பொது செய்தி

தமிழ்நாடு

மொய் எழுத புதிய சாப்ட்வேர் சிக்கம்பட்டி இளைஞர் சாதனை

Added : மார் 13, 2017 | கருத்துகள் (20)
Share
Advertisement
 மொய் எழுத புதிய சாப்ட்வேர்  சிக்கம்பட்டி இளைஞர் சாதனை

செக்கானுாரணி:செக்கானுாரணியில் பட்டதாரி இளைஞர் திருமண விழாக்களில் மொய் எழுத புதிய சாப்ட்வேரை உருவாக்கி சாதித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் திருமணம், காதணி விழா போன்ற விழாக்கள் அதிகம். வார விடுமுறை நாட்களில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் ஏதாவது ஒரு விழா நடக்கும். இந்த விழாக்களில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள் மொய் எழுதுவது வழக்கம். ஆரம்பத்தில் வெறும் சம்பிரதாயமாக இருந்த மொய் எழுதும் கலாச்சாரம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

செக்கானுாரணி அருகே சிக்கம்பட்டி பி.பி.ஏ., பட்டதாரி பிரபு,33, மொய் எழுதவும், அவற்றை சரி பார்க்கவும் புதிய சாப்ட்வேரை உருவாக்கியுள்ளார். லேப்-டாப், பிரிண்டரில் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி மொய் எழுதுபவர்களின் பெயர் விபரம், விழா நடத்துபவரின் விபரம், தேதி, திருமண மண்டபம், தொகை ஆகியவற்றை ஊர் வாரியாக பிரித்து கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்கின்றனர்.

உடனே மொய் எழுதிய விபரங்கள் அடங்கிய ரசீது வழங்கப்படுகிறது. விழா முடிந்த சில நிமிடங்களில் கலந்து கொண்டவர்கள், மொத்த தொகை குறித்து அறிந்து கொள்ள முடியும். இது விழா நடத்துபவர், மொய் எழுதுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

பிரபு கூறியதாவது: செக்கானுாரணியில் மொபைல் கடை நடத்துகிறேன். எனது குடும்ப விழாவின் போது மொய் எழுதவும், ஒவ்வொரு முறையும் மொய் எழுதியுள்ளவர்களின் லிஸ்ட்டை சரி பார்க்கவும் மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் அனைவருக்கும் பயன்படும் வகையில் புதிய சாப்ட்வேரை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.

3 மாதங்களாக உழைத்து இந்த சாப்ட்வேரை உருவாக்கினேன். இதன் சோதனை முயற்சியை யாருடைய விழாவில் நடத்துவது. மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமா? என்ற தயக்கம் இருந்தது. இந்நிலையில் எனது நண்பர் மதிவீரசோழனிடம் தெரிவித்த போது பாராட்டி, அவரது குழந்தைகளின் காதணி விழாவில் வாய்ப்பளித்தார்.முதல் முயற்சியே வெற்றி பெற்றது. இந்த விபரங்களை டிவிடி, மெமரி கார்டில் பதிவு செய்து தருகிறேன். மெமரி கார்டை மொபைல் போனில் பொருத்தி எளிதாக விபரங்களை சாரி பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
15-மார்-201713:36:50 IST Report Abuse
Ramshanmugam Iyappan வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
14-மார்-201714:22:12 IST Report Abuse
Ramu நல்ல கண்டுபிடிப்பு. இங்கு உள்ள பதிவுகளில் சில மொய் பழக்கத்தை எதிர்ப்பதாக உள்ளது. ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று அன்பளிப்பாக ஒரு பொருளோ அல்லது பணமோ கொடுப்பதுதான் நாகரீகம். மேலை நாடுகளில் கூட இது உள்ளது..எப்படியென்றால், எடுத்துக்காட்டாக நண்பர்கள் ஒன்றுகூடி புது ஜோடி தேனிலவு செல்வதற்கு உண்டான அனைத்து செலவு, ஏற்பாடுகளை தங்கள் பொறுப்பில் செய்வார்கள்..அல்லது புது ஜோடியின் வீட்டுக்கு அவர்களுக்கு தேவையான ஒரு வசதியை (அ.து, வீட்டை புதுப்பித்தல், வீட்டு தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவை) ஏற்படுத்தி தருவார்கள். நம் நாட்டில் அதுவே, கொஞ்சம் வித்தியாசமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த சாப்டுவேர் நிச்சயம், நிகழ்ச்சி நடத்துபவர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்போர் இவர்களின் நேரத்தை மிகவும் மிச்சப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மாமியார் வீட்டில் இருந்து எல்லாவற்றையும் எதிர்பார்ப்பதுதான் கேவலமான விஷயம்.... இது எப்போ மாறுமோ?
Rate this:
21-மார்-201711:58:26 IST Report Abuse
M.பிரபுநன்றி நண்பா......
Rate this:
Cancel
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
13-மார்-201716:46:50 IST Report Abuse
Ram நம்மை பத்திரிக்கை வைத்து அழைப்பவர்களில் சிலர் பணம் மற்றும் பரிசுப்பொருள்களை தவிர்க்கவும் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். அவர்களுக்கு பாராட்டுக்கள், நாம் கூட முயற்சி செய்வோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X