அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்!
கவர்னரிடம் பன்னீர் வலியுறுத்தல்

'சட்டசபையில், நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தி.முக., செயல் தலைவர் ஸ்டாலினின் பிரதிநிதி களும், அடுத்தடுத்து சந்தித்து வலியுறுத்தினர்.

 மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்!  * கவர்னரிடம் பன்னீர் வலியுறுத்தல்

முதல்வராக பதவியேற்ற, இடைப்பாடி பழனி சாமி, நேற்று முன்தினம், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரினார். ரகசிய ஓட்டெடுப்பு என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை; சபையில் ரகளை நடந்தது. பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். பின், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர்

பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணி நிர்வாகிகள், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித் தனர். அப்போது, 'சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தினர்.

இதுகுறித்து, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:


சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான ஓட்டெடுப்பின் போது நடந்த முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து கவர்னரிடம் கூறி னோம். எம்.எல்.ஏ.,க்கள், ஒரு வாரம் தொகுதிக்கு சென்று வர அனுமதிக்க வேண்டும்; அதன் பின், ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, விரிவான மனுவை அளித்தோம்.

பரிசீலித்து நல்ல முடிவுஎடுப்பதாக அவர் கூறினார். நல்ல முடிவை எடுப்பார் என, நம்புகிறோம். ஓட்டெடுப்பில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., கோரிக்கை


இதை தொடர்ந்து, தி.மு.க., - ராஜ்யசபா எம்.பி.,க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அவரிடம், செயல் தலைவர்

Advertisement

ஸ்டாலின் சார்பில் மனு ஒன்றை அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரும் போது சபை ஒத்திவைக்கப்பட்டால், தீர்மானத்தை கைவிட வேண்டும். அந்த விதியை, சபாநாயகர் புறக்கணித்து விட்டார். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டும், வெளிநடப்பு செய்தும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க் கள் வெளியில் இருந்தனர்.

அப்போது, அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானம், வெளிப்படை யானஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் இந்த செயல், ஜனநாயக விரோதம். எதிர்க்கட்சி கள் இன்றி ஓட்டெடுப்பு நடத்தியது நியாயமற்றது; சட்ட விரோதம்.

சபாநாயகர், நடுநிலை தவறி, ஆளுங்கட்சியின் ஒரு பிரிவுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இது போன்ற சூழலில், 1988ல், அப்போதைய கவர்னர், நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என, அறிவித்தார். எனவே, ஜனநாயத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கும் வகையில் உரிய நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்களுடன்அவசர ஆலோசனை


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று கட்சி வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின், அவர் கூறிய தாவது: போலீஸ் அதிகாரிகளை, சட்டசபைக் குள் அழைத்து, எங்கள் மீது தாக்குதல் நடத்தி னர். அதில், ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ., மயக்க மடைந்து பேச்சு, மூச்சு இன்றி, மருத்துவமனை யில் உள்ளார். பல எம்.எல்.ஏ.,க்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது.

என் சட்டை கிழிந்து, தோள் பட்டையில் அடி பட்டதற்கு, மருத்துவமனை சென்று, 'ஸ்கேன்' எடுக்க உள்ளேன். சட்டபையில் நடந்த சம்பவங் களை, ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்து வோம்.சட்ட ரீதியாக, கோர்ட்டில் வழக்கு தொடுக்க ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
20-பிப்-201723:06:31 IST Report Abuse

Sivan Mainthanஓகே ஓ பி எஸ்

Rate this:
20-பிப்-201718:03:55 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்பன்னீர் செய்த சிறந்த சேவையை மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் அதாவது ஒரு குற்றவாளியை முதல்வராக்கி சில நாளில் தண்டிக்கப்பட்டு பதவி இழப்பு என்பது எவ்வளவு கேவலமான விஷயம் இதை தடுத்தது பன்னீர் தான் . இந்த ஆட்சி 6 மாதம் தாண்டுவது கடினம். விரைவில் தேர்தல் வரத்தான் போகிறது அதற்குள் சசியை செயலாளர் பதவியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு கட்சியை கைப்பற்றுங்கள்

Rate this:
Ram - Dublin,அயர்லாந்து
20-பிப்-201717:41:39 IST Report Abuse

Ramபொறுத்தார் பூமி ஆள்வார் மாசி 28 வரை தான் பொறுத்திருப்போம், தேர்தல் ஆணையம் சசிக்கும்/ சசி நியமித்தவர்களுக்கும் எதிராக தீர்ப்பு சொல்ல வாய்ப்பு(உ)ண்டு. புதிய தேர்தல் வர வாய்ப்புண்டு. யார் பணம் தந்தாலும் வாங்கவும் (வாங்கலாம்) அதில் ஒரு தப்பும் இல்லை வாக்களிக்கும் போது நேர்மையான ஒருவருக்கு வாக்களியுங்கள்…. ..ஸ்டாலின் தலைமையில் "திருடர்கள் முன்னேற்ற கழகம் ( D.M.K)" ... எடப்பாடி தலைமையில் "அனைத்து திருடர்கள் முன்னேற்ற கழகம் ( A.D.M.K)" ... ....ஓ.பி.ஸ். தலைமையில் "அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ( A.D.M.K)" ... ... "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" ... தீர்ப்பு மக்கள் கையில் தான் இருக்கிறது. "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" வாழ்க தமிழ் வளர்க தமிழினம். வந்தே மாதரம்

Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-பிப்-201722:24:49 IST Report Abuse

கல்யாணராமன் சு.Ram, தங்கள் கருத்துக்கள் அனைத்தும் சரியானவையே, "யார் பணம் தந்தாலும் வாங்கவும் (வாங்கலாம்) அதில் ஒரு தப்பும் இல்லை" என்பதை தவிர நமக்கு நேர்மையான வழியில் கிடைக்கும் செல்வத்தை தவிர வேறு எதுவும் நம்முடையதல்ல. நமது மக்களிடம் 1968 க்கு பிறகு வந்த இந்த எண்ணம்தான் நம்மை கீழ் நோக்கி அழைத்து சென்றுகொண்டிருக்கிறது ...

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X