கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மே 15க்குள் உள்ளாட்சி தேர்தல் ?

Added : பிப் 20, 2017 | கருத்துகள் (30)
Advertisement
தமிழக உள்ளாட்சி தேர்தல், மே 15ம் தேதி, மாநில தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல், மே மாதம், 15ம் தேதிக்குள் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், ‛ உத்தேச தேதியை கூறாமல், சரியான தேர்தல் தேதியை தெரிவிக்க வேண்டும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.


தேர்தல் அறிவிப்பு முறைப்படி இல்லை

தமிழகத்தில், 2016 அக்டோபரில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு முறையாக இல்லை' என, உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 'பழங்குடியினருக்கான ஒதுக்கீடு செல்லும்; ஆனால், தேர்தல் அறிவிப்பு, முறைப்படி இல்லை என்பதால், அதை ரத்து செய்கிறேன்; டிசம்பருக்குள், புதிய அறிவிப்பு வெளியிட்டு, தேர்தல் நடத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தெரிவிக்கும்படி, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, கடந்த மாத இறுதியில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் திட்டவட்டம்

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமார், அவகாசம் கோரினார். பாரதி சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். விசாரணையை, பிப்., 10க்கு(இன்று), டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மே மாதம், 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ‛உத்தேச தேதியை கூறாமல், சரியான தேதியை தெரிவிக்க வேண்டும்' என, நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subhashini - chennai,இந்தியா
20-பிப்-201718:38:08 IST Report Abuse
subhashini தயவு செய்து பணம் வாங்காமல் எந்த விதமான பொருளோ அன்பளிப்போ பெறாமல் மக்கள் ஓட்டு போட வேண்டும்.. ஒரே ஒரு முறை நீட்டி பணம் வாங்கிவிட்டால் ஐந்து ஆண்டுகள் எதுவுமே செய்ய முடியாத கொத்தடிமைகள் ஆகி விடுகிறோம் என்பதை உணர வேண்டும் இவர்களுடைய ஏழைமையை/ அறியாமையை /யார் வந்தால் நமக்கென்ன எப்படி போனால் என்ன நமக்கு பணம் தான் கொடுத்து விட்டார்களே அது போதாதா என்ற பொறுப்பின்மையை /அலட்சியத்தை/ இவர்களுடைய பலவீனத்தை இப்படி பயன் படுத்த அனுமதிக்கவே கூடாது.. மேலும் இவர்கள் தவறால் நேர்மையாக வேட்பாளரின் தகுதிகள் என்ன என்று சிந்தித்து ஓட்டு போடும் மற்றவர்களும் /நேர்மையான வேட்பாளர்களும் மிகவும் பாதிக்க படுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Balaraman Madhavan - Chennai,இந்தியா
20-பிப்-201718:05:55 IST Report Abuse
Balaraman Madhavan இன்று Feb 20
Rate this:
Share this comment
Cancel
kumar - chennai,இந்தியா
20-பிப்-201717:31:19 IST Report Abuse
kumar எனக்கென்னமோ திமுக வுக்கு இவ்வளவு MLA க்கள் இருந்தும் அது சோபிக்க வில்லை. ஸ்டாலின் திறமை அவ்வளவுதான். கருணாநிதி இருந்தால் ஒரு கலக்கு கலக்கி இருப்பர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X