சசி அடைபட்டுள்ள சிறை முன் அ.தி.மு.க.,வினர் தவம்... துவங்கியது! | சசி அடைபட்டுள்ள சிறை முன் அ.தி.மு.க.,வினர் தவம்... துவங்கியது!:அனுமதி மறுப்பால் காத்திருந்த மந்திரிகள் ஏமாற்றம்:அரசு நிர்வாகம் முடங்குவதாக நடுநிலையாளர்கள் எரிச்சல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசி அடைபட்டுள்ள சிறை முன் அ.தி.மு.க.,வினர் தவம்... துவங்கியது!:அனுமதி மறுப்பால் காத்திருந்த மந்திரிகள் ஏமாற்றம்:அரசு நிர்வாகம் முடங்குவதாக நடுநிலையாளர்கள் எரிச்சல்

சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறை முன், அவரால் பதவி பெற்ற, அ.தி.மு.க.,வினர்,
தவம் கிடக்க துவங்கி உள்ளனர்.

சசி அடைபட்டுள்ள சிறை முன் அ.தி.மு.க.,வினர் தவம்... துவங்கியது!:அனுமதி மறுப்பால் காத்திருந்த மந்திரிகள் ஏமாற்றம்:அரசு நிர்வாகம் முடங்குவதாக நடுநிலையாளர்கள் எரிச்சல்

சசிகலாவை சந்திக்க, நேற்று, சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், காத்திருந்த அமைச்சர் கள் ஏமாற்றமடைந்தனர். சசிகலாவை சந்திப்ப தற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட, அ.தி.மு.க., வினர், இப்படி பெங்களூரு சிறை வாசலில் மணிக்கணக்கில் காத்து கிடப்பதால், தமிழகத் தில், அரசு நிர்வாகம் முடங்குவதாக, நடுநிலை யாளர்கள் எரிச்சலடைந்து உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு அடுத்த, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சசிகலாவை காண்பதற்காக, அவரால் பதவி

பெற்ற அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், வந்தபடி உள்ளனர். அனுமதி கிடைக்காததால், சிறை வாசலில் தவம் கிடக்கின்றனர்.

சசிகலாவை பார்க்காவிட்டால், பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தினால், காத்து கிடக் கின்ற னர்.அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லுார் ராஜு ஆகியோர், நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்; அவர்களை, போலீசார் உள்ளே விட மறுத்தனர்.

திட்டவட்டம்


செங்கோட்டையன் கார் டிரைவர், ''இவர்களை யார் என்று நினைத்தீர்கள்; தமிழகத்தின், 'கேபினட்' அமைச்சர்கள்,'' எனக்கூறி, வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதை கேட்ட போலீசார், எரிச்சலுடன், 'இங்கு என்ன அமைச்சரவைக் கூட்டமா நடக்கிறது?' எனக் கேட்டதுடன், 'உள்ளே அனுமதிக்க முடியாது' என,திட்டவட்ட மாக தெரிவித்தனர்.

இந்த வாக்குவாதம், 10 நிமிடம் நீடித்தது. இறுதி வரை, போலீசார் அனு மதி அளிக்காததால், அமைச்சர்கள் ஏமாற்றத்து டன், தாங்கள்

Advertisement

தங்கி யிருந்த ஓட்டலுக்கு திரும்பினர். பின், கர்நாடக போலீசார், அந்த ஓட்டலுக்கு சென்று, செங்கோட்டையன் கார் டிரைவரிடம் விசாரித் தனர். 'போலீசையே மிரட்டுகிறாயா... எச்சரிக்கையாக இருக்கவும்' என்றனர்.

இதற்கிடையில், சசிகலாவை பார்ப்பதற்காக, கோகுல இந்திரா, வளர்மதி ,சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும், நேற்று சிறைக்கு வந்தனர். அவர்கள் வருகை குறித்து, சிறை ஊழியர்கள், சசிகலாவிடம் தெரிவித்தனர். அவர், 'நான் அவர்களை பார்க்க விரும்ப வில்லை' என, கூறியுள்ளார். அந்த தகவலை, மூன்று பேரிட மும் தெரிவித்தனர். அதனால், கவலை அடைந்த மூவரும், அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

ஆபாச பேச்சு:


அப்போது, கோகுல இந்திராவுக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. அவர், போனை வளர்மதியிடம் கொடுத்தார்.அவர், போனில் பேசிய நபரை, ஆபாச வார்த்தை களால் திட்டி தீர்த்து விட்டு, போனை, 'கட்' செய் தார். பின், மூன்று பேரும் அங்கிருந்து புறப்பட்ட னர்.

நீண்ட இழுபறிக்கு பின், புதிய அரசு அமைந்துள் ளது. அடுத்து பட்ஜெட் தயாரிப்பு வேலைகளை துவக்க வேண்டும். ஆனால், அரசு பணிகளை கவனிக்காமல், அமைச்சர்கள், சசிகலாவை காண சிறை வாசலில் தவம் கிடப்பது, நடுநிலை யாளர் களிடம் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலாவுக்கு சொகுசு அறை!


சாதாரண தண்டனை கைதிகளாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி, சசிகலா, இளவரசி இருவரும், தனி அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்புக்கு, மகளிர் போலீசார் நியமிக்க பட்டு உள்ளனர். சுதாகரன், ஆண்கள் பிரிவில் வைக்க பட்டு உள்ளார்.

பாதுகாப்புக்கு, சிறப்பு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். சாதாரண அறையில் இருந்த சசிகலா, இளவரசிக்கு, நேற்று, 'ஏ கிளாஸ்' எனப்படும், சொகுசு அறை கொடுக்கப்பட்டது.

இந்த அறையில், 'டிவி' இருக்கும்; தலா, ஒரு கட்டில், ஒரு மெத்தை, தலா இரண்டு பெட்ஷீட், ஒரு தலையணை வழங்கப்படும்; படிப்பதற்கு, இரண்டு நாளிதழ்கள் கொடுக்கப்படும்; வெளி யிலிருந்து உணவு வகைகள்,பழங்கள் கொண்டு செல்லவும், அனுமதி வழங்கப்படும்.ஆண்கள் பிரிவில், மற்ற கைதிகளுடன் அடைக்கப் பட்டுள்ள சுதாகரனுக்கு, இது போன்ற எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (139)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
22-பிப்-201721:20:06 IST Report Abuse

Mahendran TCவௌக்குமாத்தால நாலு சாத்து சாத்தோணும் இந்த நாதாரிகளை.

Rate this:
k. kandaswamy - karaikal,இந்தியா
22-பிப்-201719:05:52 IST Report Abuse

k. kandaswamyசிறையில் சிறப்பு வசதி செய்து கொடுப்பதை உச்ச நீதிமன்றம் தான் தலையிட்டு தடுக்க வேண்டும். குன்ஹா தீர்ப்பு குறையில்லாமல் நிறைவேற வேண்டும்.

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
22-பிப்-201718:53:08 IST Report Abuse

Chandramoulliஇந்த மாதிரி கழிசடைகளை பற்றிய செய்திகளை எல்லோரும் தவிர்க்க வேண்டும். எல்லோரும் ஈன பிறவிகள்.

Rate this:
மேலும் 136 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X