இம்பால்: எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சிகள் ஆதரவுடன், மணிப்பூரிலும், பா.ஜ., ஆட்சி அமைக்கிறது.
ஆட்சி அமைக்க, கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, பீரேன் சிங் தலைமையிலான, பா.ஜ., அரசு இன்று பதவியேற்றது.
ஐந்து மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில், மணிப்பூரில் உள்ள,60 சட்டசபை தொகுதிகளில்,
காங்., 28 தொகுதிகளிலும், பா.ஜ., 21 தொகுதி களிலும் வென்றன.
தனிப் பெரும்பான் மைக்கு தேவையான, 31 இடங் களை, இரு கட்சி களும் பெறவில்லை. மீதமுள்ள, 11 தொகுதிகளில் வென்ற, மற்ற கட்சிகளின் ஆதரவை பெற, பா.ஜ., முயற்சித் தது.
அதன்படி, தலா, நான்கு தொகுதி களில் வென்ற, பா.ஜ., தலைமையிலான,
தே.ஜ., கூட்டணியில் உள்ள, நாகா மக்கள் முன்னணி மற்றும் மறைந்த முன்னாள்
லோக்சபா சபாநாயகர், பி.ஏ.சங்மாவின் தேசிய மக்கள் கட்சி யின் ஆதரவு, பா.ஜ.,வுக்கு கிடைத்தது.
இதுதவிர, தலா ஒரு தொகுதிகளில் வென்ற, லோக் ஜன் சக்தி, திரிணமுல் காங்., மற்றும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் ஆதரவும், பா.ஜ.,வுக்கு கிடைத்தது.
இதையடுத்து, ஆட்சி அமைக்க, கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவிடம், பா.ஜ., உரிமை கோரியது.
'அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்றஅடிப்படை யில், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்' என, காங்கிரசும், கவர்னரை சந்தித்து கடிதம்கொடுத்தது.
கவர்னரை சந்தித்த போது, பா.ஜ.,வின், 21 எம்.எல்.ஏ.,க்கள்
மற்றும் தேசிய மக்கள் கட்சி யின், நான்கு எம்.எல்.ஏ.,க்கள், லோக் ஜன்
சக்தி, திரிண முல் காங்., மற்றும் காங்., எம்.எல்.ஏ., வையும், பா.ஜ.,
தலைவர்கள் அழைத்துச் சென்றனர்.இந்நிலையில், நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த, நான்கு எம்.எல்.ஏ.,க் கள், கவர்னர் ஹெப்துல்லாவை சந்தித்து, பா.ஜ.,வுக்கு ஆதரவளிப்பதை உறுதி செய்தனர்.
அதை தொடர்ந்து, ஆட்சி அமைக்கும்படி, பா.ஜ.,வுக்கு, கவர்னர் நஜ்மா அழைப்பு விடுத்தார். அதன்படி, மணிப்பூரில், முதன் முறை யாக, பா.ஜ., ஆட்சி அமைத்தது.
முதல்வர் பீரேன் சிங் தலைமையிலான அரசு, இன்று பதவி யேற்றது. முதல்வரை தொடர்ந்து துணை முதல்வராக என்.பி.பி., கட்சியின் ஜாய்குமார் பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (3)
Reply
Reply
Reply