அரசு வீட்டை காலி செய்யும்படி, பொதுப்பணித் துறை உத்தரவிட்டு உள்ளதால், வீடு தேடும் பணியில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார்.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. ஜெ., முதல்வரானார். அவரது அமைச்சரவையில், நிதி அமைச்சராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். அவருக்கு, சென்னை, கிரீன்வேஸ் சாலையில், பொதுப் பணித் துறைக்கு சொந்தமான அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.
ஜெ., சொத்து குவிப்பு வழக்கில், சிறைக்கு
சென்ற போது, பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போதும், அதே வீட்டில் குடியிருந்தார். 2016 சட்டசபை தேர்தலில்,
மீண்டும், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஜெ., முதல்வரானார். பன்னீர்செல்வம்,
நிதி அமைச்சரானார். எனவே, அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில், தொடர்ந்து குடியிருந்து வந்தார்.
ஜெ., மறைவுக்கு பின், பன்னீர் முதல்வரானார். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியதால், முதல்வர் பதவியை இழந்தார். சசிகலாவை எதிர்க் கும், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரை காண்பதற்காக, தினமும் அவர் வீட்டிற்கு வந்தபடி உள்ளனர்.
எனவே, அவர் குடியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி, பொதுப்பணித் துறை அதிகாரி கள், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர். பன்னீர்தரப்பில், ஆறு மாதம் அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. ஆனால், அது ஏற்கப்பட்டதா என, தெரியவில்லை.
அதற்குள்
வீட்டை காலி செய்து விட வேண்டும் என்பதற்காக, வாடகைக்கு வீடு பார்க்கும்
பணியில், பன்னீர்செல்வம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தொண்டர்கள் வந்து செல்வதற்கு எளிதாக, தற்போது குடியிருக்கும் பகுதியிலேயே, வீடு தேடும் பணி நடந்து வருகிறது.
அதற்கு முன், தன் வீட்டில் ஆசையுடன் வளர்த்து வந்த பசு மாடுகளை, கோவளம் அருகே உள்ள, தன் உறவினர் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். அவருக்கும், அவருக்கு ஆதரவு தெரிவித்த, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கும், எம்.எல்.ஏ., விடுதியில் அறை ஒதுக்கப்படவில்லை. - நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (42)
Reply
Reply
Reply