பொது செய்தி

இந்தியா

மானம் இல்லாத தமிழர்கள்: கட்ஜூ வேதனை

Updated : பிப் 26, 2017 | Added : பிப் 25, 2017 | கருத்துகள் (149)
Advertisement
மானம் மரியாதை, கட்ஜூ வேதனை

புதுடில்லி: தமிழக முதல்வராக பழனிசாமி நீடிக்கும் வரை நான் தமிழன் என சொல்ல விரும்பவில்லை என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் கட்ஜூ வெளியிட்ட செய்தி:
எனதருமை தமிழர்களே,
சிறைக்கைதி ஒருவரின் கைப்பாவை ஒருவர் உங்களின் முதல்வராக ஆக்கப்பட்டுள்ளார். ஆனால், நீங்கள் எதையும் செய்யவில்லை. நீங்கள் சோழர், பாண்டியன் மற்றும் சேரர்களின் சந்ததியர்கள். முதல்வர் நியமனத்தில் செய்யப்பட்ட சதிக்கு நீங்கள் வீழ்ந்ததை பார்த்து உங்கள் மூதாதையர்கள் அவமானப்படுவார்கள். நீங்கள் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பரின் சந்ததியினர். எந்த எதிர்ப்பும் காட்டாமல், முதல்வரை ஏற்றுக்கொண்டதால், உங்களுக்கு அசிங்கம் ஏதுமில்லையா? நானும் ஒரு தமிழன் என நான் பெருமையாக கூறிவந்தேன். இனிமேல் நான் எந்த முகத்தை வைத்து கொண்டு இதனை சொல்வேன்.
நான் தைரியமாக சொல்கிறேன். பழனிசாமி உங்களின் முதல்வராக நீடிக்கும்வரை நான் தமிழனே அல்ல. அவமானம் மற்றும் மரியாதை பற்றி கவலைபடாமல் வாழும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் நானும் ஒரு உறுப்பினராக இருக்க விரும்பவில்லை. இதற்கு பதில் இறப்பதே மேல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (149)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
26-பிப்-201722:35:25 IST Report Abuse
Dr.C.S.Rangarajan கற்றறிந்தவர்கள் தான் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க நியாயமில்லை. தமிழ்நாட்டில் ஒரு துரும்பு தரையில் விழுந்தாலும் பதறிப்போய் வார்த்தைகளை தமிழர்மீது அள்ளித்தெளிப்பதில் அவசரமோ, தேவையோ என்ன? ஒருவர் 'பொறுக்கிகள்' என்கிறார், மற்றோருவர் 'மானமில்லாதவர்' என்கிறார்? "நம்மோடு சேரத்துடிக்கின்றனரா" நம் பிரச்சினைகளில் அக்கறைகாட்டுவதன் மூலம்? கற்றறிந்த சான்றோரிடமும் 'ஞானவறுமை' வெளிக்காட்டுமோ என எண்ணத்தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
26-பிப்-201720:14:04 IST Report Abuse
Dr.C.S.Rangarajan பகுத்தறிவுக்கு முன்னிடமா, அல்லது உணர்ச்சிக்கு முன்னுரிமையா? உணர்ச்சி அறிவுக்கு ஏற்புடைய செயலுக்கு திரைபோட்டுவிட்டால்,'மானமே' பெரிதென்று கருது வன்முறையில் ஈடுபடலாமா? மானத்தை காத்திடவும், மீட்டெடுக்கவும் 'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்பதுபோல் மாமருந்தை 'மானம் காத்திட' பரிந்துரை செய்ய வேண்டாமா? ஜனநாயகத்தை பணநாயகம் தவிர்த்து மீட்டெடுப்பதற்கு வழிகளை சொல்லுங்கள்? மானத்தை காத்திட மானமற்ற செயல்களில் ஈடுபடும்போதுதான் மானம் விலைபோகும்.
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
26-பிப்-201719:56:27 IST Report Abuse
Dr.C.S.Rangarajan காந்தி அடிகள் கூட சாத்வீகத்தைத்தான் கடைப்பிடித்தார். பலாத்காரமாக முறையை கடைப்பிடிக்கத்தெரியாதவர் அல்ல. புலி பதுங்குவதை வீரமற்றசெயல் என்றுகருத்தமுடியுமா? புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதுபோல், காலம் கனியக்காதிருப்பதுதான் விவேகமாகுமே தவிர 'மானம்' என்பதை தவறாக புரிந்துகொண்டு 'மானமில்லா' செயலை அரங்கேற்றுவதோ, தூண்டுவதோதான் மானமில்லா செயலாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X