குழந்தை பெற்றார் மாணவி : பலாத்கார பாதிரியார் கைது

Added : மார் 01, 2017 | கருத்துகள் (2)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான, பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான, பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம், கண்ணூார் மாவட்டம் கொட்டியூர் நீண்டுநோக்கி சர்ச் பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரி, 48. இவன் அப்பகுதியில், பள்ளி மேலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தான். கடந்த ஆண்டு, மே மாதம் அந்த பள்ளியில், பிளஸ் 1 படித்த மாணவியிடம் பாதிரியார் நெருங்கி பழகி பலாத்காரம் செய்தான். இதில், மாணவி கர்ப்பம் ஆனார். இதுபற்றி மாணவியின் பெற்றோர், சர்ச் நிர்வாகத்திடமும், குழந்தைகள் நல வாரியத்திலும் புகார் செய்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், மாணவி கூத்துபறம்பு பகுதி தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றார். உடனடியாக, சிலர் குழந்தையை எடுத்துச் சென்று, வயநாட்டில் உள்ள தனியார் அனாதை இல்லத்தில் சேர்த்தனர். இந்த சம்பவம் வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இதை தொடர்ந்து, உஷாரான பாதிரியார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றான். அப்போது, பரவூர் போலீசார், பாதிரியார் ராபினை கைது செய்தனர். இதையடுத்து, அனைத்து பொறுப்புகளில் இருந்தும், ராபின்விடுவிக்கப்பட்டு விட்டதாக பிஷப் அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவி பலாத்கார சம்பவத்தில், ஒரு ஆண்டு வரை நடவடிக்கை எடுக்காதது கேரளாவில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
01-மார்-201717:25:45 IST Report Abuse
Mohammed Abdul Kadar துறவறம் என்பது இறைவன் அருள் மறையில் கிடையாது,
Rate this:
Cancel
Meenu - Chennai,இந்தியா
01-மார்-201712:31:14 IST Report Abuse
Meenu பாதிரியார்கள் நிறைய பேர் தில்லுமுல்லும், பிராடுத்தனமும் செய்துகொண்டு, நல்லவர் போல சமுதாயத்தில் வலம் வருகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X