இயற்கை விவசாயமே எனது காதலி- நடிகர் பரணி| Dinamalar

இயற்கை விவசாயமே எனது காதலி- நடிகர் பரணி

Added : மார் 12, 2017 | கருத்துகள் (3)
இயற்கை விவசாயமே எனது காதலி- நடிகர் பரணி

குறுகிய காலத்தில் நகைச்சுவை, குணச்சித்திர வேடம், வில்லன், கதாநாயகன் என அடுத்தடுத்து நடித்து கொண்டிருப்பது ஒரு சிலர்தான். அந்த வரிசையில் 'கல்லுாரி'யில் துவங்கி, நாடோடிகள், துாங்காநகரம் என தொடர்ந்து சினிமாவில் கால்பதித்து தற்போது ஹீரோவாக உயர்ந்து நிற்பவர் நடிகர் பரணி. அவரது பேட்டி:* சொந்த ஊர், சினிமா வாய்ப்பு எப்படி?சொந்தஊர் பரமக்குடி. மதுரையில் தான் படித்தது வளர்ந்தது. பிளஸ் 2 முடித்தவுடன் கல்லுாரி முதலாம் ஆண்டிலேயே, 'கல்லுாரி' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பின், நாடோடிகள், விலை, துாங்காநகரம். தற்போது கன்னக்கோல், பொட்டு படங்கள் நடிக்கிறேன். இதில் 'கன்னக்கோல்' இம்மாதம் வெளிவர உள்ளது. 'பொட்டு' பேய் படம்.* எந்த மாதிரி கேரக்டர் மீது ஆசை உள்ளது?இப்படித்தான் நடிக்கணும்னு எந்த ஆசையுமில்லை. பரணி, இந்த கேரக்டரை நல்லா பண்ணுவார் என நம்பி கொடுக்கும் எந்த கேரக்டர் ஆனாலும் செய்வேன். அது, 'கோவணம்' கட்டியோ, 'கோட், ஷூட் போட்டோ' எதுவானாலும் தயங்க மாட்டேன்.* உங்களுக்கு பிடித்த நடிகை ரேவதி. தற்போது என்னுடன் நடித்த ஹீரோயின் காருண்யா நல்ல 'டைப்'.* இளைஞர்கள் சினிமாவிற்கு வருவது குறித்து...?நல்ல விஷயம்... தாராளமாக வரட்டும். தமிழ்ப் படங்களுக்கு இங்கு மட்டுமின்றி, 13 வெளிநாடுகளில் நல்ல வியாபார வாய்ப்பு உள்ளது. டூயட் பாடி, சண்டை போட்டால் தான் ஹீரோ என்ற விஷயம் தற்போது கிடையாது. ரசிகர்களின் பார்வை மாறிவிட்டது. திறமையும், விடா முயற்சியும் உள்ள இளைஞர்கள் சினிமா துறையை தேர்வுசெய்யலாம்.* அரசியல் ஆசை உண்டா, வருவீங்களா?அரசியல் நிகழ்வுகளை 'வாட்ச்' பண்ணிட்டு இருக்கேன். வெளிப் படையாக பேசமுடியாது. மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் ஆட்சி வரணும்ங்க. கண்டிப்பா நான் அரசியலுக்கு வரமாட்டேம்பா.* இளைஞர்களுக்கு என்ன சொல்றீங்க...?ஜல்லிக்கட்டு மாதிரி, அழிந்துவரும் இயற்கை விவசாயத்தையும் காப்பாற்ற ஒரு புரட்சி பண்ணணும். மதுக்கடைகளை மூடணும். அதற்கு பதிலாக, கள், பதநீர் விற்கலாம். கியூபா முன்னாள் அதிபர் பெடல் காஸ்ட்ரோ, 'மூட்டுவலி இல்லாமல் வாழ்ந்ததற்கு நம்மூர் முருங்கைக்காய் தான் காரணம்' என்கிறார். ஆனால் நாம், வெளிநாட்டு குளிர்பானங்கள், உணவு பொருளை உண்டு ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கிறோம். சீமைக் கருவேல மரத்தை முழுமையாக அழிக்க வேண்டும்.பேச: 90036 09975.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X