சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.எஸ்., இயக்கத்திற்கு நிதி திரட்டும் சென்னை கும்பல் : பிடிபட்ட வாலிபன் அதிர்ச்சி தகவல்

Added : பிப் 21, 2017 | கருத்துகள் (8)
Advertisement
ஐ.எஸ்., இயக்கத்திற்கு நிதி திரட்டும் சென்னை கும்பல்  : பிடிபட்ட வாலிபன் அதிர்ச்சி தகவல்

சென்னை: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, கோடிக்கணக்கில் நிதி திரட்டிய, சென்னை வாலிபன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும், நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், 2016 நவம்பரில், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜமீல் முகமது, 33, என்பவனை கைது செய்தனர். அவனது வாக்குமூலத்தில், 'சென்னை, மயிலாப்பூர், பஜார் லேன் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா முகமது இக்பால், 32, என்பவனுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இக்பால், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு கோடிக்கணக்கில் நிதி திரட்டி வருகிறான்' எனக் கூறி உள்ளான். இதையடுத்து, நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, இக்பாலை தேடும் பணி நடந்து வந்தது. மத்திய, மாநில உளவு போலீசாரும், அவனை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், இம்மாதம், 8ம் தேதி, சென்னையில் இருந்து விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்திய வழக்கில், இக்பாலை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்து, புழல் சிறையில் அடைத்து இருந்தனர். அவன் அளித்த வாக்குமூலத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, ஹவாலா மூலம் கோடிக்கணக்கில் பணம் திரட்டி வந்ததை, ஒப்புக் கொண்டுள்ளான். இக்பால் கைதாகி இருக்கும் தகவல் கிடைத்ததும், ஜெய்ப்பூர் போலீசார், சென்னை விரைந்து வந்தனர். இக்பாலை, காவலில் எடுத்து, ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவன், சென்னையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, முக்கிய புள்ளிகள் நான்கு பேர் நிதி திரட்டி வரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளான். அவர்களின் பெயரையும், போலீசாரிடம் தெரிவித்து உள்ளான். இதையடுத்து, நேற்று காலை, 8:00 மணிக்கு, இக்பாலை, ஜெய்ப்பூர் போலீசார் மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவனை, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அடைத்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இக்பால் நீண்ட நாட்களாகவே, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, நிதி திரட்டி வந்துள்ளான். அவனுக்கு, 'பேஸ்புக், டுவிட்டர், விசாட்' போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக, ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தொடர்பு கிடைத்து உள்ளது.முதலில், ஐ.எஸ்., இயக்கத்தின் கமாண்டரான, அபு அல் சுதானி என்பவன், இக்பாலுக்கு பழக்கமாகி உள்ளான். சமூக வலைதளங்கள் வாயிலாக, இக்பாலிடம் பேசி வந்த அவன், எவ்வாறு நிதி திரட்ட வேண்டும் என, பாடம் நடத்தி உள்ளான். சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரிடம் இருந்து, ஐ.எஸ்., இயக்கத்துக்கு, இக்பால் நிதி திரட்டி கொடுத்துள்ளான். இக்பால், சிரியா சென்று ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. அவன், ஒருமுறை துருக்கி வழியாக, சிரியா செல்ல முயற்சித்து, தோல்வியில் முடிந்ததும் தெரிய வந்துள்ளது. அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
22-பிப்-201718:45:40 IST Report Abuse
அம்பி ஐயர் சின்னம்மா கோஷ்டிகள் வந்த பின்னால் அவர்கள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்....
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
22-பிப்-201718:44:38 IST Report Abuse
வெற்றி வேந்தன் அமைதிக்கான மார்க்கம் என்று ஆரம்பிக்கப்பட்டது கடைசியில் தன்னை தானே அழித்து கொண்டு மாளும் நிலைக்கு வந்திருக்கிறது. என் பொருட்டு இஸ்லாம் அழியும் என்று நபிகள் சொன்னது நிஜமா?
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-201718:24:52 IST Report Abuse
Yaro Oruvan இது ஆர் எஸ் எஸ் சதி... இப்படிக்கு திக்கு விஷ(ய) சிங்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X