ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.
அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
எழுத்துத் தேர்வுக்கு பின், 'நேர்முகத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பணி ஒதுக்கப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, பணி ஒதுக்கீடு பட்டியல் வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வு முடிவை அறிவிக்க, தேர்வுத் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தேர்வர்களின் மதிப்பெண்படி, நேர்முகத் தேர்வுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது. - நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE