நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி தேயிலை விவசாயம் பாதிப்பு

Added : ஜன 24, 2011 | |
Advertisement
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் பனியால், பசுந்தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக பசுந்தேயிலை விவசாயம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தேயிலை விலை வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தேயிலை வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம், தற்போது பசுந்தேயிலைக்கு போதிய விலை கிடைக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி தேயிலை விவசாயம் பாதிப்பு

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் பனியால், பசுந்தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக பசுந்தேயிலை விவசாயம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தேயிலை விலை வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தேயிலை வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம், தற்போது பசுந்தேயிலைக்கு போதிய விலை கிடைக்கிறது. ஆனால், அவ்வப்போது மாறும் கால நிலையால், விவசாயம் பாதிக்கப்பட்டு மகசூல் குறைவது வழக்கமாக உள்ளது.


கடந்த சில மாதங்களாக நிலவும் பனிப்பொழிவால், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகா பகுதிகளில் உள்ள பல தேயிலை தோட்டங்கள் கருகியுள்ளன.நீலகிரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 368 ஏக்கர் பரப்பில், தேயிலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மகசூல் குறைந்துள்ளது.


"பனிக் காலத்தில் தேயிலை செடிகளை புற்கள் மற்றும் தாகைகளால் மூட வேண்டும்; பனியால் அதிகளவு பாதிக்கப்பட்ட தோட்டங்களில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 28 அங்குல அளவில் கவாத்து செய்து, முறையாக பராமரிக்க வேண்டும்; தழை மற்றும் மணிச் சத்தை 2:3 என்ற விகிதத்தில் தெளிக்க வேண்டும். செடிகள் நன்கு தழைத்து வளர்ந்த பின் டை அமோனியம் பாஸ்பேட் உரத்தை தெளிக்க வேண்டும்' என்பன போன்ற அறிவுரைகள், உபாசி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X