அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலாவின் முதல்வர் கனவு
கலைத்த வழக்கின் பின்னணி

கடந்த, 2013 வரை அமலில் இருந்த மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8 - 4ன் படி, மக்கள் பிரதிநிதிகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றாலும், 90 நாட்களில் மேல்முறையீடு செய்வதன் மூலம், பதவி இழப்பிலிருந்து தப்பிக் கலாம். இதனால், வழக்குகளில் தண்டனை பெற்ற பலர்,

சசிகலாவின் முதல்வர் கனவு கலைத்த வழக்கின் பின்னணி

பதவிகளில் தொடர்ந்தனர். வழக்குகளை இழுத்தடித்தனர். 2005ல் வழக்கறிஞர் லில்லி தாமஸ், சுக்லா ஆகியோர், இச்சட்டப் பிரிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம்,'மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8- 4, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோத மானது என்ப தால், அது செல்லாது' என, கூறியது. இதனால், இரண்டு

ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர் கள், தண்டனை அனுப வித்த காலத்தில் இருந்து, ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் மூலம், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., செல்வகணபதி உள்ளிட்டோர், தகுதி நீக்கம் செய்யப் பட்டனர். லாலு பிரசாத்தை காப்பாற்றும் முயற்சி யாக, அப்போதைய காங்., அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால், காங்., துணை தலைவர் ராகுல் எதிர்ப்பால், இச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இதன்பின், 2014ல், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக, இந்தியாவிலேயே பதவி இழந்த முதல் முதல்வர் என்ற பெயரை, ஜெயலலிதா பெற்றார். தற்போது, சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பு, கவர்னர் வித்யாசாகர் ராவின் தாமதம் போன்ற காரணங்களால், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தும், சசிகலா முதல்வராக பதவியேற்பது தள்ளிப் போனது.ஒருவேளை அவர் பதவியேற்றிருந்தால், குற்ற வழக்கில் தண்டனை பெற்று, பதவியை

Advertisement

இழந்த இரண்டாவது முதல்வர் என்ற பெயர் கிடைத்திருக்கும்.

சசிகலா இன்னும் அனுபவிக்க வேண்டிய மூன்றரை ஆண்டுகள் தண்டனையை முடித்து விட்டு, நடப்பு, அ.தி.மு.க., ஆட்சியிலேயே வெளியில் வந்து விடுவார். இருப்பினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தண்டனை அனுபவித்த நாளில் இருந்து, மேலும், ஆறு ஆண்டுகள் அவர், தேர்தலில் போட்டியிட முடி யாது. வரும், 2027ம் ஆண்டில், அரசியல் சூழல் அவருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், தேர்தலில் போட்டியிடலாம்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
22-பிப்-201718:50:37 IST Report Abuse

Tamilnesan சைக்கிள் ரிஃஷாவிற்கு காசு கொடுக்க முடியாதவர் தற்போது பல ஆயிரம் கோடிகள் சொந்தக்காரர்...... இந்தியாவில் மட்டுமே நடக்கும் அதிசயம்........ வாழ்க போலி ஜனநாயகம் வெல்க திருடர்கள் கூட்டம்.....

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
22-பிப்-201715:26:18 IST Report Abuse

Endrum Indianஆல கால விஷம், கார்கோடக விஷம் இவை யாவும் யாருக்கும் மறப்பதில்லை, அது போலவே இந்த பெயரும்.

Rate this:
nimmi - Dindigul,இந்தியா
22-பிப்-201713:48:55 IST Report Abuse

nimmi2027-ஆம் ஆண்டிற்குள் அப்புறம் பார்க்கலாம்.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X