அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்?

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்திய, நடிகர் கமலஹாசன்,
அரசியலில் குதிப்பது குறித்து விவாதித்துள்ளார். 'நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்குவதற் காக அல்ல; மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் அரசியல்' என, கமல் கூறியுள்ளார்.

 அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்?

முன்னாள் முதல்வர் ஜெ., மறைவை தொடர்ந்து, டுவிட்டரில், அதிரடி கருத்துகளை வெளியிட்டு வரும் கமல், மக்கள் பிரச்னைகள் குறித்தும் பேசி வருகிறார். இந்தச் சூழலில், கமல் ரசிகர் மன்ற புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதற்கு, கண்டனம் தெரிவித்த கமல், அவரை விடுவிக்கக்கோரி எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் அலுவலகத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் நேற்று கமல் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இந்த ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனையின் போது, கமல் பேசியதாக, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:
கச்சேரியில் பாட்டு சரியில்லை என, குறை கூறுவதால், மேடைக்கு வந்து, என்னை பாடச் சொல்லக்கூடாது.

நான் அறிக்கை விடுவது புதிதல்ல; 30 ஆண்டுக ளுக்கு முன்பிருந்தே, கருத்து கூறி வருகிறேன். இலங்கை பிரச்னைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தவன் நான்.இப்போது தான் நான் கூறு வது, அவர்கள் காதில் விழ தொடங்கி உள்ளது.

நான் அரசியலில் இல்லை என்றுயார் சொன்னது. நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்கும் அரசியல் அல்ல; மக்கள் பிரச்னை களை தீர்க்கும் அரசியல். யார் தவறு செய்தா லும், நாகரிகமான முறையில், அவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்யுங்கள்.

Advertisement

30 ஆண்டுகளாக எவ்வித இடையூறு இன்றி நடைபெற்ற ரசிகர் மன்ற பணி, இன்னும் சிறப்பாக, பெரிய அளவில் நடைபெற வேண்டும்; நான் துணை யிருப்பேன்.இவ்வாறு கமல் பேசியதாக நிர்வாகிகள் கூறினர்.

அவர்கள் கூறுகையில், 'ஜெ., மறைவின் போது, சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என, கமல் கூறினார். அது, எவ்வளவு உண்மை என, இப்போது தெரிந்திருக்கும். கமலின் இந்த அதிரடி நடவடிக்கை, அவர் அரசியலுக்கு வருவ தற்கான அஸ்திவாரம் தான். இது, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் அளிக்கும்' என்றனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (204)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bairava - madurai,இந்தியா
12-மார்-201707:48:28 IST Report Abuse

bairava வரவேற்போம் உண்மையான மண்ணுக்கும் மக்களுக்குமான சேவை தொடர வாழ்த்துக்கள்

Rate this:
Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா
06-மார்-201723:24:01 IST Report Abuse

Venkataraman Sekkarஇனியாவது எல்லோருக்கும் புரியும்படி பேச கமல் கற்றுக்கொள்ளவேண்டும்.

Rate this:
bairava - madurai,இந்தியா
12-மார்-201707:47:10 IST Report Abuse

bairava நீர் கமலை ஒரு நடிகனாக பார்த்தால் உனக்கு புரியாது அவரை மனிதனாக மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பவராக பாரும் ..புரியும் ...

Rate this:
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
06-மார்-201722:01:09 IST Report Abuse

மு. தணிகாசலம் அடிமுட்டாள்களை அரசியல்வாதி தம்முடன் சேர்த்துக்கொள்வர்.படிக்காத முட்டாள்களையும் படித்த முட்டாள்களையும் தம்முடன் சேர்த்துக்கொள்வர். ஏன் சிற்சில நேரங்களில் மேதாவிகளைக்கூட சேர்த்துக்கொள்கின்றனர். கமல், நீங்கள் அதிமேதாவியாக இருப்பதால் அரசியலில் ஒரு பயலும் உங்களை தன்னருகில் வைத்துக்கொள்ளமாட்டான். தமிழக அரசியல் நிலைமை தற்சமயம், "எழுதியவன் ஏட்டை கெடுத்தான் படித்தவன் பாட்டை கெடுத்தான்" எனும் அளவில் உள்ளது. சமயோசிதமாக செயல்பட வேண்டியது மிக மிக முக்கியம்.

Rate this:
மேலும் 200 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X