அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., படம் எதற்கு?: ஸ்டாலின் கேள்வி

Added : பிப் 25, 2017 | கருத்துகள் (58)
Advertisement
ஜெயலலிதா, படம், ஸ்டாலின், கிரிஜா வைத்தியநாதன்

சென்னை: ஜெயலலிதா படத்தை அரசு அகற்றாவிட்டால், கோர்ட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

தலைமை செயலகத்தில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்தார்.
பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க விரும்பவில்லை. அவர் மறைந்த தலைவர். அவரை விமர்சனம் செய்வது அரசியல் நாகரீகத்திற்கு எதிரானது.


தவறு:

ஆனால், அவரின் பிறந்த நாள் விழா மக்களின் வரிப்பணத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. கோர்ட்டால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் மறைந்துவிட்ட காரணத்தினால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம் வெளியிடப்பட்டு, முதல்வர் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்துள்ளார். இதில், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இது சட்டப்படி தவறு. நேர்மையான அதிகாரி என பெயரெடுத்துள்ள கிரிஜா வைத்தியநாதன் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதனை நாங்கள் தட்டி கேட்காமல் இருக்க முடியாது.


சட்டத்திற்கு எதிராக:

ஒரு தலைவர் பிறந்த நாளுக்காக கைதிகளை விடுதலை செய்தது போய், குற்றவாளியின் பிறந்த நாளில், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடும்நிலை உருவாகி உள்ளது. முதல்வர் பழனிசாமியும் பதவிப்பிரமாணத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார். ஜெயலலிதா படம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், இனிமேலும் செயல்படுத்தப்படுவதாக இருந்தாலும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.


அகற்றுக:

தலைமை செயலகம், அமைச்சர்கள் அறை, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும். தவறினால், நாங்கள் கோர்ட்டிற்கு செல்லும் நிலை ஏற்படும். குற்றவாளி ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என பொது மக்களும்வலியுறுத்துகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்படும். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை செயலர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu Nambi - madurai,இந்தியா
25-பிப்-201721:50:01 IST Report Abuse
Arivu Nambi ஏன் இந்த அ.தி.மு.க காரர்கள் ஜெயாவைப்போல தவறே செய்யாத சின்னம்மா, அத்தை, மச்சினன் மூவரையும் பரப்பன அக்ராகர பங்களாவில் போய் உக்காருங்கள் என்று சுப்ரீம் கோர்ட் சொன்னதை கண்டிக்கவில்லை ? போராட்டம் நடத்தவில்லை ? ஜெயா குற்றவாளி இல்லையென்றால் ,மற்ற மூவர்களும் குற்றவாளி இல்லைதானே.? அமைச்சர்கள் ,உறுப்பினர்கள் எல்லோருக்கும்தான் கேள்வி...புரியுதா ?
Rate this:
Share this comment
Cancel
ramesh - chennai,இந்தியா
25-பிப்-201721:42:32 IST Report Abuse
ramesh குற்றவாளி என்று உச்ச நீதி மன்றமே தீர்ப்பளித்து விட்டது.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து எழுதுவதால் குற்றவாளி நிரபராதி ஆகி விட மாட்டார்.அவர் சொன்னது சரிதான்.இப்படி சொல்லித்தான் சசிகலாவை பொது செயலாளர் ஆக்கிவைத்து இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
25-பிப்-201721:38:48 IST Report Abuse
Arivu Nambi ஜெயாவுக்கு ஆதரவாக கருத்து எழுதியுள்ள உங்களுக்கும் சேர்த்துதான் மோடி போராடிக்கொண்டிருக்கிறார், அவர் நினைத்திருந்தால்.......... உங்கள் ஜெயாவையும் ,,சசி கூட்டத்தையும் விடுவித்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை........ ஏன்.? ?????.....இத்தனைக்கும் உங்கள் ஜெயாவின் நண்பர் மோடி அவர்கள்..........யோசித்து பார்க்கவும்.........ஸ்டாலின் ,கருணாநிதி மேல் குற்றம் செய்ததற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் சுப்ரீம் கோர்ட் போகலாமே,????? கனிமொழி ,ராஜா திகார் ஜெயிலில் இருந்தவர்கள்தானே???????? ....... உங்கள் பணத்தை கொள்ளையடித்து வாழ்ந்த குற்றவாளி ஜெயா...... உங்கள் அம்மாவா? கருமம்டா. எப்படா நியாயமா யோசிப்பீங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X