பதிவு செய்த நாள் :
'பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைப்பதை தடுக்க சதி'

லக்னோ, :''உ.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைப்பதை தடுக்க, சதி நடக்கிறது,'' என, பிரதமர் மோடி பேசினார்.

'பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைப்பதை தடுக்க சதி'

உத்தர பிரதேசத்தின் மாவ் பகுதியில், நேற்று நடந்த பா.ஜ., பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:உ.பி., சட்டசபை தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பது, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளுக்கு தெரிந்துவிட்டது. அதனால், பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கக் கூடாது; தொங்கு சட்டசபை வர வேண்டும்; அப்போது பேரம் பேசலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.
ஆனால், மக்கள் மிகவும் தெளிவானவர்கள். லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை அளித்தது போலவே, சட்டசபை தேர்தலிலும் தனிப்பெரும்பான்மை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் முயற்சிப்பது

இயற்கையே. ஆனால், தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும், மற்றவர்கள் வெற்றி பெறக்கூடாது என்று, இங்குள்ள கட்சிகள் நினைக்கின்றன. நீங்கள் எதை செய்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால், மக்களின்எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள்.இவ்வாறு மோடி பேசினார்.

வேட்பாளர் மரணம்


அலாபுர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த சந்திரசேகர் கனவுஜா திடீரென மரணம் அடைந்ததால், அந்தத் தொகுதிக்கு, மார்ச், 9ல் தேர்தல்
நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

58 சதவீத ஓட்டுப்பதிவு


உத்தர பிரதேச சட்டசபைக்கு, நேற்று நடந்த ஐந்தாம் கட்ட தேர்தலில், 58 சதவீத ஓட்டுகள் பதிவாகின.முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கும்
உத்தர பிரதேசத்துக்கு, மார்ச், 8 வரை ஏழு கட்டங்களாகதேர்தல் நடக்கிறது. நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 11 மாவட்டங்களில், 51 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று, ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் அமேதி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, அமேதி

Advertisement

சட்டசபை தொகுதி உள்ளிட்ட தொகுதிகளுக்கு நடந்த ஓட்டுப்பதிவு, காலையில் சற்று மந்தமாகவே இருந்தது. மதியத்துக்குப் பின், இளம் வாக்காளர்கள் அதிக அளவில் வந்து, தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

அதனால், ஓட்டுப்பதிவு சூடுபிடிக்கத் துவங்கி, மொத்தம், 58 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மாவட்டம் உட்பட, 11 மாவட்டங்களுக்கு நேற்று நடந்த தேர்தல், சட்டசபை தேர்தல் முடிவை மாற்றக் கூடியவையாக கருதப்படுகின்றன.
அடுத்ததாக, ஆறாம் கட்டத்தில், 49 தொகுதிகளுக்கு, மார்ச், 4ல் தேர்தல் நடக்கிறது. மார்ச், 8ல், 49 தொகுதிகளில், ஏழாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. மார்ச், 11ல் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devar - Mannargudi,இந்தியா
28-பிப்-201719:06:40 IST Report Abuse

Devar பிஜேபி தோல்வி உறுதி . மோடியின் கொலைவெறி பேச்சிலிருந்து தெரிகிறது

Rate this:
rajangam ganesan - lalgudi,இந்தியா
14-மார்-201707:57:41 IST Report Abuse

rajangam ganesanஹா ...

Rate this:
nallavan - tiruchy,இந்தியா
28-பிப்-201718:26:26 IST Report Abuse

nallavanமுன்னெச்சரிக்கையாக இப்பொழுதே சொல்லி வைத்து விடுவோம் என்று மோடி சொல்கிறார். விவரமான மோடி..

Rate this:
HSR - MUMBAI,இந்தியா
28-பிப்-201716:58:37 IST Report Abuse

HSR1000 கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ,, பாஜக வெற்றி உறுதி,, சமாஜ்வாடி மார்வாடி கடைக்கு போகலாம்,, பகுஜன்சமாஜ் பாய போட்டு ரெடியாகலாம்,, கான் கிராஸ் ஒரு டெட் மேன் வாக்கிங் போலத்தான்.. எனவே ஆட்சி பாஜகவுக்கு ,, நீங்க கவலை படாதீர்கள் மோடிஜி,, பாதிக்கப்பட்ட திருடர்களின் அழுகுரல் இனிமையோ இனிமை ,, சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே ,.

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X