அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., மரணம் குறித்து விசாரணை தேவை
ஜனாதிபதியிடம் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

'ஜெயலலிதா மரணம் குறித்து, மத்திய அரசின் மேற்பார்வையில், நீதி விசாரணையோ, சி.பி.ஐ., விசாரணையோ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தோ விசாரணை நடத்த வேண்டும்' என்று ஜனாதிபதியிடம், அ.தி.மு.க., -- எம்.பி.,க்கள் 12 பேர் கோரிக்கை வைத்தனர்.

ஜெ., மரணம் , விசாரணை தேவை, ஜனாதிபதி,எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

பன்னீர்செல்வம் ஆதரவுஎம்.பி.,க்களான, மைத் ரேயன் தலைமையிலான,12 பேர் அடங்கிய குழு, நேற்று, டில்லியில் ஜனாதிபதி,

பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசியது. இந்த சந்திப்புக்கு பின், மைத்ரேயன் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல என பொது மக்கள், அ.தி. மு.க., தொண்டர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உண்மையான நிலையை கண்டறிந்து, நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மருத்துவ மனையில் சேர்ப்பதற்கு முன், ஜெ.,க்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்த விசாரணை அவசியம்.

அவருக்கு மருத்துவமனையில் என்ன மாதிரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென, அவரது ரத்த உறவுகளின் ஒப்புதலுடன் தான் டாக்டர்கள் முடிவு எடுத்திருக்க வேண்டும்.அப்படியானால், யார், யார் எல்லாம் அதில் சம்பந்தப்பட்டு, அத்தகைய முடிவு களை எடுக்க துணையாக இருந்தனர் என்பது குறித்த விசாரணையும் தேவை.

ஜெ., மரணம் குறித்த விசாரணையை

Advertisement

மேற்கொள்வதற்கு தற்போதைய மாநில அரசுக்கு தகுதியே இல்லை. இப்போதுள்ளது, 122 எம்.எல்.ஏ.,க்களுக்கு உண்டான அரசுதான் இது;மக்களுக்கான அரசு கிடையாது.

எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணையோ, சி.பி.ஐ., விசாரணையோ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்தோ விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் உள்ள மர்மத்தைவெளிக் கொண்டு வர வேண்டும்.

இதை ஜனாதிபதியிடம், கோரிக்கையாக வைத் தோம்.எங்கள் மனுவை வாங்கி,மிகுந்த கவனத் துடன் படித்த, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அதில் உள்ள முக்கிய கருத்துக்களை தன் பேனாவாலேயே அடிக்கோடிட்டு குறித்துக் கொண்டார்.

துணை சபாநாயகர் தம்பிதுரை குறித்து நாங் கள் எதுவும் குறிப்பிடவில்லை. காரணம், தீபா யார், தீபக் யார் என்றெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.அவர் போகிற போக்கை பார்த்தால், அடுத்து, சசிகலா யார் என்று விரை வில் கேட்கக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
03-மார்-201709:05:32 IST Report Abuse

A shanmugamஇப்போ செத்துப்போன பாம்பை அடிப்பதில் என்ன வீரம் வேண்டிக்கிடக்கு?

Rate this:
Ramesh Kumar - coimbatore,இந்தியா
01-மார்-201722:29:02 IST Report Abuse

Ramesh Kumarஜெயா மரணம் பற்றி வாயை திறந்த ஒரு பெண்மணியை உள்ளே தள்ளி விட்டார்கள்..தமிழக அரசோ மத்திய அரசோ நியாயமான விசாரணை நடத்த வாய்ப்பில்லை ....நீதிமன்றம்...தலையிட வேண்டும்...

Rate this:
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
01-மார்-201718:39:16 IST Report Abuse

Ayathuray Rajasingamசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியானாலும், அவரது மரண விடயத்தில் கால தாமதமானாலும் விசாரணை அவசியம் தேவை. விசாரணையை வைத்தால் தான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். தமிழ் நாட்டு மக்களும் விழிப்புணர்ச்சியுடன் இருப்பார்கள்.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X