மரியாதைக்கு பேரு போன ஊரு... மானம் காத்த மூணு பேரு!

Added : பிப் 21, 2017 | கருத்துகள் (1)
Share
Advertisement
மரியாதைக்கு பேரு போன ஊரு...  மானம் காத்த மூணு பேரு!

அவிநாசி சாலையில், கூட்டம் அதிகமில்லாத ரெஸ்டாரன்ட்டில், சோர்வோடு அமர்ந்திருந்தாள் சித்ரா. சுற்றிலும் யாரும் இல்லை; அமைதியைக் குலைத்து, கேள்வி கேட்டாள் மித்ரா.
''என்னக்கா...ஏதோ கப்பல் கவிழ்ந்தது மாதிரி சோகமா இருக்க?,'' என்றாள்.
'கவிழலையேன்னு தான் சோகமே' என்று கண்ணடித்த சித்ரா, ''அடுத்த நாலு வருஷமும் இப்பிடியே போயிருமான்னு வருத்தமா இருக்கு,'' என்றாள்.
''இப்பிடியே போனா பரவாயில்லையே. இன்னும் மோசமாயிரும்; லஞ்சம், அராஜகம் எல்லாமே அதிகமாயிரும். யாரும், எதையும் கேட்க முடியாது. நம்ம ஊர்ல இருக்குற இதிகாச வில்லனோட ஆட்டம், இரட்டிப்பாயிரும். நம்ம வருத்தப்படுறதுக்கு, இன்னும் காலமும், பல காரணங்களும் இருக்கு. இப்பவே நீ இவ்ளோ வருத்தப்படத் தேவையில்லை,'' என்று விரக்தியும், வேடிக்கையுமாகப் பேசினாள் மித்ரா.
''மித்து! நீ சொல்றியே... அந்த இதிகாச வில்லன் தான், கொங்கு எம்.எல்.ஏ.,க்களை எல்லாம் பகிரங்கமா மெரட்டுனாராம். நம்மூரு எம்.எல்.ஏ.,க்கள் பலர், ஒண்ணா சேர்ந்து ஓ.பி.எஸ்., பக்கமா போலாமான்னு பேசிட்டு இருந்திருக்காங்க. அது தெரிஞ்சு, அந்த வில்லனும், வில்லனோட அடியாட்களும் சேர்ந்து, ஒருத்தரை கை வச்சுட்டதாக் கூட ஒரு தகவல் நம்மூரு ரத்தத்தின் ரத்தங்கள்ட்ட பரவிட்டு இருக்கு,'' என்றாள் சித்ரா.
''அது தெரியலை. ஆனா, மெரட்டலுக்கு பயந்து மட்டுமே, 'பினாமி ஆட்சி'யை இவுங்க ஆதரிச்சதா நினைச்சா, அது நம்ம முட்டாள்தனம். இப்போ கிடைக்கிறதை வாங்கிக்குவோம்; ஆட்சி இருக்குற வரைக்கும் அள்ளுவோம்; அப்புறமா, காசைக் கொடுத்து, மக்களைச் சமாளிச்சுக்கலாம்னு நினைச்சுதான், கூவத்துார்ல கும்மாளம் போட்ருக்காங்க,'' என்றாள் மித்ரா.
ரெஸ்டாரன்ட் மியூசிக் சிஸ்டத்தில், 'உசுரே போகுதே உசுரே போகுதே' என்று கார்த்திக் கனிந்து உருகிக்கொண்டிருந்தார்.
'இது 'ராவணன்' பட பாட்டு தான மித்து' என்று கேட்ட சித்ரா, ''ஆனா, எதுக்கும் பயப்படாம, எது எதையோ காட்டியும் அதுக்கும் மயங்காம வந்த நம்ம மூணு எம்.எல்.ஏ.,க்களும் உண்மையிலேயே 'கிரேட்' தான்,'' என்றாள்.
''நிஜமாவே செம்ம கெத்து தான்க்கா... மரியாதைக்குப் பேரு போனது, நம்ம ஊரு. ஏதோ இந்த மூணு பேரு தான், காசுக்கு விலை போகாம, நம்ம ஊரு மானத்தைக் காப்பாத்திருக்காங்க. ஆனா, மத்தவுங்க நிலைமை என்ன ஆகுமோ தெரியலை,'' என்றாள் மித்ரா.
''போலீஸ் பந்தோபஸ்து இல்லாம வந்தா, சந்தானம் சொல்றது மாதிரி 'முறைவாசல்' மருவாதி தான்,'' என்று சிரித்தாள் சித்ரா.
இருவரும் கேட்டிருந்த 'சாண்ட்விச்' வந்து சேர்ந்தது; அடுத்ததாக இருவரும் கோல்டு காபிக்கு 'ஆர்டர்' கொடுத்து விட்டு, பேச்சைத் தொடர்ந்தனர். மித்ரா கேட்டாள்...
''மினிம்மா தலைமை பிடிக்கலைன்னு வெளிய வந்தேன்னு சொன்ன அருண் குமார், சட்டசபைக்குப் போய், எதிரா ஓட்டுப் போட்ருக்கலாமேன்னு மக்கள் பேசிக்கிறாங்க,''
''ஆனா, அப்பிடி செஞ்சா, பன்னீர்ட்ட விலை போயிட்டதாப் பேசுவாங்கன்னு பயமா இருந்துச்சாம். கட்சிக்காரங்கள்ட்ட பேசி, முடிவெடுத்துக்குவோம்னு தான், ஊருக்குக் கிளம்பி வந்துட்டாராம்,''
''அதுவும் சரி தான்...சிட்டிக்குள்ள பன்னீருக்கு தான் பெரும்பான்மை ஆதரவு இருக்குறதாத் தெரியுது. வர்ற 24ம் தேதியன்னிக்கு, ஜெ.,பிறந்தநாளுக்கு யாருக்கு என்ன பலம்னு தெரிஞ்சுடும்''
''ஆனா, சிட்டிக்குள்ள இடைப்பாடிக்கு வேண்டிய போலீஸ் ஆபீசருங்க நிறைய்யப் பேரு இருக்காங்களாம். எம்.பி. எலக்ஷனப்போ, குன்னுாருக்கு போலீஸ் ஜீப்புல 10 கோடி ரூபாயைக் கொண்டு போனாரே, ஒரு அசிஸ்டென்ட் கமிஷனரு. அவரு தான், ரொம்ப நெருக்கமாம். அத்தனை பேருமே 'வெயிட்'டான ஏரியாவுல வலுவா சம்பாதிச்சிட்டு இருக்காங்க. அவுங்களை வச்சு, மெரட்டுற வேலை எல்லாம் இனிமே நடக்கும்,'' என்றாள் சித்ரா.
''இவருக்காவது, 'பினாமி'யைத்தான் தெரியும்; ஆனா, சரவணம்பட்டியில இருக்குற ராசகுமாரன், 'அவுங்க எனக்கு நிஜமாவே சின்னம்மா'ன்னு சொல்லிட்டு, எல்லாரையும் மெரட்டிட்டுத் திரியுறாராமே,'' என்றாள் மித்ரா.
காபி வந்தது. லேசாக உறிஞ்சிப் பார்த்த சித்ரா, 'ஸ்ஸ்ஸ்...செம்ம சில்' என்றபடி தொடர்ந்தாள்.
''மித்து... சிட்டிக்குள்ள மறுபடியும் மூணாம் நம்பர் லாட்டரி, கொடிகட்டிப் பறக்குது. கோவில்மேடு, இடையர்பாளையம், கேஎன்ஜி புதூரு, கவுண்டம்பாளையம், கணுவாய்ல பல இடங்கள்ல பகிரங்கமா விக்கிறாணுக. செந்தில், ரவின்னு ரெண்டு பேரு தான் இதை நடத்துறானுகளாம். ரெண்டு ஸ்டேஷனுக்கும் மாசாமாசம் லட்சக்கணக்குல மாமூல் போகுதாம்''
''ஆமாக்கா... நானும் கேள்விப்பட்டேன்; காலையில டிக்கெட்டை வித்து, சாயங்காலம் 3:30 மணிக்கு, கேரளாவுல இருந்து ரிசல்ட் தர்றாங்களாம். கடைசி மூணு நம்பர் இருந்தா, 25 ஆயிரம் கொடுப்பாங்களாம். அதான''
''அதே தான். ஒரு டிக்கெட் 60 ரூபா மித்து... கட்டட வேலை, கூலி வேலைக்குப் போற ஆளுங்கதான் பல பேரு, பாதியை லாட்டரிக்குக் கொடுத்துட்டு, மீதியை டாஸ்மாக்ல கொடுத்துட்டு, குடும்பத்தைத் தெருவுல நிறுத்த விடுறாங்க,''
''டாஸ்மாக்ன்னு சொன்னதும், எனக்கு பழையபடி, நம்ம ஆளுங்கட்சி பாலிடிக்ஸ் ஞாபகம் வந்துருச்சு. நம்மூரு கருப்பு எம்.எல்.ஏ., ஒருத்தர் தான, இந்த 'பார்' மேட்டர் எல்லாத்தையும் பாத்துக்கிறாரு. இப்போ, அருண்குமாரு தன்னோட மாவட்டம் பதவியை ராஜினாமா பண்ணிட்டதால, அந்தப் பதவிக்கு குறி வச்சிருக்காராம். அப்புறம், மாவட்டத்துக்கு வர்ற மாமூலும் தனக்கே வந்துரும்னு கணக்குப் போடுறாராம்,'' என்றாள் மித்ரா.
''அவரு எல்லாம் பண்ணுவாரு...ஊருக்குள்ள வந்து தைரியமா பிரஸ்மீட் கொடுத்த முதல் ஆளு அவரு தான். மொபைல்ல வாய்க்கு வந்தபடி, அவரைத்
திட்டுனதெல்லாம் தி.மு.க.,காரங்கன்னு அள்ளி விட்ருக்காரு,'' என்றாள் சித்ரா.
''அவரு அதை மட்டுமா அள்ளி விட்ருக்காரு. வந்த ரிப்போர்ட்டர்ஸ், போட்டோகிராபர்க பல பேருக்கு, காசையும் அள்ளி விட்ருக்காரு. நாளைக்கு எங்கேயாவது 'முதல் மரியாதை' கிடைச்சா, படம், நியூஸ் போடாம இருக்குறதுக்கு போல'' என்ற மித்ரா, தனது 'வாட்ஸ் ஆப்'பில் வந்திருந்த ஒரு படத்தை எடுத்து, சித்ராவிடம் காட்டிக் கொண்டே படவிளக்கமும் சொன்னாள்...
''நம்ம கார்ப்பரேஷன் இளந்தாரி ஆபீசரு, சிங்கப்பூரு போயிட்டு வந்ததும், 'கபாலி' ரஜினி படத்துல அவரு முகத்தை 'ஒட்டிங்' வேலை பண்ணி, 'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'ன்னு 'டயலாக்' வேற போட்ருக்காங்க. அவரு 'அட்மின்'னா இருக்குற 20, 25 குரூப்லயும் இந்த படம் 'வைரலா' போயிருக்கு''
''அந்த கூத்தை ஏன் கேக்குற மித்து... அவரு எந்த குரூப்ல என்ன 'மெசேஜ்' போட்டாலும், உடனே அதுக்கு கைதட்டி படம் போடுறதுக்குன்னே பெரிய 'ஜால்ரா' கூட்டம் இருக்கு. இதைப் பார்க்கச் சகிக்காமலே, வி.ஐ.பி.,ங்க சில பேரு, அந்த குரூப்களை விட்டு 'லெப்ட்' ஆயிட்டாங்க''
''கார்ப்பரேஷன்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சு... நம்ம கார்ப்பரேஷன் ஸ்கூல்ல டென்த், பிளஸ் 2 புள்ளைங்களை, போன சனிக்கிழமையன்னிக்கு, கலையரங்கத்துல கார்ப்பரேஷன் நடத்துன 'ஸ்மார்ட் சிட்டி' கண்காட்சிக்கு கூப்பிட்டுப் போயி, அரை நாளை 'வேஸ்ட்' பண்ணிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''அவுங்களுக்கு நேத்து பிராக்டிக்கல் எல்லாம் இருந்துச்சே,'' என்று கேட்டாள் சித்ரா.
''ஆமாக்கா... அதெல்லாம் பார்க்காம, அவுங்களைக் கூப்பிட்டுப் போனது மட்டுமில்லாம, தவிச்ச வாய்க்கு ஒரு தண்ணி கூட கொடுக்காம அனுப்பிருக்காங்க. நம்ம 'டெபுடி மேடம்', அந்த குழந்தைங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கன்னு சொல்லிருக்காங்க. ஆனா, ஆபீசர்க எதுவுமே வாங்கித் தரலையாம்,'' என்றாள் மித்ரா.
''மித்து... கலெக்டர் ஆபீஸ்ல, ரெண்டு பேரு அடிச்சிக்கிட்டதா வீடியோ வந்துச்சே. பட்டா விவகாரத்துல வந்த காசை பங்கு பிரிக்கிறதுல நடந்த அடிதடியாமே. இதெல்லாம் தாசில்தார்களுக்குத் தெரியாமலா நடக்கும்,'' என்றாள் சித்ரா.
''நம்ம டிஸ்ட்ரிக்ட்ல இப்போ பட்டா பேரு மாத்துறது, பட்டா தர்றதுலதான், வி.ஏ.ஓ.,க்களும், தாசில்தார்களும், சர்வேயர்களும் மனசாட்சியே இல்லாம, மானாவாரியா காசு பறிக்கிறாங்க. கீழ இருக்கிறவுங்க, தாசில்தார்களுக்கு 'கப்பம்' கட்டணும்; அவுங்க மாசாமாசம் பெரிய ஆபீசருக்குக் காணிக்கை செலுத்தணும். அந்த 'ஹரிபரி'ல நடக்குறது தான் இந்த மாதிரி அடிதடி,'' என்றாள் மித்ரா.
''மித்து...நாளைக்கு நடக்குற தி.மு.க., உண்ணாவிரதத்துக்கு, கூட்டம் சேக்கிறதுக்கு, யாரு செலவழிக்கிறதுன்னு உடன் பிறப்புகளுக்குள்ள உரசல் உருமி அடிக்குதாமே,'' என்றாள் சித்ரா.
பில் வந்தது; இருவரும் பேச்சுக்கு இடைவெளி விட்டு, புறப்படத் தயாராயினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
21-பிப்-201718:08:14 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam After reading the imaginary conversation between Chitra and Mitra we are ashamed how the society has become and how these people earn money without caring to show a modicum of integrity and decency.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X