அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உதறல்!
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதியில்
தலைகாட்ட முடியாமல் போகுமோ என பயம்
போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க முடிவு

பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, சொந்த தொகுதிகளுக்கு செல்ல முடியாமல் போய் விடுமோ என, சசி ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது. அதனால், முழு போலீஸ் பாதுகாப்பு கேட்க, கூவத்துாரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

  சசிகலா ஆதரவு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு... உதறல் தொகுதியில் தலைகாட்ட முடியாமல் போகுமோ என பயம்  போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க முடிவு

அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னை யில், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என, இரு பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகளில், சசிகலா அணியினர், எம்.எல்.ஏ.,க்களை கூவத்துார் சொகுசு விடுதியில், 10 நாட்களாக தங்க வைத்தனர்.

அங்கு, அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து

கொடுத்தனர். இவர்களில் சிலர், சசிகலா குடும்ப ஆதிக்கத்தை விரும்பவில்லை. ஆனாலும், அவர் களால் வெளியேற முடியாமல், குண்டர்கள் கட்டுப் பாட்டில் வைக்கப்பட்டனர்; சில, பெண் எம்.எல்.ஏ.,க் களும், தங்கள் குடும்பத்தினரை விட்டு பிரிந்து, 10 நாட்க ளாக அவதிப்பட்டனர். சசிகலா குடும்பத்தி னருக்கு ஆதரவாக, எம்.எல்.ஏ.,க்கள் செயல்படு வதை, மக்கள் விரும்பவில்லை.

அதனால், அவர்கள், தங்கள் கருத்தையும், விருப்பத் தையும், தங்களின், எம்.எல்.ஏ.,க்களுக்கு, மொபைல் போன் வாயிலாக தெரிவித்தனர். தங்களின் கருத்தை கேட்டு, முடிவு எடுக்கும்படி வலியுறுத்தி னர். ஆனால், அதை பொருட்படுத்தாமல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பான்மை யினர், சசிகலா பக்கம் நின்றனர். இதனால், பொது மக்களும், அ.தி.மு.க., தொண்டர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள்,தங்கள் எதிர்ப்பை, நேற்று முன்தினம், பல இடங்களில் வெளிப்படுத்தினர்.

அதை பார்த்த, எம்.எல்.ஏ.,க்கள், இப்போது கலக்கத் தில் உள்ளனர். ஓட்டெடுப்பு முடிந்த தும், ஊருக்கு எப்படி திரும்புவது என்ற தயக் கத்தில் உள்ளனர். இவ்வளவு நாளும், சொகுசு விடுதியில் தங்க

Advertisement

வைத்து, சகல வசதிகளும் செய்து தந்த சசிகலா உறவினர்களிடம், அவர்கள் இதுபற்றி முறை யிட்டு உள்ளனர்.

தொகுதிக்கு திரும்புவதில் சிக்கல் இருப்பதால், போதிய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, கேட்டுள்ளனர். கூவத் துாரில், நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இது பற்றி பல, எம்.எல்.ஏ.,க்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.சில, எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SVMARA - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-201719:33:44 IST Report Abuse

SVMARAஅணைத்து கூவத்தூர் MLA க்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். ஊருக்குள் அனுமதிக்க கூடாது .

Rate this:

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) வோட்டு கேக்க வரும் போதும் இதே மாதிரி போலீஸ் பாதுகாப்போடு வருவீர்களா? பணத்துக்காக [ கூவத்தூர் டீல், ஒவ்வொரு எம்.எல்.ஏ. வுக்கும் அமைச்சர்கள், ஐந்து அல்லது எட்டு கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் மற்றும் அந்தந்த மாவட்ட டாஸ்மாக் கடைகளின் வருமானம் பிரித்து கொடுக்கப்படுமாம்? ] இந்த மானம் கேட்ட பொழப்பு தேவைதானா உங்களுக்கு?

Rate this:
Gnanam - Nagercoil,இந்தியா
19-பிப்-201723:16:41 IST Report Abuse

Gnanamஇந்த சாக்கடை அரசியல் தேவையா நமக்கு? குடியரசு தலைவர் ஆட்சிக்கு முயற்சிப்போம்.

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X