பா.ஜ.,வுடன் பன்னீர் அணி கூட்டணியா? | பா.ஜ.,வுடன் பன்னீர் அணி கூட்டணியா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுடன் பன்னீர் அணி கூட்டணியா?

Added : மார் 16, 2017 | கருத்துகள் (188)
Advertisement
பா.ஜ., பன்னீர் அணி, கூட்டணி,

‛பா.ஜ.,வுடனான கூட்டணி குறித்து விரைவில் கட்சித் தலைமை முடிவு செய்யும்' என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தலைமை தேர்தல் கமிஷனருடனான சந்திப்புக்கு பின், பன்னீர்செல்வம் கூறியதாவது: சசிகலா இடைக்கால பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டார்; தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியின் சட்டவிதிகள் மிகவும் தெளிவாக உள்ளன. அதன்படி, கட்சியின் பொது செயலருக்கு உள்ள அதிகாரங்களை சசிகலா பயன் படுத்த முடியாது. புதிய நிர்வாகிகளை சேர்க்கவோ, ஏற்கனவே உள்ளவர்களை நீக்கவோ, அவருக்கு அதிகாரம் கிடையாது.

அதேபோல் பொதுச் செயலர் பதவி காலியாக இருந்தால், புதியவரை தேர்ந்தெடுக்கும் வரை, கட்சியின் அடுத்த மூத்த தலைவரே, கட்சியை வழிநடத்த வேண்டும். அதன்படி, அவைத் தலைவர் தான் கட்சியை வழிநடத்த வேண்டும். இதையே தலைமை தேர்தல் கமிஷனரிடம் வலியுறுத்தினோம். அதன்படி, ஆர்.கே.நகர் சட்டசபை இடை தேர்த லில், கட்சி வேட்பாளரை அறிவிக்கவும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் எங்கள் தரப்புக்கே அதிகாரம் உள்ளது என்பதை திட்ட வட்டமாக, தகுந்த ஆதாரங்களுடன் கூறி யுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ''எங்கள் கட்சித் தலைமை அதை முடிவு செய்யும். விரைவில் நல்ல செய்தி வரும்,'' என, பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

- நமது சிறப்பு நிருபர் -

வாசகர் கருத்து (188)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
16-மார்-201722:38:20 IST Report Abuse
Sridhar Rengarajan ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணி அமைவது தமிழ்நாட்டுக்கு நல்லது. மைனாரிட்டி வாக்குகள் எந்த காலத்திலும் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் விழாது. குறிப்பாக 95 சதவிகித இஸ்லாமியர்கள் வாக்குகள் எப்போதும் திமுகவுக்கும் காங்கிரசுக்கும்தான் போகும். அதனால் மைனாரிட்டி வாக்குகளை பற்றி கவலைப்படாமல் ஓ.பி.எஸ் தாராளமாக பாஜகவுடன் ஒரு நிரந்தர கூட்டணி ஏற்படுத்திக்கொள்ளலாம். குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், ஊழல் கூட்டணிக்கு எதிராக அதிமுக பாஜக கூட்டணி என்று நேர்மையாக கெளரவமாக கம்பிரமாக பிரச்சாரம் செய்யலாம்.
Rate this:
Share this comment
Thamizhan - Pondy,இந்தியா
17-மார்-201706:03:17 IST Report Abuse
Thamizhanஜெயாவால் கடைசி வரை நிராகரிக்கப்படட கட்சி BJP. மூச்சுக்கு முந்நூறு தடவை அம்மா என்று சொல்லும் பன்னீர், உண்மையிலேயே அவருக்கு விசுவாசி என்றால் இந்த துரோகத்தை செய்யக்கூடாது . அவரின் ஆன்மா இதை மன்னிக்காது . தவிரவும் பிஜேபி வரவேண்டும் என்று நினைத்தால் தமிழகத்துக்கு என்ன செய்தார்கள் என்று கூறி மக்களிடம் வோட்டு வாங்கி வரவேண்டும் , இப்படி அடுத்தவர் முதுகில் ஏறி வருவது அழகல்ல ....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-மார்-201721:19:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாஜகவுடன் பன்னீர் அணி கூட்டணியா, இல்லை பன்னீர் அணியுடன் பாஜக கூட்டணியா?
Rate this:
Share this comment
Cancel
handsome - Virginia,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)
16-மார்-201716:23:34 IST Report Abuse
handsome இந்து முஸ்லீம் உறவு என்பது தொன்றுதொட்டு இருக்கும் உறவுதான் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை தமிழகத்தில். அனைவரும் தொப்புள்கொடி உறவுகளாவே பார்க்கிறார்கள், இனியும் அது தொடரும்.
Rate this:
Share this comment
Thamizhan - Pondy,இந்தியா
16-மார்-201718:03:07 IST Report Abuse
Thamizhanமிக சரியாகா சொன்னீர்கள் .............
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
16-மார்-201723:00:39 IST Report Abuse
Agni Shivaதொப்புள் கோடி உறவுகள் இருக்கிறது என்று சொல்லுபவர்கள் ஒரு முறை 'நான் தன்மானமுள்ள ஹிந்து என்றும் எனது மதத்தை விட்டு கொடுக்க மாட்டேன் என்று என்று சொல்லி பாருங்கள், அப்போது தெரியும் இந்த தொப்புள் கோடி உறவும், கழுத்தறுத்து உறவும். மதத்திற்காக சொந்த தாயையே வெட்டி கொள்ள அனுமதிக்கும் மூர்க்கம் அடுத்தவனின் தொப்புளை விட்டு வைக்கிறதாம்....
Rate this:
Share this comment
Thamizhan - Pondy,இந்தியா
17-மார்-201707:04:22 IST Report Abuse
Thamizhanயோவ் டர்பன் .......என்ன ஆச்சி உனக்கு ? எத்தனை வாட்டியா சொல்லறது ? அதெல்லாம் இங்க இல்லையா . நல்லா இருக்கற மக்கள் மனசுல நஞ்ச கலக்காதையா . பேசி பேசியே கலவரத்தை உண்டு பண்ணிடுவே போலிருக்கே . உன் வீணா போன "போபியா " வ மறந்துட்டு ஏதாவது மாத்திரையை போட்டுக்கிட்டு தூங்குய்யா . நீ இங்க வந்து என்ன சொல்லணுமோ சொல்லுய்யா, உனக்கு யாரும் ஒன்னும் செய்ய மாட்டாங்க . இங்க மனித நேயம் , தொப்புள் கொடி உறவு எல்லாமே இருக்குது . அது தான்யா தமிழன் பண்பாடு . "எம்மதமும் சம்மதம் ", "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ", "காக்கை குருவி எங்கள் ஜாதி" , "யாததும் ஊரே யாவரும் கேளிர் " ன்னு உலகுக்கு வாழ்ந்து காட்றவன்யா தமிழன். இதையெல்லாம் மறந்திட்டியா ? . பயத்தை விடு, மத வாதம் பேசாம நிம்மதியா இரு , மத்தவங்களையும் இருக்கவுடு ....
Rate this:
Share this comment
Thamizhan - Pondy,இந்தியா
17-மார்-201708:11:26 IST Report Abuse
Thamizhan"எல்லோரும் இந் நாட்டு மக்கள் " ங்கற ஒற்றுமை உணர்வும் , சமத்துவமும், சகோதரத்துவமும் தான்யா தமிழன் பண்பாடு . உன் மதம் உனக்கு எவ்வளவு முக்கியமோ , அதே மாதிரி தான் அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க மதம் முக்கியம் . தமிழகத்துல காலையில நாங்க கோயில்ல போடுற சாமி பாட்டு , மசூதியில் ஒதர பாட்டு, தேவாலயத்துல போடற பாட்டு எல்லாத்தையும் கேட்டு தான்யா கண்ணு முழிக்கறோம் . எல்லாத்தையுமே மதிக்கறோம் , ரசிக்கறோம் , பகிர்ந்துக்கறோம். இங்க கை குழந்தைங்க பயந்து அழுதுதுன்னா மசூதிக்கு தான்யா தூக்கிகிட்டு ஓடுவோம் ஏன்னா அங்க ஒதுனா நல்லா ஆயிடும். குழந்தைக்கு கை , கால்ல பிரச்சினைன்னா , வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு ஓடுவோம் , வெள்ளியில கை , கால் செஞ்சி காணிக்கை கொடுப்போம் . சர்ச்சை நாங்க கோயில்லன்னு தான்யா சொல்லுவோம் .நல்லதா நினை , நல்லதா செய் , நல்லதே நடக்கும் , வாழு, வாழ விடு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X