உ.பி.,யில் சாதித்தது பா.ஜ.,| Dinamalar

உ.பி.,யில் சாதித்தது பா.ஜ.,

Updated : மார் 11, 2017 | Added : மார் 11, 2017 | கருத்துகள் (204)
Advertisement
உ.பி.,   பா.ஜ., முன்னிலை, ElectionResults

லக்னோ: உ.பி.,யில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இங்கு 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி நடைபெற்றது.
பா.ஜ.,324 தொகுதிகளிலும், சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி 54 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 20 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

வாசகர் கருத்து (204)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-மார்-201701:18:31 IST Report Abuse
குணா தமிழ் நாட்டுல 100 பேருக்கு மேல் பிஜேபி குறித்து கருத்து தெரிவித்தது மிகப்பெரிய சாதனை. இதைகேள்விப்பட்டால இடைத்தேர்தலில் தமிழ் மேடம் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-மார்-201723:55:38 IST Report Abuse
மலரின் மகள் மிக்க மகிழ்ச்சி.வெறும் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் ஜாதீய ஓட்டுகள் என்று அதை மட்டுமே குறிவைத்து அரசியல் செய்த அனைவரும் மண்ணை கவ்வி விட்டார்கள். பெண்களுக்கு முத்தலாக் பிடிக்கவே இல்லை.முஸ்லீம் பெண்கள் தங்களை இந்திய பெண்களாகத்தான் கருதுகிறார்கள். தவிர அரேபிய முஸ்லிம்களாக ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் அந்த ஆண்கள் அவர்களை அரேபிய முஸ்லிம்கள் போல கருதி பெண்களை ஒரு காட்சிப் பொருளாக தங்களுக்கு கட்டுப் பட்டவர்களாக நினைத்து கொடுமை செய்கிறார்கள். பெண்களின் பிரச்சினைக்கு பி ஜே பி குரல் கொடுத்தது. அது எதிரொலித்தது உ பி இல் என்பது கண்கூடு. மத சாயத்தை பூசி, மோடி என்பவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அவரால் முஸ்லிம்கள் பாதிக்கப் படுவார்கள், அவர்களின் மத நம்பிக்கைக்கு பங்கம் வரும் என்று போலி வேடதாரிகள் பேசிய பேச்சுக்களை மோடி கண்டு கொள்ளவில்லை. இன்றைய மக்களின் மனநிலை பெண்களின் உணர்வுகளை உணர்ந்து உங்களுக்கு சரி நிகர் சமமாக வாழ வகை செய்ய நான் ஆசை படுகிறேன். முஸ்லீம் பெண்கள் எனது சகோதரிகள் என்பதை மட்டுமே ஆணித்தரமாக சொல்லி வந்தார். அதற்காக அவர் யாருக்காகவும் காங்கிரஸ் போல் அஞ்சாமல் முஸ்லீம் பெண்களின் வாழ்வு முறை அவர்ளின் மதத்தால் பாதிக்கப் பட்டத்தை எதிரித்தார் என்பது மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு நல்லதை செய்தார் என்பது இந்தியா முழுதும் நன்கு தெரிந்தது தான். ஆண்கள் மட்டுமே தொழுகை செய்யலாம் பெண்கள் தொழுகை செய்ய அங்கு இடமில்லை என்று இடையில் அவர்களாகவே ஒரு வசதியை ஏற்படுத்தி பெண்களை வஞ்சித்தார்கள். எ தாய் நீதிமன்றம் மூலமாகவும் ஆட்சி அதிகாரம் மூலமாகவும் தர்த்தெறிந்து முஸ்லீம் பெண்களுக்கு மஹாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் உரிமையை பெற்று தந்தார் என்பது ஒன்று போதும். தனிப் பட்ட முறையில் நடந்த மாட்டுக்கறி சம்பவத்தை இந்து மதத்திற்கு எதிராக மோடிக்கு எதிராக கிளப்பி விட்டவர்கள் பின்னாளில் உண்மை தெரிந்த பின்னர் அதை மெதுவாக அமுக்க பார்த்தனர். ஆனால் மக்கள் தங்களுக்கு வேண்டிய சரியான செய்திகள் எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் அதை கண்டுபிடித்து மனதில் நிறுத்தி விடுவார்கள். அது உ பி இல் எதிரொலித்தது. சிறுபான்மை என்று சொல்லி பெரும்பான்மையினரை மட்டம்தட்டியது நிறைய பேருக்கு பிடிக்க வில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எங்கு சிறுபான்மையினரின் ஓட்டுகள் கிடைக்காமல் போகுமே என்று நமது கிழவனார் போல அங்குள்ளோரும் பழைய பஞ்சாங்கத்தையே நம்பிக் கொண்டு மரண யோகம் பெற்றனரா? போலியானார்கள் வேண்டாம் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள் ஒட்டு சீட்டு முலமாக. ஆகா நடந்து முடிந்த தேர்தல் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கிறது அதை கவனியுங்கள் உங்களுக்கு ஆதரவு என்று சொல்லி இருக்கிறது. பஞ்சாபில் நான் தொடர்ந்து சொன்னதை போல காங்கிரசின் அம்ரிந்தர் சிங் வெற்றி பெற்றிருக்கிறார். எனது தோழன் அமிர்தசரஸில் அம்ரிந்தர் சிங்குக்காக அவர்கள் அனாலிசிஸ் செய்து கொடுத்த முடிவுகள் பிரதி பலிக்கின்றன அப்படியே. நான் இயதற்கு முன்பு எழுதியது போல அடுத்தமுறை பொற்கோவிலுக்கு செல்லும் போதும், பாபா தீப் சிங் குருத்வாரா செல்லும்போதும் முதல்வருடன் ஒரு செல்பி எடுத்து எனது FB இல்பதிவிடுவேன். மற்றபடி சிறு குறு மாநிலங்களில் தாமரைக்கு தோல்வி இல்லை. நமது எதிர்கால பிரச்சினை புதிய கோணத்தில் செல்கிறது. கம்யூனிச, காங்கிரஸ் காட்சிகள் காணாமல் சென்றுவிடுகின்ற பட்சத்தில், ஒரே ஒரு தேசிய கட்சி மட்டுமே இருக்கிறது. பி ஜே பி யுடன் மேலும் ஒரு தேசிய கட்சி தேவை தேச நலனுக்கு. அதை பாரத மாதா உருவாக்குவாள். எனது கருத்துக்கு மூணு ஸ்டார் தரும் அனைத்து வாசக பெருமக்களுக்கும் பி ஜே பி இன் இந்த தேர்தல் வெற்றியை கடை தேங்காயோ வழி பிள்ளையாரோ என்று காணிக்கை ஆக்குகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
jiyo - tamilnadu,இந்தியா
11-மார்-201723:41:30 IST Report Abuse
jiyo இது முழுக்க முழுக்க பாஜகவின் சகுனி புத்திக்கு கிடைத்த வெற்றி. உபி-யில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் உட்பட பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களையும் தங்கள் பக்கம் இழுத்தது சமாஜ்வாடி கட்சியில் தந்தை மகன் சண்டையை உண்டு பண்ணி கட்சியினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி அதிருப்தியை உண்டாக்கியது ஏறக்குறைய போட்டியே இல்லாமல் இப்படி செய்தால் கழுதை கூட நின்றிருந்தாலும் வெற்றி தான் பெற்றிருக்கும். இதை ஒரு வெற்றி என்று கட்சியினரும், ஊடகங்களும் கொண்டாடுவது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. இது பிஜேபிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றால் மற்ற மூன்று மாநிலங்களிலும் இதை போன்று எதிர்கட்சிகளை தெறிக்க விட்டிருக்கும் அல்லவா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X