார். தயிர் சாதத்துக்குப் பிறகு நாவல் பழம் சாப்பிட்டு அரங்கனுக்கு வந்த ஜலதோஷத்தையே அறிய முடிந்தவருக்கு அந்தப் பெண் இட்ட உணவில் விஷம் கலந்திருப்பதையா புரிந்து கொள்ள முடியாது?ஒரு கணம் கண்மூடி அமைதியாக நின்றார். இட்ட பிட்சையை அப்படியே எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் நீரில் கரைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.பிட்சைக்குச் சென்று நெடுநேரமாகியும் ராமானுஜர் மடத்துக்குத் திரும்பவில்லையே என்று கவலைப்பட்டு அங்கிருந்து தேடிக்கொண்டு ஆட்கள் போனார்கள். ஆற்றங்கரையில் அவரைக் கண்டதும் ஓடி வந்து, 'என்ன ஆயிற்று சுவாமி? ஏன் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையா?' 'இல்லை. நான் இன்று முதல் உணவருந்தப் போவதில்லை.' என்றார் ராமானுஜர்.(நாளை தொடரும்...)writerpara@gmail.com- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
18-பிப்-201709:51:27 IST Report Abuse
Darmavan இதன் அடிப்படை விஷயம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அதுவரை வைகானச ஆகம முறையில் நடந்து வந்தது.இதை ஸ்ரீ ரங்கநாதன் ஆணைப்படி ராமானுஜர் பஞ்சராத்ர முறையில் மாற்ற செய்தார்.இதனால் பாதிப்படைந்த வைகானச அர்ச்சகர்கள் ஒருத்தரின் மனைவி மூலம் இது நடந்தது.
Rate this:
Manian - Chennai,இந்தியா
19-பிப்-201705:27:12 IST Report Abuse
Manianவைகாசனம முறை என்பது ரிஷி வைகாசனரால் ஏற்படுத்தப்பட்டது. இதை அவரது நான்கு சிஷ்யர்கள் - மரீசி,பிரிகு,கஷ்யபர்,அத்திரி முனிவர்களால் பரப்பபட்டது. இந்த முறையில் கோவிலிலும், வீட்டிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதி முறைகள் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. ஒரு மனிதன் தனக்கு செய்து கொள்ளும் எல்லா செயல் வினைகளையும்,நன்றாக நிருவப்பட்டு, உணர்ச்சி பூர்வமாக, முழு கடவுள் சிந்தனை மூலம் கடவுள் திரு நாமங்களை ஜெபித்து மந்திரிக்கும் போது, வெறும் சிலை சக்திவாய்ந்த சிலையாக மாறிவிடும். ஆகவே, மனிதர்க்கு செய்யும் எல்லா இயல் பாடுகளையும் அதே முறைப்படி அந்த சக்தி வாய்ந்த சிலைக்கும் செய்ய வேண்டும். திருப்பள்ளி எழுப்பல், குளிப்பாட்டுதல் முதல் தாலாட்டி தூங்க வைத்து நடை சாத்துதல் வரை. ஆகவே பூசாரிகள் வாழ்வு முறையும் பூசை முறையும் நெறிமுறைப் படுத்தப்பட்டது. இந்த முறையில் பரம்பரை மூலமே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டார்கள். தகப்பனாரே குரு. இவர்கள் வேதம் படித்து பின் பரம்பரை பூசாரிகளாவார்கள். சிதம்பரம் தீக்ஷிதர்களும் இவ்வாறே சிம்பரம் நடராசர் கோவில் பரம்பரை பூசாரிகள். மன்னர்கள் காலத்தில் எல்லாமே பரம்பரை தொழில்களே. இந்த வைகாசன பூசை முறையும் வேதங்களை அடிப்படையானவையே. ஆகவே இந்த முறையைப் பின்பற்றுபவர்கள் "வடகலை ஐயங்கார்கள்"ஆவார்கள். பொதுவாக,இவர்கள் நமஸ்காரம் செய்யும் போது, முதலில் கஷ்யப, ஆத்திரேய.. என்று தங்கள் பரம்பைரயை சொல்லுவார்கள். பராசரபட்டர் ஸ்ரீங்கத்து கோவில் பட்டர். வேதத்தில் ஜாதி பற்றிய குறிப்பே இல்லை. எல்லோரும் கடவுளின் குழந்தைகளே. சிலை வைத்து பூசிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பக்தியோடு கடவுளை சரணடைந்தால் போதும். அவனுள்ளே சக்தியும் சேர்ந்தே இருக்கிறது. இதைத்தான் 5-இரவு(பான்ச் 5- ராத்திரி)முறையில் பரந்தாமனே பூசித்தான். சங்கு, சக்ரம் முதலியன, திருநாமம் தரித்தல் போன்ற 5 சம்ஸ்காரங்கள்-முறைகள் செய்து பக்தி,பரிபூர்ண சரணாகதி போதும்.இந்த முறையில் யார் வேண்டுமானாலும் தமிழ் பாசுரங்கள் பாடி பூசாரிகள் ஆகலாம். பரம்பரை பட்டம் இல்லை. இது மிகச்சிறந்த ஜனநாயக முறை. இதை செய்பவர்கள் தென்கலையர். தென்கலையால், பொருளாதார, பரம்பரை தொழிலுக்கு ஆபத்தே. வேதத்தின் உட்பொருளை ராமாநுஜர் போல் அறிந்து கொள்ளாதவர்களே அவரைக் கொல்ல விஷ உணவே தரவைத்தார்கள். ஆனால் எல்லா வடகலைரும் முட்டாள்கள் இல்லை,எல்லா தென்கலையரும் புத்திசாலிகள் என்றும் பொருள் இல்லை....
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
19-பிப்-201713:40:23 IST Report Abuse
Darmavanபாஞ்ச ராத்ரம் என்பது எம்பெருமான் தன்னை எப்படி பூஜிக்க வேண்டும்(தன்னையே பூஜிக்கவில்லை )என்று 5 ராத்ரம் (இரவுகள்) 5 ரிஷிகளுக்கு சொல்லிக்கொடுத்தான் . இந்த முறை ஸ்ரீரங்கம் , காஞ்சிபுரம் போன்ற இடங்களில் வடகலை அர்ச்சகர்களே செய்கிறார்கள். சனாதன தர்மத்தில் செய்யும் தொழிலுக்கு ஏற்ப ஜாதி பாகுபாடு ஏற்பட்டது. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 'வேதாந்தகோ பிரமானஸ்ய ........ சூத்ர சுகமாவாப்னுயாத்' என்று வருகிறது. வேத வ்யாஸர் வேதங்களை ரிக்,யஜுர்,சாமம் & அதர்வண என 4 வேதமாக பிரித்தார். வேத காலத்திலேயே கோயில்கள் இருந்ததாக புராணங்களில் சொல்லப்படுகின்றது.அங்கே இருந்தவர்கள் அர்ச்சா மூர்த்திகளே....
Rate this:
Manian - Chennai,இந்தியா
20-பிப்-201700:54:48 IST Report Abuse
Manianஇதோ பாரும்...கொடுத்தான் என்று பகவானை ஏகவசனத்தில் சொல்லுகிறீறே? நீர்தானே கூரத்தாழ்வான்.அவன் இவன் என்று சொல்வது தவறு என்று எழுதினீர்.ஆனால் பெருமாள் உம்மை கோபிக்க மாட்டார். மேலும் முழு நேரமும் உலக க்ஷேமமே மனத்தில் கொண்டு, பிரம்ம ஞானத்தை உண்மமையில் தேடுபவர்களையை "ப்ராமணர்" என்ற பட்டம் கொடுத்தார்கள்.விஸ்வாமித்திரர் ஒரு க்ஷ்திரியர்-இன்றய முக்குலத்தவர் -தன் கோப,வீர குணங்களை எல்லாம் பட முற்ச்சிகளுக்கு பிறகு சாந்தகுணமாக மாற்றி, ப்ரமரிஷியானார். ஆகவை, ஆரம்பமுதலே சத்வ குணங்கள் உள்ளவரே பிராமணராக முதல் தகுதி படைத்து, குரரு மூலம் வேதங்கள் எல்லாம் கற்று ப்ராமணர்கள் ஆனார்கள். ஒரு தேவைக்காக ஏற்பட்ட ஜனப்பிரிப்பை உலகம் தோன்றிய நாள் முதல் இருநந்ததாக அறிவுப்பூர்வமாக, மரபணுப்பூரர்வமாக(நாம் எல்லோருமே சுமார் 10,000 வருஷங்களுக்கு முன்னால் ஒரேஒரு வெப்பாமான ஆப்ரிக்க பாட்டியின் பேரன்கள்தான்), பின்னால் 3000 வருஷம் கழித்து ஜாதிகளாக பிரிந்தோம் .ஆகவே, வேதகால ஆரம்பத்தில் பிராமணர்கள் என்று தனி மரபணு உள்ளவர்கள் இருந்திருக்க முடியாது. பகவான் தனக்கு எப்படி என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று செயல் முறையில் காட்டி இருக்க முடியாதா? அல்லது செயலில் காட்டுங்கள் என்று முனிவர்கள் கேட்டிருக்க மாட்டார்களா? இதை எல்லாம் எழுதுவது தற்பெருமைக்கல்ல.ஒரு நல்ல எளிமையான பழய நமது அருமையான சிந்தனை தொடரை களங்கப் படுத்தவேண்டாம், உம்மை படிக்கும் படி யாரும் வற்புறுத்தாதபோது ஏன் வம்படி செய்கிறீர், என்று காட்டத்தான்.பெருமாள் உம்மை மன்னிப்பானர்.நான் வடகலை, தென்கலை எதுவும்் இல்லை,வெரும் நடுக்கலையே....
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
20-பிப்-201708:01:43 IST Report Abuse
Darmavanஇந்த தொடரை படிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை.தெரிந்ததை எழுத எல்லாருக்கும் உரிமை/சுதத்ந்திரம் உண்டு....
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
20-பிப்-201708:46:27 IST Report Abuse
Darmavanமேலும் : எம்பெருமான் இதிலிருந்து வந்தது எம்பெருமானார் .வித்யாசம் புரிகிறதா? எம்பெருமான் - பகவதபச்சாரம் படலாம். ஆனால் கூரத்தாழ்வான் - அவன்/இவன் - பாகவதபச்சாரம் .கூடாது. கூரத்தாழ்வானே தம் தரிசனத்தை (கண்களை) இழந்தபோது ,தாம் ஒரு பாகவதரின் திருமண் கோணலாயிருக்கிறதென்று சொல்லி அபச்சாரப்பட்டிருப்பேனோ என்று வருந்துகிறார்....
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
18-பிப்-201707:57:21 IST Report Abuse
Darmavan பிச்சையை காக்கைக்கு போட அது இறந்ததனால் விஷம் கலக்கப்பட்டிருப்பது தெரிந்தது என்பதுதான் வைபவம்.இல்லையேல் தெரிய வாய்ப்பில்லை.
Rate this:
Manian - Chennai,இந்தியா
18-பிப்-201720:51:28 IST Report Abuse
Manianஅரசர்கள் காலத்தில், உண்டு காட்டிகள் என்பவர்கள் முதலில் மன்னன் முன் உண்பார்கள். அவர்கள் இறந்தால் உணவில் விஷம் கலந்திருப்பது தெரியும். காக்கைக்கு அன்னம் உருண்டை தருவது பிராமணர்கள் இறந்த பிறகு காக்கை ரூபத்தில் வருவார்கள், அவர்களுக்கு தரப்பட்ட பித்துரு பிண்டம்.அதையே தினமும் இறந்த முன்னோர்கள் மறுபிறப்பு எடுக்கும் வறை தங்களைத் தேடி வரலாம் என்று எண்ணி இடப்படும் அன்னம். திதி அன்று அவர்கள் உண்ண வரவேண்டும்,தங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் எண்ணினார்கள். காக்கைக்கு (முன்னோர் அவதாரத்திற்கு) உணவிட்டு, விஷம் இருப்பதை கண்டு பிடித்தல், மூக்கு பொடி கலந்து மயங்கிய காக்கையை பிடிப்பது எல்லாம் பின்னால் வந்தவை. மேலும்,ராமானுஜர் மனதில் காக்கையை கொன்று தன்னைக் காத்துக் கொள்ளும் எண்ணம் வருமா? அன்பான ரசாயன விஞ்ஞானி(மதம் இல்லாதவர்) சொன்னது- விஷம் ஓடும் தண்ணீரில் கலந்து நாலபக்கமும் கலந்து நீர்த்துவிடும். கொல்லும் அளவு சக்தியற்றதாகிவிடும். மேலும் ஆற்று மணலில் உள்ள உலோக வடிவங்களால் உறிஞ்சப்படும்.எனவே யாரையும் கொல்லாது. கற்றதும் பெற்றதும்....
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
19-பிப்-201707:59:18 IST Report Abuse
Darmavanராமானுஜர் காகத்திற்கு விஷம் வைக்க வேண்டும் என்ற நோக்கில் அதை செய்யவில்லை. இதில் சொன்னது போல் யதார்த்தமாக தினம் செய்வதை ராமானுஜரும் செய்தார் என்று கொள்ளவேனும். ஆற்றில் இட்டால் அதில் விஷம் இருப்பது எப்படி தெரியும்? இது பொது அறிவு....
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
18-பிப்-201702:24:23 IST Report Abuse
Manian ஆற்றில் விஷ உணவை கரைத்தால் மீன் முதலியன அந்த விஷ உணவை தின்று சாகாதா? அல்லது விஷம் கரைந்து வீரியம் இல்லாமல் பொகுமா? நமது மருத்துவம் படித்தவர்கள் சற்று விளக்க முடியுமா? ராமானுஜர் ஜீவ ஹிம்சை செய்யவே மாட்டார்.எனவே இது உட்பொருள் புரிந்து கொள்ளவே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X