பெண்ணே... உலகை ஆளு!

Updated : மார் 01, 2017 | Added : மார் 01, 2017 | கருத்துகள் (5)
Advertisement
பெண்ணே, உலகை ஆளு!

அனைத்து ஜீவராசிகளின் உன்னதமான உறுப்பு கண்கள். எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்; அச்சிரசிற்கு கண்ணே மூலதானம். இப்படி கண்ணின் அருமை அறிந்த நாம் பெண்ணின் பெருமையையும் அறிவோம்.
விதைக்குள்
அடைபட்ட
விருட்சத்தின்
தடைபடா
வாழ்வு - வேரிலே!
ஆணின் வேராய் விளங்கும் பெண்ணின் திறமையை வீட்டிற்குள் பூட்டலாமா? பூட்டுகளை உடைக்கும் சக்தி அவளுக்குள் இருந்தும் கட்டுப்பட்டே நடப்பது எதற்காக? இது பெண்ணின் பலவீனமா? இல்லை நண்பா..! அதுவே அவளின் பலம் என்பதை அறிந்து கொள். மனிதன் பிறக்கும் திறமைகளுடன் பிறப்பதில்லை. வளரும்போதே திறமைகளும் பிறக்கிறது. அப்படிப்பட்ட திறமை பெண்களுக்கு கொஞ்சம் அதிகமே. ஏனெனில் அவள் வளர்க்கப்படும் விதம் அப்படி. நம் சமூகம், பெண்ணிற்கு ஒன்றும் தெரியாது... தெரியாது... எனக்கூறி கொண்டே அனைத்தையும் கற்றுக்கொடுப்பது வியப்பின் சரித்திரமே! தங்கத்தை புடம் போடுவதே ஜொலிஜொலிக்கச் செய்யத்தான் என்பதை மறந்து, ஆணினமே தங்களுக்கோர் ரகசியம் கூறகடமைப்பட்டுள்ளோம். சிறுவயது முதலே வீட்டில் எடுபிடி வேலை செய்வது பெண் பிள்ளையே! அன்றே ஆண் இனமே நீ முடங்கிப் போனாய்! ஆண் மகன் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்ட சோம்பேறி ஆக்கப்பட்டாய். வேலைகளின் நெளிவு, சுழிவு, சூட்சுமம் இவையாவும் அறியாத பிள்ளையாகவே வளர்ந்து திருமணமாகி மீண்டும் 'தாரம்' எனும் பெண்ணிடம், ஆணாதிக்கத்தை காட்டும் பாங்கில் அனுபவமே இல்லாத வேலைக்காரனாகிப் போனாய்!


திறமையின் திறவு கோல் அனுபவம் தான்!


இந்த அனுபவம் பெண்களிடம் அதிகமாக காணப்படுவதற்கு காரணமும் இதுவே. பிஞ்சில்
இருந்து காயாகி, காய்கனியாகி, கனி விதையாகும் வரை பெண்ணை சம்பளமில்லா வேலைக்காரியாக்கிப் பார்த்த சமூகமே! பெண்ணின் திறமையை வளர்ப்பதில் உனது சுய நலனும் பொது நலனாகிப் போனதே! பெண்ணிற்கு இணையான கருவிபொதுவாக நம் வீடுகளில்சாப்பிட அமரும் போது தண்ணீர் எடுத்து வைத்து கொண்டு தான் அமர வேண்டும் என்ற தன்னறிவை கற்றுக்கொடுத்தது பெண்ணிற்கு மட்டுமே. இங்கே தொடங்குகிறது அவளது முன்யோசனை. பிரச்னை வரும் முன்னே தீர்வு நோக்கி நகரும் அவளது மூளைக்கும்
மனதுக்கும் இணையானதொரு கருவி, இன்றளவும் உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.
கற்பை ஆயுதமாக்கிக் கொண்ட சீதையும், அன்பை ஆயுதமாக்கிக் கொண்ட அன்னை தெரசாவும் புராண காலமாகவும், கடந்த காலமாகவும், நம்மை விட்டு நகர்ந்து போனாலும் அரசியல் ஆடுகளத்தில் எதிரிகளை எழுந்திருக்க விடாமல் வீழ்த்திய துணிச்சலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பார்க்கலாமே!
இப்படி பெண் ஒவ்வொரு தருணத்திலும் குணங்களின் அடிப்படையிலேயே வார்த்தெடுக்கப்படுகிறார். நம் சமுதாயத்தில் ஆணொருவனை மகனாக ஒரு தாயும், கணவனாக்கிப் பார்த்த மனைவியும், தந்தையாக்கிய தருணமும், அவனையே தாத்தாவாக்கியவளும் பெண் தானே!பெண்ணாலே பல உருவம் பெற்ற நீங்கள் பெண்ணை அலட்சியப்படுத்தலாமா? சுமை யெனக் கருதலாமா? நமக்கு வயதானால் நம் அருகில் அமர்ந்து ஆறுதல் கூறுவது நம் பெண் பிள்ளை தான். இளைப்பாறப்போகும் மரத்தின் வேரிலே


வென்னீரை ஊற்றலாமா?


''உருப்பெற்ற உருவம் - ஆண்
உருவாக்கிய சொரூபம் பெண்''
இவ்வல்லமை பொருந்திய பெண்ணின் தியாகத்தை
தாயுள்ளத்தோடு ஏற்றுக்
கொள்வதில் என்ன தயக்கம்.
தாரகையே
தயங்கும்
தனாளன்களை
தடையனத் தாண்டு விரைவில்
தாண்டு விரைவில்!
தாங்கிக் கொள்ளும்
இத்தரணி உன்னை - ஆனால்
தலைக்கனத்தால்
தாண்டினால்
தண்டனையுண்டு
இத்தரணியில்...
புரிகிறதா பெண்ணே!
சமூகத்தின் பார்வை
புல்லும் மூங்கிலும் ஓரினமே! புல்லைப் பெண்ணாக வும், மூங்கிலை ஆணாகவும் இதுவரை பாவித்து வந்த சமூகத்தின் பார்வையை மாற்று. அந்த சக்தி நமக்குள் இருக்கிறது. இதோ
அரசியலில் அடி வாங்கிய பெண்ணையும் பார்த்திருப்பாய், அடி மேல் அடி வைத்து
முன்னேறிய பெண்ணையும், முன்னேறத் துடிக்கும் பெண்ணை யும் பார்த்திருப்பாய்.
ஒரு காலத்தில் அரசியல் என்பது ஆண்களின் சிம்ம சொப்பனம். இன்று அயராது உழைத்து, ஆட்சி பீடத்தை பிடித்து, அனைத்து வர்க்கத்தினரையும் தன் சுண்டுவிரல் நுனியில் வைத்த
பெண்ணினமும் தமிழகத்தில் உண்டு என்பது அறிந்தது தான்.முடிவெடு! தீக்குச்சியின் முனையில் சமைக்கவும் முடியும். ஓ! பல சாம்ராஜ்ஜியத்தையே அழிக்கவும் முடியும். 'அழித்தல் அழகல்லவே' உனது சிந்தனை ஆக்கப்பூர்வமாக இருக்கட்டும்.


பரந்த உலகம்


உமிக்குள் இருக்கும் வரை அரிசிக்கும் சேதாரம் இல்லை. ஒழுக்கத்தின் உறை அணிந்து உலகை ஆளு. உனது ஒவ்வொரு செயலுக்கு பின்னும் உன் சந்ததியின் வளர்ச்சி இருப்பதை மறந்து விடாதே!நம்மை மட்டம் தட்டும் இச்சமுதாயமே, நம்மை கொண்டாடவும் செய்கிறது. அதனால் நல்லொழுக்கப் பாதையில் நாம் நடக்க இடைபடும் தடைகளை படிக்கட்டுகளாக்கி உச்சியில் ஏறி நின்று பார்! பரந்த உலகம் உனக்காக உனது காலடியில்...'வாழ்க்கை' என்னும் வீட்டிற்கு பல திறவுகோல் உண்டு. அதில் உனது திறமைக்கேற்ற திறவுகோலை நீயே தேர்ந்
தெடுத்து உள்ளே செல்! எக்காரணம் கொண்டும் பூட்டை உடைக்க முற்படாதே! அது நம்மை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும். நல்ல சிந்தனையும், செயலுமே உன்னை அடை
யாளங்காட்டும் என்பதை நினைவில் கொள்!புவியெனும் பூஞ்சோலைக்குள் வந்து விட்டோம்.
புல்லுருவிகளை கண்டு பயப்படாமல், புகுந்து விளையாடு, எச்சிறுமை யும் உன்னை அணுகாதவாறு எச்சரிக்கையாய்! இப்போதெல்லாம் ஆணுக்கு நிகராய் அல்ல; அதற்கும் மேலாக நின்று சம்பாத்தியம் முதல் சமையல் வரை அனைத்து சுமைகளையும் தன் தோளில் சுகமாய் சுமந்து நிற்கும் சுமைதாங்கி அல்லவா பெண்.நண்பா! நம் வீட்டுப் பெண்கள் குடும்பத்தையும் குடும்பத் தேவையை பூர்த்தி செய்ய சிறு தொழிலை மேற்கொண்டு அவள் படும்பாட்டை கண் கூடாகப் பார்த்தும் நாம் சிந்திக்காமல் இருப்பது நல்லதல்லவே. சற்று யோசியுங்கள் கணவன் வெளியில் சென்று வேலை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்ததும், காபி போட்டு கொடுப்பதில் இருந்து அனைத்து பணிவிடைகளையும் செய்து கொடுப்பது மனைவி. அம்மனைவியும் அலுவலகம் சென்று பணிபுரிந்து வந்தவள் தான்.


விடுமுறை இல்லாத பெண் :


கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் தத்தம் பணிக்கு
வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை. ஆனால் நம் வீட்டுப் பெண்களுக்கு விடுமுறை உண்டா?
ஓய்வின்றி உழைக்கும் அவளை புரிந்து கொண்டு அன்பு செலுத்துங்கள். இவ்வன்பிற்கு அவள் பம்பரமாய் சுழலும் விந்தையை கண்ணுற்று ரசிக்கலாம். ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பதல்ல வாழ்க்கை. ஒருவருக்கொருவர் புரிந்து வாழும் அன்பான வாழ்க்கையில் தான் இருக்கிறது வாழ்வின் அர்த்தம்.பெண்ணின் வளர்ச்சியை பெருமிதத்தோடு ஏற்று கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு மட்டுமல்ல உலக வாழ்வும் செழிக்கும். பெண்களை எப்போதும் கொண்டாடுவோம்.
- க.காளீஸ்வரி, ஆசிரியை
காமராஜ் நடுநிலைப்பள்ளி
குன்னுார், ஸ்ரீவில்லிபுத்துார்
87547 46106

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rocky - chennai,இந்தியா
01-மார்-201713:13:49 IST Report Abuse
Rocky முதலில் பெண்களை நல்ல பண்புகளைக் கற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
01-மார்-201710:39:26 IST Report Abuse
மணிமேகலை  இப்படி உடம்பைக்காட்டி அல்ல ,உன் திறமையைக்காட்டி .
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
01-மார்-201710:28:59 IST Report Abuse
P. SIV GOWRI க.காளீஸ்வரி, ஆசிரியை அவர்களே வணக்கம். நல்ல பதிவு. பெண்கள் பெண்களாக இருக்கும் வரைக்கும் மதிப்பு எல்லாம் இருக்கும். ராட்சசியாக மாறும் போது .................... போதும் முடியல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X