பெண்கள் என்றாலே கெத்து தான் - ஜனனி ஜாலி| Dinamalar

பெண்கள் என்றாலே 'கெத்து' தான் - ஜனனி ஜாலி

Added : மார் 09, 2017
பெண்கள் என்றாலே 'கெத்து' தான் - ஜனனி ஜாலி

ஆடலுடன் பாடலை கேட்டால் தான் ரசிப்பவருக்கு சுகம். ஆரம்பத்தில் பாடல் படிக்கவே வெறுப்பு என இருந்த இவருக்கு, இப்போது பாடல் பாடுவதே விருப்பமாக மாறி போனதாம். 'கிருமி' படத்தில் 'நாணல் பூவாய்...' அறிமுகமாகியவர், இன்று எல்லோருடைய மனதிலும் இளவேனில் பூவாய் இடம் பிடித்துள்ள இளம் பாடகி ஜனனி நம்முடன் பேசியதில்* ஜனனி உங்களை கொஞ்சம் பாடுங்களேன்... சாரி, சொல்லுங்களேன்?பெயர் ஜனனி. சொந்த ஊர் சென்னை. படிப்பு மீடியா அண்ட் கம்யூனிகேஷன்.* பாட்டில் ஆர்வம் எப்படி...?எனக்கு பாட்டு பாடுறதுல பெரிதாக ஆர்வம் கிடையாது. ஸ்கூல்ல படிக்கும் போது வீட்ல சேர்த்து விட்டாங்க. அப்புறம், கர்நாடகா இசை கத்துக்கிட்டேன். அப்டியே, பாட... பாட... பாடுறது புடிச்சுப்போச்சு.* ஒங்க முதல் பாட்டு?காலேஜ்ல தாங்க. கல்சுரல்ஸ் புரோகிராம்ல பாட ஆரம்பிச்சேன். இப்போ சினிமாவுல பாடிட்டு இருக்கேன்.* வாய்ப்பு எப்படி?நிறைய பாட்டு போட்டிகள்ல கலந்து கிட்டேன். அப்போ, பாடுறதை பார்த்துட்டு 'கிருமி' படத்துல பாட கூப்பிட்டாங்க.* என்னென்ன பாடல்கள் பாடுனீங்க?'கிருமி'- நாணல் பூவாய், 'அதிபர்'- அவளா அவளா, 'ஆண்டவன் கட்டளை'- கார்மேக குழலி, காதல் கண் கட்டுதே- நீ போகும் இடமெல்லாம், நீ இல்லா துாரம், 'தெறி, கெத்து' படங்கள்ல பின்னணியில் ஹம்மிங் கோரஸ், பண்ணிருக்கேன்.* யாரோட இசையில் பாட ஆசை?இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்... ம்... அப்புறம் லிஸ்ட் இன்னும் நீண்டுட்டே போகுதே...* ஜனனிக்கு பிடித்தது?சுற்றுலா, கீபோர்டு வாசிப்பதுன்னா எப்போ கேட்டாலும் டபுள் ஓ.கே.,தாம்பா.* உங்க பாட்டை பிரண்ட்ஸ்ங்கலாம் கலாய்ப்பாங்களாமே...?சத்தியமா யாரும் என்னைய கலாய்க்கல. நல்ல பாடுறேன்னு சொன்னாங்க. நீ நல்லா வருவேன்னும் ஆசிர்வாதம் பண்ணாங்க.* மகளிர் தினம் பற்றி?மகளிர் தினத்தை ஆண்கள் தான் விழாவாக கொண்டாடணும். பெண்கள் என்றாலே சிறப்பு தானே. அப்போ, பெண்களுக்கு ஒரு தினம் என்றால் இன்னும் சிறப்பு தானே. பெண்கள் என்றாலே கெத்து தாங்க. நீங்களும் மறக்காம கொண்டாடுங்கஜி, ஓ.கே.,தானே!------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X