கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோக், பெப்சிக்கு தாமிரபரணி நீர்:
தடை கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களின் குளிர்பானம், குடிநீர் தயாரிப்புக்கு, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகிக்க தடை கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

கோக், பெப்சிக்கு, தாமிரபரணி நீர், வழக்கு தள்ளுபடி

திருநெல்வேலி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலர், பிரபாகர் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி கங்கை கொண்டான், சிப்காட்டில்,'கோக கோலா' கம்பெனிக்காக, 'சவுத் இந்தியா பாட்லிங் கம்பெனி'க்கு, 31.54 ஏக்கர் நிலம், 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங் கப்பட்டது. அந்நிறுவனத்திற்கு, தினமும், 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க சிப்காட் மேலாண்மை இயக்குனர் அனுமதித்தார்.

குடிநீர் தட்டுப்பாடு :


'பெப்சி கோலா கம்பெனி'க்காக, 'பிரதிஷ்டா பிசினஸ் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்திற்கு, 99 ஆண்டுகளுக்கு, 36 ஏக்கர் நிலம் குத்தகைக்கு

விடப்பட்டது. தாமிரபரணியில் இருந்து தினமும், 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க வும், 1,000 லிட்டருக்கு, 37.50 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து சிப்காட் நிர்வாகம் அனுமதித்தது.

தாமிரபரணியில் இருந்து அதிகளவு தண்ணீர் எடுப்ப தால் திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 'கோககோலா' மற்றும் 'பெப்சி கோலா' நிறுவனங் களின் குளிர்பானம், குடிநீர் தயாரிப்புக்கு தாமிர பரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.

ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு, 'குளிர் பானம், மினரல் வாட்டர் தயாரிக்க தாமிரபரணியில் இருந்து, தண்ணீர் வினியோகிக்க தடை விதிக்க வேண்டும்' என, மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அடங்கிய அமர்வு உத்தரவு: மனுதாரர்களில் ஒருவரான பிரபாகர், 'கோககோலா' நிறுவனத்திற்காக, மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்துள்ளார்.அவரது பணியில், திருப்தி இல்லாததால், அவரை நிறுவனம் பணியில் இருந்துவிடுவித்துள்ளது. அவர் குளிர்பான நிறுவனத் திற்கு எதிராக, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உட்பட பல்வேறு இடங்களில், ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

பொதுநல வழக்கு என்ற பெயரில், முன் பகையை தீர்க்கும் நோக்கில், தற்போது சொந்த காரணங்களுக் காக, மனு தாக்கல் செய்தது தெரிய வருகிறது; இதை

Advertisement

ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கி றோம். அப்பாவு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்கிறோம்.

நடவடிக்கை இல்லை :


கி.பி., 1365 முதல் 1731 காலகட்டத்திலும், பின், பிரிட்டிஷ் ஆட்சியிலும் தாமிரபரணியை ஒட்டி எட்டு அணைகள், அதனுடன் இணைந்த, 11 கால்வாய்கள், 283 கி.மீ.,க்கு அமைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த, 70 ஆண்டுகளில், பாசன வசதியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தாமிரபரணியின் உபரி நீரை, கடலில் கலக்காமல் தடுத்து, பூகோள சூழ்நிலைக்கு ஏற்ப குளங்கள், கண் மாய் களுக்கு நீர் செல்லும் வகையில் திட்டம் நிறைவேற்றவில்லை. இதில் நீதிமன்றம் வருத்தத்தை தெரிவிக்கிறது. இவ்வாறு தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajarajan - bangalore,இந்தியா
03-மார்-201719:44:10 IST Report Abuse

rajarajanநீதிமன்ற தீர்ப்பை குறை சொல்லி ஒரு பிரயோசனமும் இல்லை .நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் படியே தீர்ப்பு வரும். ஆனால் நீதிபதிகள் என்பவர்கள் யார்? வேறு உலகத்தில் இருந்து குதித்தவர்களா. குமாரசாமியின் தீர்ப்பை பார்த்து உலகமே சிரிக்கிறது. இந்த லட்சணத்தில் கருவை மரங்களை அழிக்கவேண்டும் என்று உத்தரவு இட்டவர்களும் இவர்கள்தான். ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் தெரிந்து. தெரியாமல் எவ்வளவோ. 15 லட்சம் லிட்டர் தண்ணீரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கருவை மரங்களும் உரின்சுமா என்பது சந்தேகமே.

Rate this:
poongothaikannammal - chennai 61,இந்தியா
03-மார்-201717:05:28 IST Report Abuse

poongothaikannammalநிதியைக் கண் முன்னால் கண்டு கொண்டதால் நீதியும் நிலை தடுமாறி கவிழ்ந்ததோ?

Rate this:
Thamizhan - Pondy,இந்தியா
03-மார்-201714:12:59 IST Report Abuse

Thamizhanபெப்சி , கொக்க கோலா , மது பானங்கள் ......எதையும் வாங்காதீங்கய்யா . இதையெல்லாம் குடிக்கறது நம்ம தாய் தமிழ்நாட்டுக்கும் , நம்ம தாய்க்கும் , தாரத்துக்கும் , புள்ள குட்டிகளுக்கும் , எதிர்கால சந்ததிக்கும் செய்யற துரோகம்ன்னு உணருங்கய்யா . இனி அரசாங்கம் , நீதி மன்றம் இதையெல்லாம் பிரயோஜனம் இல்லய்யா .

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X