அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் துவங்கியது உட்கட்சி பூசல்

Added : பிப் 19, 2017 | கருத்துகள் (3)
Advertisement


தஞ்சாவூர், இடைப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வினர் இனிப்புகள் வழங்கிய போது கட்சியில் சிலரை அழைக்காததால் புகைச்சல் துவங்கியது.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் இடைப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் முன், அ.தி.மு.க.,வினர் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கினர்.
அப்போது, அங்கு வந்த, 22வது வார்டு செயலர் மற்றும் இன்னும் சில கட்சி நிர்வாகிகள், அங்கிருந்த நிர்வாகிகளிடம், 'ஓ.பி.எஸ்., உருவ பொம்மையை எரிக்க மட்டும் எங்களை அழைத்தனர். இப்போது, வெற்றியை கொண்டாட மட்டும் அழைக்காமல், இனிப்புகள் வழங்கி கட்சியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யக் கூடாது. கட்சிக்கு அவப்பெயர் உண்டாக இது போல செயல்படுகின்றனரா? என கோபமாக பேசினர்.
இதை பார்த்த மக்கள், கட்சியில் புகைச்சல் இப்போது தான் ஆரம்பம். இன்னும் போக போக பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கு என முணுமுணுத்தபடி சென்றனர்.
தற்போது, சசிகலா உறவினரான ரெங்கசாமி ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியில், யாருக்கு அதிக மவுசு என போட்டியும், புகைச்சலும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
19-பிப்-201715:12:20 IST Report Abuse
karunchilai உறவுக்கு கைகொடுத்து, சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்டார் ரெங்கசாமி. வரும் தேர்தலில் அவருக்கு ஜாமீன் தொகைக்கு கிடைத்தால் அவர் பேரதிர்ஷ்டசாலி. தேர்தலுக்குப் பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாராத நல்லவர், தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-பிப்-201708:26:08 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இனாமாக வந்த மாட்டை இரவில் ( நிலவில்) கட்டிஓட்டு என்பார்கள் அதுபோல் உள்ளது. இவர்களின் செயல்பாடுகள்.இடிப்பவனுக்கும் புடைப்பவனுக்கும் ஒன்னு எட்டி எட்டி பார்த்தவனுக்கு ரெண்டு என்ற கதையாக உள்ளதே??? ஆண்டிக்கு ஆண்டி ஓட்டுக்கு காசல் என்பார்களே அதுபோல்>>>>>>>>>>>
Rate this:
Share this comment
Cancel
19-பிப்-201706:37:56 IST Report Abuse
சாலை பார்த்தசாரதி நாராயணன் எதுவும் நிலையில்லை.மக்கள் மனநிலை கணிப்புக்கு அப்பாற்பட்டது .அதைத் தக்கவைக்க முயற்சியைக்காணோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X