அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மக்களின் முதல்வராக மாறுங்கள்!
சி.பி.ஐ., முன்னாள் இயக்குனரின் திறந்த மடல்

'அரசியல் பழிவாங்கலை நிறுத்தி, பெங்களூரு சிறையின் உத்தரவுகளை எதிர்நோக்காமல், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, மக்களின் முதல்வராக மாற வேண்டும்' என, தமிழக முதல்வர், இடைப்பாடி பழனிசாமிக்கு, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன், ஆலோசனை வழங்கியுள்ளார்.

மக்களின் முதல்வராக மாறுங்கள்! சி.பி.ஐ., முன்னாள் இயக்குனரின் திறந்த மடல்

முதல்வர் இடைப்பாடி பழனிசாமிக்கு, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் எழுதியுள்ள, திறந்த மடலில் கூறியுள்ளதாவது:

நான், தமிழகத்தைச் சேர்ந்த சாதாரணமான, மூத்த குடிமகன். கோவையில் பிறந்து, இந்த மாநிலத்தில் படித்தவன். ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, 2001ல், சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றேன்.இத்தனை நாள், நானும் ஒரு தமிழன் என, பெருமையுடன் கூறி வந்தேன். ஆனால், தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளுக்கு பின், அந்தப் பெருமையை இழந்துள்ளேன். நம் மாநிலமும், உத்தர பிரதேசம், பீஹாரைப் போல, அரசியல் அபத்தங்களுக்கான மாநிலமாக மாறியுள்ளது.

சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வென்றதற்காக, உங்களுக்கு என் வாழ்த்துக்கள். அதே நேரத்தில், ராஜாஜி, காமராஜ், அண்ணா துரை போன்ற பெருந்தலைவர்கள் அலங்கரித்த, முதல்வர் என்ற பதவி, பொறுப்புக்கு ஏற்ற தகுதிகள் உங்களுக்கு உள்ளதா என்பதில், எனக்கு சில சந்தேகம் உள்ளது.

தனக்காக செயல்படாமல், ஒருமைப்பாட்டுடன், தமிழக முதல்வராக செயல்பட்ட அந்த பெருமைமிக்க, தமிழகத்தின் புதல்வர்கள் வரலாறு குறித்து அறிந்து கொள்வதற்கு
உங்களுக்கு நேரம் இருக்கும் என, நம்புகிறேன்.


சுயமாக செயல்படுங்க


இந்த நேரத்தில், மிகவும் நேர்மையாகவும், பயமில் லாமலும் நீங்கள் உங்கள் கடமையை திறம்பட செய்ய வேண்டும் என, தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக சொன்னால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வரும் உத்தரவுகளை எதிர் நோக்காமல், நீங்களேசுயமாக செயல்பட வேண்டும்.

மாநிலம் தற்போது சந்தித்து வரும் பிரச்னை களுக்கு, நீங்களாகவே தீர்வு காண வேண்டும் என்பதே, அனைத்து தமிழர்களின் எதிர்பார்ப்பு. பெரும்பான்மை பலம் உள்ள கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், நீங்கள் முதல்வராக பொறுப்பேற்றுள்ளீர்கள்.உங்கள் அரசியல் முன் னோடியை, முதல்வருக்கான முன்னு தாரணமாக கொள்ள வேண்டாம் என, வேண்டுகிறேன்.

இந்த அறிவுரையை நீங்கள் நிராகரித்தால், மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு, குறிப்பாக தற்போதைய மிக முக்கியமான, மாநிலம் முழுவதும் உள்ள வறட்சிக்கு நிவாரணம் காண்பதற்கு, 24 மணி நேரத்தையும் செலவிட வேண்டும் என, வலியுறுத்துகிறோம். இந்த மிகப்பெரிய சவாலை சமாளிக்க, தேவையான ஆலோசனைகள் வழங்க, திறமையான அதிகாரிகள் உங்களிடம் உள்ளனர். உங்கள் நேரத்தை, அரசியல் பழிவாங்குவதற்கு செலவிட வேண்டாம்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத, கோடிக்கணக் கான தமிழர்கள் சந்தித்து வரும் வறட்சி கொடுமையை சமாளிக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். டில்லியுடன் நல் உறவை பேணுங்கள். அப்போது தான், இந்த பிரச்னைக்கு தீர்வு காண போதிய நிதியைப்பெற முடியும். தமிழகம் சந்தித்து வரும் இரண்டாவது மிகப் பெரிய பிரச்னை, மக்களை வாட்டி எடுக்கும் ஊழல், லஞ்சம் தான்.

நான் ஒன்றும், இதில் உங்களுக்கு புதிதாக சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு தமிழனும், தனக்கு உரிமை உள்ள சலுகை களை பெறுவதற்கு கூட, லஞ்சம் தர வேண்டிய நிலை உள்ளது.பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் என,

Advertisement

எந்த ஆவணமாக இருந்தாலும், சொத்து ஆவணப் பதிவு என, எதற்கெடுத்தாலும், மிகப் பெரிய தொகையை தர வேண்டிய நிலைதான் உள்ளது.

பதவி கிடைக்கும்


போலீஸ் கான்ஸ்டபிள் பதவியில் இருந்து, பல்கலை துணை வேந்தர் வரை, அதிகம் கொடுப்பவருக்கே பதவி கிடைக்கும் நிலை உள்ளது. மாநில கல்வி வாரியத்தில் இருந்து, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியத்துக்கு மாறுவதற்கு, மிகப் பெரும் தொகையை, பள்ளிகள் லஞ்சமாக தர வேண்டி யுள்ளது. இதனால், யார் யார் பலன் பெறுகின்ற னர் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

இது, மிகவும் வெட்கக் கேடான நிலைமை; இதை மாற்றுவதற்கு நீங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கைகளே, உங்களை மக்கள் எடை போடுவதற்கான முக்கிய அம்சமாக இருக்கும். 'இது மற்ற மாநிலங்களில் இல்லாததா' என்று சப்பைக் கட்டு கட்ட வேண்டாம்.தமிழர்களாகிய நாங்கள், இந்த மோசமான நிலையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று, உங்களிடம் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு சாக்குபோக்கு தேவையில்லை; நடவடிக்கை தான் தேவை.

உங்கள் ஆட்சியை, மக்கள் மிகவும் உன்னிப் பாக கண்காணிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஆட்சி நிர்வாகம் சரியாக இல்லாவிட்டால், மக்கள், மீடியாவை யும், நீதித்துறையும் நாட வேண்டிஇருக்கும்.


Advertisement

வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
20-பிப்-201723:29:44 IST Report Abuse

மதுரை விருமாண்டி//இதனால், யார் யார் பலன் பெறுகின்றனர் என்பது எங்களுக்கு தெரியவில்லை.// A முதல் Z வரை எங்கெங்கே எல்லாம் லஞ்சம் விளையாடுதுன்னு இவிங்களுக்கு தெரியுமாம்.. எவ்வளவுன்னும் தெரியுமாம்.. ஆனால் அதனால் யார் பலன் பெறுகிறார்கள் என்பது இவைகளுக்கு தெரியாதாம்.. இதான் அரசியல்வாதியின் கூஜாவாக செயல்படுபவர்களின் கையாலாகாத பதில்.. தெரியும், ஆனால் சொல்லத்திராணி இல்லை.. யாருன்னு தெரியும், அவர்களை பிடிக்க அதிகாரம் இருக்கு, ஆனா திராணியில்லை. ஆனா இவரு நல்லவருன்னு நாம சொல்லணுமாம். .. போங்கடா, நீங்களும் உங்க அட்வைசும்.. நாடு நாசமாய் போறதுக்கு கொள்ளையடிக்கும் அரசியல்வியாதிகள் மட்டுமே காரணம் அல்ல.. அவர்களை அரசுக்கட்டிலில் வைத்த மக்களும் காரணமல்ல. வருபவன் நல்லது செய்து விட மாட்டானா என்ற ஆதங்கத்தில் கண்டவங்களுக்கு வாய்ப்பை கொடுத்து ஏமாறும் கூட்டம் அவர்கள். ஆனால், தப்பு செய்யிறவன் யாருன்னு தெரிஞ்சும், தண்டிக்கும் அதிகாரம் இருந்தும், பயந்தோ, பரிசுக்கோ அதை விட்டுக் கொடுத்து ஊழலை வளரவிடுகிறான் பாரு, இவரு மாதிரி "நல்லவங்க", அவங்களால் தான்..

Rate this:
Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா
20-பிப்-201722:20:57 IST Report Abuse

Jagath Venkatesanஇன்னும் சில தினங்களில்...காவல் துறை....அதிகாரிகள் மாற்றம் செய்யப்படவுள்ளார்கள்....நீங்கள் சொல்லியபடி எல்லாம் நடக்கிறதா... நடக்கவுள்ளதா... என்று பாருங்கள்....எப்படியும் செய்திகள் வெளியே தெரிய வரும்....மக்களுக்கும் புரியும்.....

Rate this:
R. Mohan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
20-பிப்-201721:36:23 IST Report Abuse

R. MohanYour advice would go waste.... . feathers of Bird flocked together. He has come to power not to serve the people of Tamilnadu.... it's only to fulfill the dream of his gang leader.

Rate this:
மேலும் 94 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X