பதிவு செய்த நாள் :
வங்கிக்கு அதிகம் போகிறவரா? :
இனி கட்டணம் வசூலிக்கப்படும்

புதுடில்லி: 'வங்கிக் கணக்கில் ரொக்கமாக, ஒரு மாதத்தில் நான்கு பரிவர்த்தனைக்கு மேல் செய்தால், குறைந்தபட்சம், 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்' என, பல்வேறு தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.

வங்கிக்கு அதிகம் போகிறவரா? : இனி கட்டணம் வசூலிக்கப்படும்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், ரொக்கமாக, 'டிபாசிட்' செய்ய மற்றும் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகளை, பல்வேறு தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.

அதன்படி, மாதத்தில், நான்கு முறைக்கு மேல் டிபாசிட் செய்தாலோ, பணம் எடுத்தாலோ,

குறைந்தபட்சம், 150 ரூபாய் கட்டணமாக வசூலிக் கப்படும் என, எச்.டி.எப்.சி., - ஐ.சி.ஐ. சி.ஐ., - ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கிகள் அறிவித்துள் ளன. இது சாதாரண சேமிப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்கு வைத்துள்ள வர்களுக்கு பொருந்தும் என, இந்த வங்கிகள்அறிவித்துள்ளன.

இந்தக் கட்டுப்பாடுகள் வங்கிக் கிளைகளில் செய்யப் படும் டிபாசிட் மற்றும் பணம் எடுப்பதற்கு மட்டும் தான்; ஏ.டி.எம்.,களுக்கு கிடையாது. இந்தக் கட்டுப் பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக, எச்.டி. எப்.சி., வங்கி நேற்று முன்தினம் இரவு அறிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் மூன்றாவது நபர், அதிகபட்சம், ஒரு நாளில், 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே டிபாசிட் செய்ய முடியும் என்றும் அறிவித் துள்ளது. 'முதல் நான்கு பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும்கிடையாது.

அதற்கடுத்து செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக் கும், ஆயிரம் ரூபாய்க்கு, ஐந்து ரூபாய் வீதம் வசூலிக்கப்படும். குறைந்தபட்சம், 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்' என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது. 'முதல்5பரிவர்த்தனைகள்

Advertisement

அல்லது 10 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. அதற்கடுத்து, ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும், ஐந்து ரூபாய் வீதம் வசூலிக் கப்படும். குறைந்தபட்சம், 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்' என, ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு எந்த அறிவுரையை யும் அளிக்கவில்லை என்றும், இந்த வங்கிகள் தெரிவித்துள்ளன. ஆனால், பொதுத் துறை வங்கிகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.


Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mpvijaykhanna - dindigul,இந்தியா
08-மார்-201700:17:27 IST Report Abuse

mpvijaykhannathis going to increase black money definetly

Rate this:
நரி - Chennai,இந்தியா
03-மார்-201722:14:21 IST Report Abuse

நரியூரின் போன 5 ரூபா கொடுக்கிறோம் .... ATM ல பணம் இல்லை ..... ரெண்டு Closet மாட்டிவிடுங்க ... நல்ல கலெக்சுன் வரும்

Rate this:
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
03-மார்-201720:17:03 IST Report Abuse

Sundeli Siththarவங்கி கிளைக்கு சென்று செய்யும் பரிவர்த்தனைக்குத்தான் இந்த சேவை கட்டணம்... எதற்காக வங்கிக்கு செல்லவேண்டும்... ATM ல் சென்று பரிவர்த்தனை செய்யுங்களேன்... வங்கியிலும் கூட்டம் குறையும்...

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X