அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பொதுச்செயலர் பதவியில் சசிகலா நீக்கம் :
பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்

கோவை: 'அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலராக உள்ள சசிகலாவை நீக்கி விட்டு, பொதுவான நபரை தேர்வு செய்ய வேண்டும்' என, கோவையை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பொதுச்செயலர் பதவியில் சசிகலா நீக்கம் : பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்

அதிருப்தி : அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலராக சசிகலாவை, கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்து அறிவித்தனர்; இதை அடிமட்ட தொண்டர்கள் ஏற்கவில்லை. பொதுமக்கள் மத்தியிலும்அதிருப்தியே நிலவுகிறது.கட்சி

விதிகளை மீறி துணை பொதுச் செயலராக, தினகரனை நியமித்ததை கட்சியினரும் விரும்பவில்லை.
கோவையை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது: சசிகலாசிறையில் உள்ளார்.இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும். சிறையில் இருந்தபடி, கட்சி பணியாற்று வது சாத்தியமற்றது. துணை செயலர் பதவி, கட்சி விதிமுறைக்கு முரணானது.

பன்னீர்செல்வம் அணி, இடைப்பாடி அணி என, இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டால் கட்சி பிளவுபட்டு விடும்; இரட்டை இலை சின்னமும் முடங்கி விடும். விரைவில்,உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டி யிருப்பதால், மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை போக்க கட்சியினரை ஒருங்கிணைக்க வேண்டும்.

ஜெ., இருந்த இடத்தில், பன்னீர்செல்வமோ, பழனி சாமியோ யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்.

Advertisement

எங்களது கருத்துகட்சியை கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல ஒருவர் தேவை. பொது செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி, பொதுவான நபரை நியமிக்க வேண்டும். அவரது வழிகாட்டுதலில் கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும். எங்களது கருத்தை, கட்சி நிர்வாகி களிடம் தெரிவித்துஇருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
22-பிப்-201722:48:26 IST Report Abuse

Ayathuray Rajasingamதமிழ் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். கிரிமினல்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழ் மக்கள் இனியாவது விழித்தெழுந்து பார்க்க வேண்டும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்து நிதானமாக சிந்தித்து செயற்றப்படவேண்டும். தானத்தில் சிறந்தது நிதானம் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடலாகாது.

Rate this:
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
22-பிப்-201721:13:26 IST Report Abuse

மு. தணிகாசலம் மக்களால் வெறுக்கப்படும் சசிகலாவை அ.தி.மு.க. வின் அடிமட்ட தொண்டர்களின் விருப்பப்படி, பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்க வேண்டும். உண்மையிலேயே, சசிகலா "சின்னம்மா" என்று அழைக்கப்படுவதை காதுகொடுத்து கேட்கும் பெரும்பாலோனோர் உடலின் நவதுவாரங்களிலும் எரிச்சல் ஏற்பட்டுவிட்டதை போலவே முகம் சுழிக்கிறார்கள். சசிகலாவுக்கும் கட்சிக்கும் நல்லது செய்ய நினைத்தால் 'சின்னம்மா' என்ற வார்த்தையை எவரும் உச்சரிக்கக்கூடாது. சசிகலா அன் கோ கட்சிக்குள் விட்டுவைக்கப்பட்டிருப்பது என்பது, பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பதற்கு ஒப்பாகும்.

Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
22-பிப்-201721:08:52 IST Report Abuse

Dr.C.S.Rangarajanதவறுகளும், குற்றங்களும் பெருகி மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் தடைபட்டுபோவதற்கு காரணம் சட்டங்களை குற்றத்தில் ஈடுபடுவோர் சரியாக புரிந்துகொள்ளாதது தான் எனக்கொள்ளமுடியாது சட்டங்களை சரியாக புரிந்து கொண்டதனாலும், சட்டங்களில் இருக்கும் ஓட்டைகள் யாவை என அவைகளில் அதிக கவனம் செலுத்துவதனாலும் தான் என்கிறார் Theodore Caplow என்ற சமூகவியல் வல்லுநர். இதில் ஆச்சர்யப்படவேண்டியது என்னவென்றால், சட்டம் இயற்றுவது எந்தக்கரங்களோ, அந்தக்கரங்களே சட்டத்தை சுயலாபத்திற்காக தவிடுபொடி ஆக்கின்றனர். அவர்களுக்கு சட்டம் தெரியாதா என்றால், சத்தியமாக சொல்கின்றேன் அவர்களுக்கு தெரிந்தது நேர்மையையும், சத்தியத்தையும் வாழ்க்கை முறை, நெறி என பொதுமக்கள் நம்புபவைகள் அல்ல.அரசியல் ஒரு சிறுதொழில் எல்லையற்ற லாபங்களை ஈட்ட எந்தஒரு முதலீடும் இல்லாமலே.

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X