நான் பாலச்சந்தர் கண்டுபிடித்த குட்டித் தீவு - கிரேஸி மோகன் கலகல

Added : பிப் 26, 2017 | கருத்துகள் (4)
Share
Advertisement
நான் பாலச்சந்தர் கண்டுபிடித்த குட்டித் தீவு - கிரேஸி மோகன் கலகல

'யார் யாருக்கோ போன் பண்றோம் கடவுளுக்கு போன் பண்ணினா எப்படி இருக்கும்...', பிரம்மாவுக்கு ஒரு போன்... டிரிங், டிரிங், டிரிங்... 'ஹலோ நான் பிரம்மா பேசுறேன்', 'என்ன பண்றீங்க பிரம்மா', 'இன்றைய படைப்பு தொழிலை முடித்துவிட்டு முகம் கழுவுகிறேன்', 'நாலு முகத்துல எந்த முகத்தை கழுவுறீங்க பிரம்மா...! 'கிருஷ்ணருக்கு 'கால்' போடுங்க, 'கிருஷ்ணருக்கு 'கால்' போட்டா கோகுலாஷ்டமி...' என்ன வரிக்கு, வரி ஜோக்ஸ் பஞ்ச் இருக்கேன்னு பார்க்குறீங்க... கடந்த வாரம் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த, கிரேஸி கிரியேஷன்ஸின் 'கூகுள் கடோத்கஜன்' நாடகத்தில் வந்த, காமெடிகள் தான் இவை... மேக்கப் போட்டுக் கொண்டிருந்த கிரேஸி மோகனை பிக்கப் பண்ணிய போது பேசிய கலகல நிமிடங்கள் இதோ..
* சினிமா - நாடகம் நகைச்சுவை ?சினிமா நகைச்சுவை, கல்யாண சமையல் மாதிரி சுகர், பிரஷர் என்னை மாதிரி அஜீரணம் இருக்குறவங்க வருவாங்க. அதுக்கு ஏற்ப பார்த்து, பார்த்து சமைக்கணும். காரம் துாக்கல், உப்பு குறைச்சல்னு யாரும் குறை சொல்லப் போறதில்லை. நடிகர்களுக்கு குளோசப் காட்சிகள் இருக்கும். நாடக நகைச்சுவை, வீட்டு சமையல் மாதிரி, நம்ம இஷ்டத்துக்கு சமைக்கலாம். புட் பாய்சனா மாறினாலும் பாதிக்கப் போறது நம்ம தான். இங்கே வாய்சுக்கு தான் குளோசப், டைமிங் முக்கியம். மொத்தத்துல நாடகம் கஷ்டம், சினிமா ரொம்ப, ரொம்ப கஷ்டம்.
* உங்கள் நாடகத்தின் நிரந்தர கதாநாயகன் மாது பாலாஜி...பாலாஜி எனக்கு கிடைச்ச பெரிய சொத்து, சினிமாவுல கமல்ஹாசன் எப்படி டயலாக் பேசுறாரோ, அதே மாதிரி நாடகத்துல பாலாஜி ரொம்ப அருமையா பேசி நடிக்கிறார். இயக்குனர் பாலசந்தரின் 'எதிர் நீச்சல்' படத்துல நாகேஷ், 'மாது'ங்கற கேரக்டர்ல நடிச்சிருப்பார். பாலாஜியும் நாகேஷ் மாதிரி வரணும், நானும் பாலசந்தர் மாதிரி எழுதணும்னு நினைச்சு 'மாதுங்'குற பேரு வைச்சேன். நான் நினைச்ச ரெண்டும் இந்த ஜென்மத்துல நடக்கலை! * உங்கள் நாடகத்தை இயக்கிய பாலச்சந்தர்...என்னோட 'பொய்க் கால்' குதிரை நாடகத்தை அவர் படமா எடுத்தாரு. ரஜினிகாந்த், கமல்ஹாசன்ங்குற பெரிய தீவுகளை கண்டுபிடிச்ச பாலச்சந்தர் என்ற, 'கொலம்பஸ்' தான் கிரேஸி மோகன்ங்குற குட்டி தீவையும் கண்டுபிடிச்சாரு. * கமல்ஹாசன் - கிரேஸி மோகன்...என்னை சினிமாவுக்கு கொண்டு வந்ததே அவர் தான். 'அபூர்வ சகோதரர்கள்' படத்துல ஆரம்பிச்சு இதுவரை, 25 படங்களுக்கு அவருக்காக நகைச்சுவை கதை, வசனம் எழுதியிருக்கேன். என் மனைவிக்கு லெட்டர் எழுதினாக் கூட கமலிடம் படிச்சு காட்டிட்டு தான் போஸ்ட் பண்ணுவேன். ஹீரோ 'இமேஜ்'ல இருந்து இறங்கினாத் தான் காமெடி பண்ண முடியும், அதை திறமையா பண்ணக் கூடியவர் கமல். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின், ஒரு பெண் இருப்பாள். என் வெற்றிக்கு பின் இருப்பது, பெண் வேடமிட்ட ஆண்... அவ்வை சண்முகி...
* 'சபாஷ் நாயுடு' படத்தில் நீங்கள்?கமல்ஹாசன் எந்த படம் பண்ணினாலும் என் கிட்ட பேசுவார், நானும் அவர் கிட்ட சொல்லாம புதுசா எதுவும் செய்யமாட்டேன். 'சபாஷ் நாயுடு' படம் ஆரம்பித்த நேரம் அமெரிக்கா போயிட்டேன், இந்த படத்தை மிஸ் பண்ணிட்டேன்னு வருத்தமா தான் இருக்கு. * காமெடியில் டைமிங்...ரைமிங்... எப்படி?இதெல்லாம் கவிஞர்கள் வாலி, வைரமுத்து கி.வா.ஜகநாதனிடம் கற்றுக் கொண்டேன். கி.வா.ஜ அதாவது 'கிரேஸி வார்த்தை ஜாலம்'னு கூட சொல்லலாம்.
* நீங்கள் ரசிக்கும் இன்றைய காமெடியன்...எங்க நாடக குழுவில் இருந்து சினிமாவுக்கு போன சதீஷ், நல்லா காமெடி பண்றாரு, சின்ன வயசுல அவங்க அப்பா 'என் பையனை பார்த்துக்கோங்'கன்னு, என்கிட்ட விட்டுட்டு போனார். இப்போ பார்க்கவே முடியல அந்த அளவுக்கு பிசியா இருக்கார்.
* 'நான் ஈ' ராஜாமெளலி...தெலுங்கில் 'நான்' ஈ படத்துக்கு 'நீங்க தான் வசனம் எழுதணும்'னு கேட்டார். ஹீரோ யார்ன்ணு கேட்டேன், 'ஒரு ஈ தான் ஹீரோ'ன்னு சொன்னார். அப்போ 'ஈரோ'ன்னு சொல்லுங்கன்னு சொன்னேன். 'இந்த பஞ்ச் தான் எனக்கு வேணும்னு', கையோட அழைச்சுட்டு போயிட்டார்.
* நாடகம் மட்டும் தான் இயக்குவீர்களா?எங்கள் குழுவில் உள்ள 25 குடும்பங்கள் நாடகத்தை நம்பி தான் இருக்காங்க. மேடை நாடகத்தை அழியவிடக் கூடாதுன்னு கவனமா இருக்கேன். வெளிநாடுகளிலும் நாடகம் பண்றோம். அதனால சினிமாவுக்கு கதை, வசனம் மட்டும் எழுதி கொடுத்துவிட்டு, திரும்ப நாடகத்திற்கு ஓடி வந்துடுவேன்.www.crazymohan.com

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
01-மார்-201700:36:33 IST Report Abuse
Manian பிரம்மா: என்னப்பா கிரேசி, இருக்கற தொந்தரவு போறாதுன்னு நீ வேரே செல்லடிக்கிறையே. எங்கிட்டே வந்த கிரகாம் பெல்லு,ரெண்டு டப்பாலே ஒரு நூலு கட்டி இதுதான் தொலை பேசின்னாரு. நீ என்னடானா,ஆப்பிள் ஐபோனுலே பேசறேங்கறை. ஒங்க ஊர்லே எவ்ளோ ஏளைகளுக்கு அந்த போனுக்கு கொடுக்கற காசிலே ஒருவேளை சாப்பாடு போடலாம் ஒனக்கு ஜோக்கடிக்க காசு கெடைக்கும். எனக்கு யாரு தருவாக? ஒரு 1000 கோயில் எனக்கு மொதல்லே கட்டு. அப்பறம் பேசிக்கலாம் ஒண்ணு, நீ தூக்கத்திலே "ஒனக்கு கண்ணுருக்கா, காதிருக்காண்ணு" வேண்டாத கேள்வி எல்லாம் கேக்காதே.அப்பறமால கனவுலே கூட வரமாட்டேன் -பிரம்மா சொல்ல தட்டெழுத்து அப்ஸரா மைலாப்பூர் மங்களம்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-பிப்-201722:11:11 IST Report Abuse
மலரின் மகள் ஆனால் பாண்பராக் மெல்லுவதை நிறுத்தினால், அந்த குட்டித்தீவு நன்றாக இருக்கும். சகிக்கலை. தயவு செய்து வெற்றிலை போடுவதை நிறுத்தவும்.
Rate this:
Share this comment
Cancel
Rajamani Shanmugavelu - Male,மாலத்தீவு
26-பிப்-201721:11:26 IST Report Abuse
Rajamani Shanmugavelu நான் அவருடைய காமெடிக்கு ரசிகன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X