அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 ஜெ... ',தாக்கப்பட்டாா்!,:பி.எச்.பாண்டியன், மீண்டும் 'குண்டு'

''அப்பல்லோ மருத்துவமனை வருவதற்கு முன், ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார்; அவரது மரணத்திற்கு காரணமான, குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்,'' என, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளது, அ.தி.மு.க., வட்டாரத்தில், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 ஜெ... ',தாக்கப்பட்டாா்!,:பி.எச்.பாண்டியன், மீண்டும் 'குண்டு'

தமிழக சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று அளித்த பேட்டி:
கடந்த, 2016 செப்., 22ல், சென்னை, போயஸ் கார்டன் வீட்டில், ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டுள்ளார் என, அப்பல்லோ மருத்துவமனையின், 'டிஸ்சார்ஜ் சம்மரி'யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரை மருத்துவமனையில் சேர்க்கும் முன், போயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பும் படி, அப்பல்லோ மருத்துவமனைக்கு ஒருவர் போன் செய்துள்ளார். அந்த டி.எஸ்.பி., யார்; அவர் பெயர் என்ன என்பது எங்களுக்கு தெரியாது.

கண்காணிப்பு கேமரா


மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் எத்தனை மணிக்கு கிளம்பியது; எப்போது போயஸ் கார்டன் சென்றது. எத்தனை மணிக்கு ஜெ.,வை அழைத்துக் கொண்டு, மருத்துவ மனைக்கு வந்தது; உடன் வந்தது யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.ஆம்புலன்ஸ் வேன் வந்த காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும்.

போயஸ் கார்டனிலும், கண்காணிப்பு கேமரா உள்ளது; அவற்றின் பதிவுகளை வெளியிட வேண்டும். அப்போது தான், ஜெ., எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்ற உண்மைகளை அறிய முடியும்.மருத்துவ மனையில் பொருத்தப்பட்டிருந்த, 27 கண்காணிப்பு கேமராக்கள், ஜெ., வந்த பின் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற

உத்தர விட்டது யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.

2016 மே மாதம், ஜெ.,க்கு சிகிச்சை அளித்த, பிரபல டாக்டர் சாந்தாராம், 'வீட்டில் தருகிற சிகிச்சை, உங்களுக்கு மாரடைப்பை வரவழைக்கும்' என, தெரிவித்துள்ளார்.மறு நாளில் இருந்து, அந்த டாக்டரை உள்ளே அனுமதிக்கவில்லை; அவரை வெளியேற்றி விட்டனர். இதற்கும் பதில் கூற வேண்டும். அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், ஜெ., மறைவு தொடர்பான வழக்கில்,சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெ., உயிரை எடுக்க, சிகிச்சையை நிறுத்திய தாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு, அனுமதி அளித்தது யார்; உயிரை எடுக்க சொன்னது யார்; இது, புரியாத புதிராக உள்ளது. ஜெயலலிதாவின் முடிவை நிர்ணயித்த சக்தி யார்; குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர், இந்த உத்தரவை பிறப்பிக்க, அதிகாரம் உண்டா என்பதை தெரிவிக்க வேண்டும்.

தடுத்தது யார்?


மத்திய அரசு,2015 மே, ஜூன் மாதங்களில், ரகசியமாக ஒரு கடிதத்தை அனுப்பியது. அத்துடன், ஜெ.,வை சிகிச்சைக்காக, சிங்கப்பூரில் உள்ள செயின்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, 'பாரா ஆம்புலன்ஸ்' ஹெலிகாப்டரை, சென்னைக்கு அனுப்பியது. ஆனால், அவர் அங்கு அழைத்து செல்லப்படவில்லை; அதை தடுத்தது யார்?

டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜெ.,க்கு சிகிச்சை அளித்தனர். அந்த மருத்துவ அறிக்கையை, மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். ஜெ.,க்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஜெ., மருத்துவமனைக்கு வந்த போது, தேசிய பாதுகாப்பு படையினரை, வீட்டுக்கு போகும்படி சொன்னது யார்?

தலைவர்களை பாதுகாக்கும், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், தலைவரை பாதுகாக்க தவறி னால், துாக்கு தண்டனை வழங்க வேண்டும் என, சட்டம் உள்ளது. தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல், அப்பல்லோவில் ஜெய லலிதா இருந்துள்ளார். இதனால், குறிப்பிட்ட குடும்பத்தினர், அங்கு சர்வ சாதாரணமாக நடமாடி உள்ளனர். ஜெ., மறைவுக்கு காரண மான குற்றவாளிகளை, நாங்கள் நெருங்கி விட்டோம். ஜெ.,க்கு பல் வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை களை வழங்க,

Advertisement

அனுமதி அளித்தது யார்; ஜெ., இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார் என, கூறினர். 'இசட்' பிரிவு பாதுகாப்புள்ள ஜெ.,க்கு கொடுக்கப் படும் உணவு, ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட, உணவு அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

ஜெ., சிகிச்சையில் இருந்த நாட்களில், நவ., 2 முதல், டிச., 5 வரை, வெளிநாட்டு மருத்துவர் கள் வரவில்லை; அதற்கு, என்ன காரணம்? ஜெ.,க்கு சிகிச்சை அளித்த வெளி நாட்டு டாக்டர்களுக்கு, தமிழ் தெரியாது; ஆங்கிலம் மட்டும் தெரியும். அருகில் இருந்த வர்களுக்கு, ஆங்கிலம் தெரியாது. அப்படிப் பட்ட நிலையில், ஜெ.,க்கு சிகிச்சை அளிக்க, அனுமதி அளித்தது யார்?

ஜெ., கன்னத்தில் நான்கு ஓட்டைகள் இருந்தன. 'பிளாஸ்திரி' ஒட்டப்பட்டு, தோல் கிழிந்துள்ள தாக தெரிவித்தனர். 'எம்பார்மிங்' செய்த டாக்டர், அதை பார்க்கவில்லை என, தெரிவித் தார். அந்த ஓட்டை விழ காரணம் என்ன; அதை தெரிவிக்க வேண்டும்.கவர்னர், மத்திய அமைச்சர்கள் என, யாரும் ஜெ.,வை பார்க்க வில்லை. அவர்கள் வருகையை, போலீசார் குறித்து வைத்துள்ளனர். ஜெ.,வால் விலக்கி வைக்கப்பட்டவர்கள் வந்த விபரமும் இருக்கும். அதை, அரசு வெளியிட வேண்டும்.

ஜெ.,க்கு, 'எக்மோ' சிகிச்சை அளிக்க, குடும்ப உறுப்பினர்கள் அனுமதி அளிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் எனக்கூற வழங்கப்பட்ட ஆதாரங்கள் எவை; அவற்றை வெளியிட வேண்டும்.

ஜெ., மறைவில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் அடிப்படையில், அவர், 2016 டிச., 4 மாலை, 4:30 மணிக்கு இறந்துள்ளார். அதன்பின், எக்மோ சிகிச்சை துவக்கப்பட்டு, டிச., 5 வரை நடந்துள்ளது. அந்த விபரங்களுக்கு எந்த பதிலும் இல்லை. அதை, நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

இடைத்தேர்தலின் போது, படிவங்களில் ஜெ., கையை எடுத்து, கட்டை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதிருந்த டாக்டர் பாலாஜி, விசாரிக்கப்பட வேண்டும். அப்போது, வேறு என்ன ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது என்பது தெரிய வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில், உலகத்தரம் வாய்ந்த, 'பிசியோதெரபிஸ்ட்'கள் இருக்கும் போது, சிங்கப்பூரில் இருந்து ஏன் வரவழைக்க வேண்டும்; இதற்கான பதில், நாட்டு மக்களுக்கு தேவை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பிப்ரவரி, ௭ம் தேதி, சென்னை அண்ணாநகரில் உள்ள தன் வீட்டில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த பி.எச்.பாண்டியன், 'அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்படு வதற்கு முன், அவரது வீட்டில் வாக்குவாதம் நடந்துள்ளது. மன அழுத்தத்தில் கீழே விழுந்த அவர், துாக்கி விடக்கூட ஆளில்லாமல் தவித்துள்ளார்' என, தெரிவித்தார்.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வருவதற்கு முன், ஜெ., தாக்கப்பட்டுள்ளார் என, மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது, அ.தி.மு.க., வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
04-மார்-201702:34:40 IST Report Abuse

Panneerselvam Chinnasamyபன்னீரார் மனதில் ஓடும் பாட்டு : "சொன்னாலும் வெட்கமடா... சொல்லாவிட்டால் குற்றமடா...."( கொலை என்று சொன்னால் முதல்வராய் இருந்தும் கட்சி தலைவியை கூட காப்பாற்ற முடிய வில்லை என்ற கேவலம் வரும்..இத்தனை பேர் சந்தேகம் கிளப்பிய பின் அதை கொலை என்று சொல்லாவிட்டாலும் நம் மீது குற்றம் வரும்.) சசி மனதில் ஓடும் பாட்டு:"நீயும் நானுமா...பன்னீர் நீயும் நானுமா...." (எவ்வளுவு விஷயம் நாம கூட்டா செஞ்சிருக்கோம்... இப்போ என்மெலேயே திருப்பிவிட பார்க்கிற யே) P.H..பாண்டியன் : " யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் தெரிஞ்சிக்கோ... சசி தெரிஞ்சிக்கோ.." (ம்ம்..வானளாவிய அதிகாரத்தில் இருந்த என்னை ...வாழைப்பழ தோலைப்போடுவது போல குப்பை தொட்டியில் போட்டாயே... என்னுடைய பழியை தீர்க்க இதுதான் சரியான சந்தர்ப்பம்...) அப்போல்லோ ரெட்டி: "ஆட்டிவைத்தால் யாரொருவரர்ஆடாதோரா கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதோரா கண்ணா..."(எல்லாம் நல்லாதானே போய்க்கிட்டு இருந்தது... டிஸ்சார்ஜ் ஆகி போய்டுவாங்க நமக்கு நல்ல பேர் கிடைக்கும்னு நினைச்சோம்... இப்படி ஆய்டுச்சியே..எல்லாம் உன் செயல்..) பொது மக்கள்: "உண்மை எது பொய் எது... ஒன்னும் புரியலே... நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலே,," (எது உண்மை எது பொய்இ .த்தனை நாள் கூட இருந்த சசி கொலைகாரியா... இல்லை ஜெயலலிதா கடந்த இரண்டு வருடங்களாகவே உடல் நலம் குன்றியத்தில் இயற்கையாகவே காலமானாரா?) )

Rate this:
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
03-மார்-201722:00:33 IST Report Abuse

Mahendran TCஅப்பல்லோ ரெட்டியை சுக்கா ரொட்டி தட்டுவதைப்போல நாலு தட்டு தட்டினால் எல்லா உண்மையும் வெளிவந்துவிடும்

Rate this:
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
03-மார்-201721:53:36 IST Report Abuse

Mahendran TCஜெயாவை புதைப்பதற்கு முன் இந்த குண்டையெல்லாம் இவர்கள் போட்டிருந்தால்,இன்று தமிழ்நாட்டின் நிலையே வேறு .

Rate this:
மேலும் 103 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X