பொது செய்தி

தமிழ்நாடு

தானே கழுத்தறுத்து பலி கொடுக்கும் "நவகண்டம்' பழநியில் கண்டுபிடிப்பு

Added : ஜன 22, 2011
Advertisement

பழநி : வேண்டுதல் நிமித்தமாக தானே கழுத்தறுத்து பலி கொடுக்கும், கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த "நவகண்டம்' சிலை பழநியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பழநி பெரியநாயகியம்மன் கோயில் அருகே உள்ள விநாயகர் கோயிலில், 100 செ.மீ., சுற்றளவு, 73 செ.மீ., உயரத்துடன் இச்சிலை உள்ளது. ஒரு வீரன் நின்ற நிலையில், ஒரு கையில் தலைமுடியை பற்றிக் கொண்டு, மற்றொரு கையில் நீண்ட வாள் மூலம் கழுத்தை அறுத்த நிலையில் காட்சியளிக்கிறது. இதுதொடர்பாக தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: தன் கழுத்தை தானே அறுத்து, பலியிடும் சிற்பம் "நவகண்டம்' என வழங்கப்படுகிறது. உயிர்ப்பலியின் உச்சகட்ட பலியாக, இதைக் கூறுவர். பொதுவாக நவகண்டப் பலி, கொற்றவை தெய்வத்திற்கு வழங்கப்படும். பழநியில் விநாயகர் கோயிலில் இச்சிலை இருந்தபோதும், கோயிலுக்கும், சிலைக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. வேறு ஏதேனும் ஒரு இடத்தில் உள்ள கொற்றவை கோயிலில், இந்த நவகண்டம் நிகழ்ச்சி நடந்திருக்கலாம். காலப்போக்கில் இதை, இக்கோயிலில் கொண்டு வந்து வைத்திருக்கலாம். நவகண்ட வீரனின் முகம் முற்றிலும் சிதைந்துள்ளது.


சிற்ப அமைதியைப் பொறுத்து, கி.பி.13 அல்லது 14ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். சிலையில் வேறு எந்த தகவலும் இல்லாததால், இவ்வீரனின் நவகண்டப் பலிக்கான காரணம் தெரியவில்லை. நவகண்டப்பலி குறித்த தகவல்கள், கல்வெட்டுகள் மட்டுமின்றி சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, தக்கயாக பரணி போன்ற இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளது.ஏதேனும் ஒரு வேண்டுதல் நிமித்தமாக, தன்னைத் தானே பலி கொடுக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஒரு குடும்பத்திற்காகவோ, கிராமத்திற்காகவோ நவகண்டப்பலி நிகழ்ந்தால், இறப்பவரின் வாரிசுகளுக்கு நிலம் வழங்கும் நடைமுறையும் இருந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X