பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஆதார் தகவல்களை திருட முடியாது

புதுடில்லி: 'ஆதார் தகவல்களை யாரும் திருட முடியாது; அவற்றை பாதுகாக்கவும், பயன் படுத்தவும் பல்வேறு கடுமையான நடைமுறை கள் உள்ளன. ஆதார் தகவல்கள் அனைத்தும், மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளன' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

 ஆதார் தகவல்களை திருட முடியாது

ஒவ்வொருவருக்கும், அவரது முகம் மற்றும் கருவிழிகள், கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில், ஆதார் எண் வழங்கப்படுகிறது. சமையல் காஸ், ரேஷன் உட்பட, பல்வேறு அரசு மானியங்கள், சலுகை களை பெறுவதற்கு ஆதார் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
இந்நிலையில், 'ஆதார் விபரங்கள் திருடப்படு கின்றன. அவற்றை பராமரிக்கும் முறை பாதுகாப்பானதாக இல்லை. இதனால் தனிநபர் விபரங்கள் யாருக்கும் கிடைக்கும் அபாயம்

உள்ளது' என, பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து, ஆதார் எண் வழங்கும் பணியை மேற்கொள்ளும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அளித்துள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* கடந்த, இரண்டு ஆண்டுகளில், ஆதார் மூலம் நேரடியாக மானியங்களை அளிப்பதால், 49 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப் பட்டுள்ளது
* கடந்த, ஐந்து ஆண்டுகளில், 400 கோடி ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன

* உலகிலேயே மிகப் பெரியதும், மிகவும் பாதுகாப் பானதும், ஆதார் பதிவு விபரங்கள். இந்தத் தகவல் கள் திருடப்பட்டதாக, தவறாக பயன்படுத்தப் பட்ட தாக, கடந்த, ஐந்து ஆண்டுகளில் எந்தப் புகாரும் இல்லை

* இந்தத் தகவல்களை எவராலும் திருட முடியாது; தவறாகவும் பயன்படுத்த முடியாது

* ஒரு குறிப்பிட்ட வங்கியின் துணை நிறுவனத் தைச் சேர்ந்த ஒருவர், தன் ஆதார் விபரங்களை தவறாகப் பயன்படுத்த முயற்சித்தார். அது குறித்து, ஆதார் தகவல் பாதுகாப்பு முறைக்கு உடனே தகவல் கிடைத்து, அது தடுக்கப்பட்டது.

Advertisement

மற்றபடி, ஆதார் தகவல்கள் திருடப்பட்டதாக எந்த புகாரும் இல்லை

* ஆதார் தொடர்பான விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக உள்ளன. அதில் உள்ள விபரங் களை இணையதளத்தில் கிடைப்பதாக கூறப்படுவ தில் உண்மையில்லை.

வங்கி, மொபைல்போன் நிறுவனங்களுக்கு ஆதார் விபரங்கள் நேரடியாக கொடுக்கப்படுவ தில்லை. அந்த தகவல்களை பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன

* ஒருவரது அனுமதி இல்லாமல், அவருக்கு தெரியாமல், அவரது தகவல்களை, வங்கி களோ, மொபைல் போன் நிறுவனங்களோ அல்லது மற்ற அமைப்புகளோ பயன்படுத்த முடியாது

* ஒருவரது புகைப்படத்தை வைத்து, ஆதார் விபரங்களை பார்க்க முடியாது. கண்ணின் கருவிழி பதிவுக்கு, புகைப்படத்தை பயன்படுத்த முடியாது. அதேபோல, கைவிரல் ரேகைப் பதிவை, புகைப்படமாக வைத்து, பயன்படுத்த முடியாது

* பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள், ஆதார் விபரங்களை பயன்படுத்தினாலும், அதன் விபரங்களை திருடவோ, முடக்கவோ முடி யாது. ஆதார் விபரங்கள் அனைத்தும், மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்படுகின் றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
08-மார்-201701:34:51 IST Report Abuse

Manian69% இந்தியர்கள் லஞ்சம் கொடுப்பதாக இன்று தினமலரில் வந்த செய்திப்படி,லஞ்சம் மூலம் ஆதார் விவரங்ள் விற்பனைக்கு கிடைக்கும்.

Rate this:
Raajan - Mumbai,இந்தியா
07-மார்-201718:17:05 IST Report Abuse

Raajanஏன் இந்திய பாராளுமன்ற மற்றும் சடடமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் எண் அட்டை வைத்திருக்கிறார்களா. ஆதார் எண் இல்லாதவர்கள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாக போட்டியிட கூடாது என்று பிரதமரால் சொல்லமுடியுமா? ஆதார் அட்டை வங்கியில் இணைக்காத உறுப்பினர்கள் எந்த அலவன்சும் கொடுக்க இயலாது என்று சொல்ல முடியுமா?

Rate this:
Manian - Chennai,இந்தியா
08-மார்-201702:01:27 IST Report Abuse

Manian99% நல்ல(??)மக்கள் திருடர்களாக மாறாமல் இருக்கவே,வீடுகளில் கதவு பூட்டுக்கள் உள்ளன.திருட்டு அரசியல் வாதிகளை 69% லஞ்சம் வாஙு்கி தலைவனாகுங்கன்னு ஓட்டுப் போடுற ஆளுக, ஆதார் அட்டயை காட்டு, அப்பத்தான் ஓட்டுப் போடுவேன்னு சொன்னதாக இது வரை செய்தி இல்லையே . ...

Rate this:
Shahul Hameed - Jeddah,சவுதி அரேபியா
06-மார்-201721:21:48 IST Report Abuse

Shahul Hameedஏன் திருட வேண்டும்.....கேட்டால் மொத்த விலைக்கு நாங்களே வித்துட்டு போறோம்.....அப்படித்தானே கூறு போடுறோம்....

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X