பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள் அறிவிப்பு

Added : மார் 02, 2017
Advertisement

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்களை விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 1 மற்றும் தாள் -2 முறையே ஏப்., 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள மையங்களில் வரும் 6 முதல், 22 வரை, (ஞாயிறு தவிர) காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை விற்பனை செய்யப்படும்.ஒரு விண்ணப்ப கட்டணம் விலை 50 ரூபாய். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். தாள் -1 மற்றும் தாள் -2 ஆகிய இரு தேர்வுகளை எழுத விரும்பும் விண்ணப்பதாரர் தனித்தனியான விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குவது எங்கே?பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும், ௬ முதல், 23 மாலை 5:00 மணி வரை, திருவள்ளூர் கம்பர் தெருவில் உள்ள சி.எஸ்.ஐ., கவுடி மேல்நிலை பள்ளியிலும், மாவட்ட கல்வி அலுவலகம், பொன்னேரி (அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகம், வேம்பாக்கம்) என்ற முகவரியில் வழங்கலாம். விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு மாவட்டத்தில் பெற்ற விண்ணப்பத்தினை மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்து வழங்கலாம்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X