அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போராட்டங்களால் பழனிசாமி அரசு... திணறல்!:

தமிழகத்தில், மக்கள் அடுத்தடுத்து நடத்தி வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முடியாமல், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு திணறி வருகிறது.

போராட்டங்களால் பழனிசாமி அரசு... திணறல்!:


சசிகலா தரப்பினர் தரும் நெருக்கடிகளால், டெண்டர்கள் உட்பட, பல விஷயங்களில்,
தெளிவான முடிவு எடுக்க முடியாமல் அரசு தவிக்கிறது. இதற்கிடையே, ரேஷன் கடைக ளில் பொருட்கள் கிடைக்காத பிரச்னை, மாநிலம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள தால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் சரி வர கிடைக்கா மல் இருப்பதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்; கடைகள் முன் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, கொளத்துார் தொகுதியில், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், ரேஷன் கடைகளில் நேற்று ஆய்வு செய்தார்.

ஆர்ப்பாட்டம்


அப்போது, 'பொருட்கள் கிடைக்கவில்லை' என, பொதுமக்கள் அவரிடம் முறையிட்டனர். இதையடுத்து, ஒரு வாரத்திற்குள் ரேஷன் கடைகளின் பொருட்கள் வினியோகத்தை சீர்செய்யவில்லை என்றால், ரேஷன் கடைகள் முன், தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தும் என, எச்சரித்துள்ளார்.

அதேபோல, 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என, நெடுவாசலில், விவசாயிகள், 18 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 'தமிழக அரசு அனுமதி தராது' என, முதல்வர் பழனிசாமி உறுதி அளித்தும், மக்களிடம் அது எடுபடவில்லை. போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வர, அரசு தரப்பில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வற்றாத ஜீவநதி எனப்படும், நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் பாயும், தாமிர பரணியில் இருந்து, வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில், பொது நல அமைப்பினர், இளைஞர்கள், மாணவர்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்திலும், மாநில அரசு பாராமுகமாக உள்ளது.

அத்துடன், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், அவர்களை கைது செய்வதும் தொடர்கிறது. இந்த விஷயத்தில், பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு, முதல்வர் நிறுத்திக் கொள்வதால், மீனவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அது மட்டுமின்றி, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற சில நாட்களில், சத்தமின்றி, பெட்ரோல், டீசல் மீதான, 'வாட்' வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால், தமிழகத்தில், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதை கண்டித்து, போராட்டங்கள் நடத்த, அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

விரக்தி


இவை ஒருபுறம் இருக்க, அரசுத் துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான
டெண்டர்கள் விடுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. ஒவ்வொரு துறை மற்றும் பகுதியிலும், 'டெண்டர்களை தங்களுக்கு வேண்டியவர் களுக்கே தர வேண்டும்' என,

Advertisement

சசிகலாவின் உறவினர்களும், ஆதரவாளர்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால், எந்த முடிவையும் எடுக்க முடியாமல், தமிழக அரசு திணறி வருகிறது. அதே நேரத்தில், அரசு மீதான மக்களின் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது.

பழனிசாமி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இவ்வளவு பிரச்னை என்றால், இந்த ஆட்சியின் மீதமுள்ள நாட்களில், இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டுமோ என, மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதை சரிகட்டும் முயற்சியாக, மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முதல்வர் பழனிசாமி, இன்று துவக்குகிறார். முதல் நாளான இன்று, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி; நாளை சேலம், திருச்சி; நாளை மறுநாள் திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட் டங்களுக்கு சென்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளார்.

ரேஷன் கடைகளில் முறைகேடு?


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக, எஸ்.சி., - எஸ்.டி., அம்பேத்கர் பணியாளர் சங்க மாநில செயலர், ராஜமாணிக்கம் கூறியதாவது: கடந்த, 2016ல், முதல் மூன்று மாதங்களில், ரேஷன் கடைகளுக்கு தேவையான உளுந்து, துவரம் பருப்பு, பாமாயில், கொள்முதல் செய்யாமல், 3,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது. அதை, நாங்கள் தட்டிக்கேட்டும் நடவடிக்கை இல்லை. இந்த ஆண்டும், அதே முறைகேடு நடக்கிறது.

ரேஷன் கடைகளுக்கு, 60 சதவீத பொருட்கள் வினியோகமே நடக்கிறது. ஆனால், தட்டுப் பாடின்றி பொருட்கள் கிடைப்பதாக, அமைச்சர் கள் கூறுவது அப்பட்டமான பொய்.

உணவு பாதுகாப்பு சட்டப்படி, ரேஷன் கடை களில், அரிசிக்கு பதில், கோதுமை வினியோகிப் பது குறித்தும்,தெளிவான நடைமுறைஇல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
06-மார்-201720:08:15 IST Report Abuse

K.Sugavanamமத்திய அரசே இப்போது தமிழக அரசை முட்டுக்கொடுத்து தாங்குகிறாற் போல அல்லவா உள்ளது... GST க்கு இசைவு தெரிவித்ததால் அவர்கள் இழப்பை ஈடுகட்ட இந்த ரூட்டை சொல்லி கொடுத்துள்ளார்களோ என்னமோ.

Rate this:
SSTHUGLAK - DELTA,இந்தியா
06-மார்-201719:54:00 IST Report Abuse

SSTHUGLAKபெட்ரோல் டீசல் vllayil adhigamana yettram மாநில அரசு செயல்படுகிறது என்பதை காட்டுகிறது....... ஆமாம் எனக்கு புரியாமதான் கேக்குறேன் இந்த டாஸ்மாக் ஐட்டம்களை விலையேற்றம் எப்போது. அப்போதுதான் குடிமக்கள் போராடுவார்கள் அந்த போராட்டம் தான் பெரிய அளவில் இருக்கும்னு நினைக்குதா இல்லை அதனால் ஆட்சியே கவுந்துடும்னு நினைக்குதா. மக்களை மானம் கெட்டவர்களாக நினைக்கும் இந்த தன்மானமற்ற அரசு என்று தொலையும் என்றுதான் அனைவரும் விரும்புகிறார்கள் ஆனால் மக்கள் நினைக்கும் எல்லாம் நடந்தா விடப்போகிறது என்ற துணிச்சல் இந்த மாநிலத்திற்கும் அரசுக்கும் நல்லதல்ல

Rate this:
vnatarajan - chennai,இந்தியா
06-மார்-201715:57:52 IST Report Abuse

vnatarajanஎடப்பாடி பழனிசாமியின் மனதில் எவ்வளவோ குமுறல்கள் இருந்தும் அதை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கிறார் என்பதை அவர் முகத்திலிருந்து நாம் உணரமுடிகிறது. சசிகலாவின் அழுத்தம் தாங்காமல் ஒருநாள் அணிமாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அடுத்தது ஜெயக்குமார் முறை வந்தாலும் வரலாம். ஏனென்றால் ஜெஜெ உயிரோடு இருக்கும்பொழுதே இவருடைய தொண்டர்கள் ஜெயகுமாரை அடுத்த CM என்று பிட் நோடீஸ் அடித்தார்கள் அதனாலேயே இவரை ஜெஜெ அசெம்ப்ளி தலைவர் பதவியிலிருந்து MLA கூட்டத்தில் உட்காரவைத்தார். அடுத்த சீரியலை பொறுத்திருந்து பாப்போம் கதை, வசனம், இயக்கம் BY சசிகலா அம்மையார். உதவி இயக்குனர் இளவரசி அம்மையார் செயல் இயக்குனர் தினகரன்

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X