பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அறிமுகம் ...!
ரயில்வேயில் புதிய உணவு 'சப்ளை' கொள்கை...
பயணிகளுக்கு தரமான உணவு கிடைக்க நடவடிக்கை


ரயில்வே துறையில், சமையல் மற்றும் உணவு வினியோகப் பணிகளை தனியாக பிரிக்கும் வகையில், புதிய உணவு சப்ளை கொள்கையை, ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுரேஷ் பிரபு, நேற்று துவக்கி வைத்தார். இதன் மூலம், உணவு சப்ளை பணிகள் அனைத்தும், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

ரயில்வேயில் புதிய உணவு 'சப்ளை' கொள்கை... அறிமுகம் ...!  பயணிகளுக்கு தரமான உணவு கிடைக்க நடவடிக்கை


ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் விலை குறித்து, ஏராளமான புகார்கள், ரயில்வே துறைக்கு வந்துள்ளன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில், புதிய, உணவு சப்ளை கொள்கையை, ரயில்வே துறை வகுத்துள்ளது.
இதன்படி, உணவு தயாரித்தல் மற்றும் சப்ளை சேவைகள் அனைத்தும், ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்படுகின்றன. ரயில்வே மண்டலங்களில் உள்ள, நான்கு அடிப்படை சமையல் கட்டமைப்புகளும், ரயில் நிலையங்களில் உள்ள சமையல் கூடங்களும், ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. தவிர, புதிதாக மேலும் பல சமையல் கூடங்களை நிர்மாணிக்க, ஐ.ஆர்.சி.டி.சி., திட்டமிட்டு உள்ளது.

ரயில்வே வாரியத்துடன் ஆலோசனைபுதிய கொள்கை அடிப்படையில், ரயில்வே பயணிகளுக்காக அமைக்கப்படும் அனைத்து சமையல் கட்டமைப்பு, விரிவான ஒப்பந்தம்

உள்ளிட்ட விஷயங்கள் குறித்த அறிக்கையை, ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கும்படி, ஐ.ஆர்.சி.டி.சி., கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த, 2010ல், ரயில்வே அமைச்சராக, மம்தா பானர்ஜி பதவி வகித்தபோது, உணவு சப்ளை பொறுப்புகளில் இருந்து, ஐ.ஆர்.சி.டி.சி., விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது, புதிய உணவு சப்ளை கொள்கைவகுக்கப்பட்டுள்ளதை அடுத்து, உணவு சப்ளை பணிகளை, ஐ.ஆர்.சி.டி.சி., மீண்டும் படிப்படியாக நிர்வகிக்கத் துவங்கும் எனத் தெரிகிறது.
ரயில்களில் செல்லும் பயணிகளுக்காக, ஆங்காங்கே அமைக்கப்படும் உணவு தயாரிப்பு கட்டமைப்புகளில் இருந்து, உணவுகள் பெறப்பட்டு, சப்ளை பணிகள் நடக்கும்.
உணவு வகைகளையும், அவற்றின் தரத்தையும், ஐ.ஆர்.சி.டி.சி., முடிவு செய்யும். இருப்பினும், உணவின் விலை, ரயில்வே வாரியத்துடன் கலந்தாலோசித்து, முடிவு செய்யப்படும்.
தனியாரிடம் இருந்து, உணவுகளை பெறுவதற்கு, முழுமையான தடை விதிக்கப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன. உணவுப் பொருட்கள் விற்கும் ஸ்டால்களின் ஆயுட்காலம்,
அதிகபட்சம், ஐந்து ஆண்டுகளாக இருக்கும் எனத் தெரிகிறது.

கொள்கையின் சிறப்பம்சங்கள்


* கடந்த, 2010ல், ரயில்வே அமைச்சராக, மம்தா பானர்ஜி இருந்தபோது, ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் இருந்து, உணவு சப்ளை பொறுப்பு பறிக்கப்பட்டது
* தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதியகொள்கைப்படி, சமையல் மற்றும் சப்ளையை, ஐ.ஆர்.சி.டி.சி., கவனிக்கும்
* ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம், 'பான்ட்ரி கார்' ஒப்பந்தங்கள் மீண்டும் அளிக்கப்படும் ரயில் பயணிகளுக்கு உணவு சப்ளை செய்யும் சமையல் கூடங்கள் அனைத்தும்,

Advertisement

ஐ.ஆர்.சி.டி.சி.,க்கே சொந்தமானதாக இருக்கும்
தற்போது, மண்டல ரயில்வேக்களிடம் உள்ள, அனைத்து சமையல் கூட கட்டமைப்புகளும், ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்படும்
* ஒவ்வொரு சமையல் கூடத்திற்கும், பிரத்யேக வர்த்தக வடிவம் உருவாக்கப்படும்
* சிறப்பு அம்சங்களுடன் கூடிய சமையல் கூடங்கள் அமைத்தல் தொடர்பான விரிவான ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு, ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்
* உணவு வகைளை, ஐ.ஆர்.சி.டி.சி., முடிவு செய்யும்
* ரயில்வே வாரியத்துடன் ஆலோசித்து, உணவுக் கட்டணம் நிர்ணயிக்கப்படும்
* கலப்படத்தை தடுக்க, கடுமையான கட்டுப்பாட்டு விதிகள் உருவாக்கப்படும்
* உணவு ஸ்டால்களில், பெண்களுக்கு, 33 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்படும்.


ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம், அவற்றின் மீதான கட்டணம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில், புதிய உணவு சப்ளை கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம்,
ரயில் பயணிகளுக்கு, இனி ஆரோக்கியமான, சுத்தமான உணவுப் பொருட்கள் சப்ளை செய்யப்படும் என, நம்புகிறோம்.சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சர்

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
04-மார்-201713:54:49 IST Report Abuse

Barathanஅப்படியின்னா, இவ்வளவு நாட்கள் ரயிலில் பயணிகளுக்கு கொடுத்த உணவு தரமற்றவை என்று பொருள் கொள்க

Rate this:
GIRIPRABA - chennai,இந்தியா
01-மார்-201711:24:18 IST Report Abuse

GIRIPRABAமுதலில் ரெஸ்ட் ரூம் இல் தேவையான வசதிகள் இருக்கிறதா என்று தெரியவில்லை அங்கு ஒரு மக் இருக்கிறதா. கூடிய மட்டும் வீட்டிலிருந்து உணவுகளை எடுத்து செல்லுங்கள்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
28-பிப்-201723:48:07 IST Report Abuse

K.Sugavanamதயாரிப்பு IRCTC யாம்.ஆனால் விநியோகம் தனியார் Hospitality நிறுவனங்களின் வசம் ஒப்படைக்கப் படுமாம்..விநியோகம் குறித்து தினமலர் வாயே திறக்க வில்லை..விநியோகம் எதற்கு தனியாரிடம்..இனி நாம் விநியோகஸ்தர்களிடம் பில் கேட்டால் கொடுப்பார்களா?ஏனெனில் தற்போது ரெயில்வே நிர்ணயித்த விலைக்கும்,பேரர்கள் பெரும் தொகைக்கும் பெரும் வித்யாசம் உள்ளது..ஆகவே விநியோகஸ்தர்கள் பில்லை கொடுக்கவேண்டியது கட்டாயமாக்கப் படவேண்டும்..அப்போதுதான் நாம் குறைபாடுகளை ஆதாரத்துடன் கூறி பரிகாரம் தேட முடியும்..

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X