நான் உங்க வீட்டு 'மாப்பிள்ளை' - மனம் திறக்கும் கணேஷ்

Added : பிப் 26, 2017
Share
Advertisement
சிரிப்புடன் சிந்திக்க வைப்பதாக நாடகங்களை கொண்டு செல்வதில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழுமிடங்களில் எல்லாம் இவரது நாடகங்களுக்கு தனி வரவேற்பு உண்டு.நாடகமாமணி, மாப்பிள்ளை உட்பட பல்வேறு பட்டங்கள் இவருக்கு மகுடம் சூட்டுகின்றன. தன் நடிப்பால் இயக்குனர்கள் பாலசந்தர், எஸ்.பி.முத்துராமனை கவர்ந்தவர், சத்யசாய் கிரியேஷன்ஸ் நாடக கம்பெனி
நான் உங்க வீட்டு 'மாப்பிள்ளை' - மனம் திறக்கும் கணேஷ்

சிரிப்புடன் சிந்திக்க வைப்பதாக நாடகங்களை கொண்டு செல்வதில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழுமிடங்களில் எல்லாம் இவரது நாடகங்களுக்கு தனி வரவேற்பு உண்டு.நாடகமாமணி, மாப்பிள்ளை உட்பட பல்வேறு பட்டங்கள் இவருக்கு மகுடம் சூட்டுகின்றன. தன் நடிப்பால் இயக்குனர்கள் பாலசந்தர், எஸ்.பி.முத்துராமனை கவர்ந்தவர், சத்யசாய் கிரியேஷன்ஸ் நாடக கம்பெனி நடத்தும் 'மாப்பிள்ளை' கணேஷ். சமீபத்தில் மதுரை தமிழிசை சங்க விழாவில் பங்கேற்க வந்தவருடன் தினமலர் வாசகர்களுக்காக பேசியதிலிருந்து....நாடகம் உங்கள் லட்சியமா?யதார்த்தமாக அமைந்தது. நெல்லையை சேர்ந்தவன் என்றாலும் சென்னையில் குடியேறியவன். பள்ளி படிப்பை முடித்த நிலையில் 1981ல் சென்னையில் நண்பர் ரமணி 'மெரினா' என்ற நாடகத்தில் சாஸ்திரி வேடத்தில் நடிக்க வைத்தார். காஞ்சிபுரத்தில் அரங்கேறிய இந்த நாடகத்தில் ஜெமினி, மகாலிங்கம் போன்றவர்கள் நடித்திருந்தனர்.'மாப்பிள்ளை' ஆனது?இத்துறைக்கு வந்த புதிதில் தொடர்ந்து நாடகங்களில் 'மாப்பிள்ளை' கேரக்டரில் நடித்தேன். அது முதல் 'மாப்பிள்ளை' அடைமொழியுடன் அழைக்க துவங்கினர்.எத்தனை ஆண்டுகள் இப்பயணம்?36 ஆண்டுகளாக இத்துறையில் உள்ளேன். பூர்ணம் விஸ்வநாதன், நாகராஜ அய்யர் ஆதரவுடன் நாடகங்களில் நடித்துள்ளேன். 2001ல் சத்யசாய் கிரியேஷன்ஸ் நிறுவனத்தை துவங்கி நாடகங்களை தயாரித்து நடித்து வருகிறேன்.நகைச்சுவைக்கு முக்கியத்துவம் ஏன்?இன்று நகைச்சுவை நாடகங்களுக்கு பஞ்சம் நிலவுகிறது. சிரிக்க வைப்பது கடினம். நாடகம் பார்க்க வருவோரை சிரிக்க வைப்பதில் நமக்கும் ஒரு திருப்தி. இதனால் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். 15 நாடகங்களை தயாரித்துள்ளேன். 'கலக்குற மச்சி', 'ஆவி வந்த மாப்பிள்ளை', 'சபாஷ் மாப்பிள்ளை', 'காமெடி கல்யாணம்', 'அட கடவுளே' உட்பட 13 நாடகங்கள் காமெடி நாடகங்கள் தான். நாடகம் பார்க்க வருவோர் சிரித்து வாழ்த்தி விட்டு செல்லும் போது மனநிறைவாக இருக்கிறது.நாடகங்களுக்கு வரவேற்பு எப்படி?சின்னத்திரை ஆதிக்கம் இருந்தாலும் கூட நாடகங்கள் மீதான மவுசு குறைந்தபாடில்லை. நாடக விழாக்களில் நடத்தப்படும் நாடகங்களை பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கை குறையவில்லை. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகிறது. டில்லி, கோல்கட்டா, ஐதராபாத் நகரங்களில் நாடகங்களுக்கு ரசிகர்கள் அதிகளவில் வருகின்றனர்.சினிமாக்களில் தொடர்ந்து காணமுடியவில்லையே?எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சாட்சி' படத்தில் விஜயகாந்த் நண்பராக படம் முழுவதும் வருவேன். மரியாதை, சென்னை காதல் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். நாடகத்திற்கு வரவேற்பு இருப்பதால் சினிமாக்களில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை.மறக்க முடியாத பாராட்டு?இயக்குனர் பாலசந்தரின் 'பிரேமி' சீரியலில் முதல் ஷாட்டில் ஒரே 'டேக்'கில் நடித்தேன். பாலசந்தர், தோளில் தட்டி கொடுத்து, 'நல்லா நடிக்கிறாய்' என பாராட்டியதை வாழ்வில் மறக்க முடியாது.எதிர்கால இலக்கு?உயிர் உள்ள வரை நாடகங்களில் நடிக்க வேண்டும்.பாராட்ட: 94441 14552

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X